Pages

Thursday, August 6, 2009

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர் தந்த சங்கடம்


எனது பெயர் ஜெய் ,,.

இரண்டு வாரங்களுக்கு முன்பு எனது நண்பர் அறைக்கு சென்று இருந்தேன் . என் நண்பன் கிருஷ்ணா எனக்கு சில வேலை இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் இன்னும் சிறிது நேரத்தில் நண்பர்கள் வந்துவிடுவார்கள் அவர்களிடம் பேசிக்கொண்டு இரு என்று சொல்லி சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது நண்பர் எழுமலை வந்தார்.

சிறிது நேரம் கழித்து ,எழுமலை உடற்பயிற்சி செய்ய புல்அப்ஸ் வாங்க சரவணா ஸ்டோர்ஸ் என்னை கூப்பிட்டார் . நானும் அவருடன் சென்றேன் . புல் அப்ஸ் மற்றும் சில பொருட்களை வாங்கி கூடையில் போட்டு பணம் செலுத்தும் இடம் அருகே சென்றேன் அப்போது என் நண்பர் எனக்கு தெரியாமல் ஐந்நூறு ரூபாய் பணத்தை கூடையில் போட்டுவிட்டு வேறு பொருட்கள் வாங்க சென்று விட்டார் .

அப்போது கூடையில் பணத்தை பார்த்த பில் போடுபவர் உங்களுடையதா என கேட்டார் அப்போது நான் தெரியவில்லை என் நண்பர் பணத்தை போட்டிருக்கலாம் எனவே அவரிடம் கேட்டு விட்டு வருகிறேன் என்று சொல்லி அவரை அழைத்து வந்தேன் , அவர் கூடையில் இருந்தது என் பணம்தான் என கூறினார் .


அப்போதுதான் ஆரம்பித்தது அவர்களின் வில்லத்தனம் . பணம் செலுத்தும் இடத்திலிருந்த ஒருவன் என் நண்பரிடம் எவ்வளவு பணம் வைத்தீர்கள் என்று கேட்டான் ஐந்நூறு என்றார் அவர். இல்லை இரண்டு ஐந்நூறு இருந்தது என்றான் . என் நண்பர் பர்சை பார்த்துவிட்டு இல்லை ஒன்றுதான் என்றார் , அப்போது ஏன் பர்சை பார்க்காமல் சொல்லவேண்டியதுதானே என்றான். நானும் கூடையில் ஒரு ஐந்நூறு தானே இருந்தது என்றேன் அதை அவர்கள் காதில் வாங்கவே இல்லை.(அவர்களுக்கு இப்படி அலையவிட்டால் பணம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிடுவார்கள் நாம் பங்கிட்டுக்கொள்ளலாம் என்பது திட்டம்)

உடனே அவன் அங்கிருந்த சூபெர்வைசெரிடம் என் நண்பர் ஐந்நூறு வைத்து விட்டு ஆயிரம் என சொல்லி பிறகு ஐந்நூறு என கூறுகிறார் என சொல்லி பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டான்.நான் அவரிடம் சார் அங்கு என் அருகில் இருப்பவர்கள் பணத்தை வைத்திருந்தால் இந்நேரம் வந்து கேட்டு வந்திருப்பார்கள் , நாங்கள் வேண்டுமானால் இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே காத்திருக்கிறோம் யாரவது கேட்டால் கொடுத்து விடுங்கள் என்றேன்.

அதற்கு அந்த சூபெர்வைசர் கீழ் தளத்திற்கு அழைத்து சென்று இந்த பணத்தை அருகில் உள்ள காவல் நிலையத்திடம் ஒப்படைக்க போகிறேன் அங்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்றார். எனது நண்பர் சரி வா இங்கிருந்து போகலாம் ஐந்நூறு ரூபாயோடு போகட்டும் விட்டு விடலாம் எதற்கு போலீஸ் ,ஸ்டேஷன் என்று என்னிடம் கூறினார்.

நண்பரின் இந்த பேச்சு எனக்கு கோபத்தை வரவழைத்தது. நீங்கள் அமைதியாக இருங்கள் நான் பணத்தை வாங்கி தருகிறேன் என்றேன் . என் நண்பரின் பார்வை என்னை அவர் நம்பவில்லை என்று புரிந்தது. அவரிடம் உங்கள் மேனேஜர் எங்கு இருக்கிறார் அவரிடம் கூட்டி செல்லுங்கள் நான் அவரிடம் பேசி கொள்கிறேன் என்றேன் அதையும் மறுத்து விட்டனர்.

சரி வாருங்கள் காவல் நிலையம் போகலாம் நான் அங்கேயே வாங்கிகொள்கிறேன் என்றேன் . அதிசியடைந்த அவர் சரி சிறிது நேரம் வெயிட் பண்ணுங்க சிறிது நேரம் பார்த்து விட்டு தருகிறேன் என்று சொல்லி விட்டு , சுமார் பத்து நிமிடம் கழித்து அவர் முகவரியை வாங்கி கொண்டு பணத்தை கொடுத்தார்.

