Pages

Sunday, August 14, 2011

ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்: சுதந்திர தின பதிவு

இந்திய சுதந்திர தின பதிவு : காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.
குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள் . முஸ்லீம் மக்கள்தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்

Monday, December 27, 2010

இந்தியாவில் விமானங்களின் கொள்ளை

இந்தியாவில் விமானங்களின் கொள்ளை

நேற்று டெல்லி விமான நிலையத்தில் ஒரே பனி பல விமானங்கள் தாமதம் , பல இன்னும்   