அப்போது தான் அவரிடம் நான் காவல் துறையில் காவலராக பணிபுரிபவன் நீங்கள் என்னதான் செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன் ,இல்லாவிட்டால் அப்போதே என்னை பற்றி சொல்லி இருப்பேன் ஒரு காவலரான எனக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலை என்ன ஆகி இருக்கும் என்றேன் . நண்பர் எழுமலைக்கும் அப்போது தான் நான் போலீஸ் என்பது தெரிந்தது .

என் நண்பர் எதோ நினைப்பில் பணத்தை என்னிடம் கொடுக்காமல் கூடையில் போட்டுவிட்டார் , அதற்கு அவரை அமரவைத்து விட்டு அங்குள்ள ஒலி பெருக்கியில் யாராவது பணத்தை தவற விட்டிருந்தால் இங்கு வந்து விபரங்களை சொல்லி பெற்றுக்கொள்ளவும் என அறிவித்திருக்கலாம் .இதனால் பொய்யாக பணத்தை என் நண்பர் கேட்டிருந்தால் அவர் அந்த இடத்தை விட்டு ஓடி இருப்பார் என்றேன் . அதற்கு அவர் சொன்ன பதில் அதிர்ச்சியைத்தான் தந்தது .

அவன் சொன்னான்: நீங்க போலீஸ் ன்னு சொல்றீங்க , இப்பல்லாம் வக்கீல்களே திருடுறாங்க .

நான் அவனிடம் என்ன கேட்டேன் அவன் என்ன பதில் சொன்னான் பாருங்கள் .

உங்களுக்கு இதிலிருந்து நான் உங்களுக்கு சொல்வது:

வெளி இடங்களில் பணத்தை கவனமாக கையாள வேண்டும் இதனால் இதுபோன்ற இன்னல்களை தவிர்க்கலாம். குறிப்பாக உங்களில்டம் எவ்வளவு பணம் உள்ளது என சோதித்துக்கொள்ளுங்கள் .

காவல் நிலையம் , போலீஸ் என்றால் தவறு செய்யாதவர்கள் கண்டிப்பாக பயப்பட தேவை இல்லை. சரி வாருங்கள் போகலாம் என சொல்லுங்கள். அங்கும் நம்மை போன்றவர்கள் தான் இருக்கிறார்கள் .ஒரு சிலர் தவறுக்கு எல்லோரையும் குறை கூறாதீர்கள் . (காவல்துறை&சரவணா ஸ்டோர்ஸ் இரண்டிலும் ) இப்பொழுதெல்லாம் காவல்துறையில் பெரும்பான்மையாக கல்லூரி படித்தவர்கள் தான் பணிபுரிகின்றனர். அவர்கள் பெர்ரும்பாலும் அப்துல்கலாம் போன்றவர்களை பின்பற்றுபவர்கள். இன்னும் சில வருடங்களில் எல்லோரும் உணரும் அளவுக்கு காவல்துறை கண்டிப்பாக மாறும் சந்தேகமேஇல்லை.

நண்பருக்கு இப்படி சோதனை வந்தால் அவர் குழப்பத்தால் இப்படி விட்டு விட்டு போகலாம் என்பார் பயத்தில் , கூட இருக்கும் நண்பர்கள் அவரை கவலைபடாதிருக்க சொல்லிவிட்டு நீங்கள் அவருக்காக வாதிடுங்கள்.

வாடிக்கையாளர்களை தெய்வம் தெரியாத இது போன்ற திருட்டைவிட கேவலமான வேலைகளில் ஈடுபட்டு தனது முதலாளிக்கும் , பணிபுரியும் இடத்துக்கும் உண்மையாக இல்லாத ஜென்மங்கள் அடுத்து வரும் வாடிக்கையாளர்களிடம் ஒழுங்காக நடந்து கொள்வார்கள்.

என் நண்பரை போல பரவாயில்லை விட்டு விடலாம் என்று வந்தால் அவர்கள் இன்னும் வாடிக்கையாளர்களை மோசமாக நடந்து கொள்வார்கள்.



நீங்கள் மேலே படித்தது எனது காவல் துறை நண்பர் ஜெய் , என் வேண்டுகோளுக்கிணங்க எழுதிய விழிப்புணர்வு பதிவு உங்களுக்காக .

அவரின் பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் இட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே.

3 comments:

sikkandar said...

excellent....job sir.... congratulation....

Anonymous said...

I have no words to say, really you have done a wonderful job...

Priyan said...

காவல் துறைக்கும், சரவணா ஸ்டோருக்கும் இடையே நல்லதொரு இணக்கம் (மாதம் தோறும் மாமுல்) இருந்து நமக்கு ஆப்பு வைத்தால் என்ன செய்வது??

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails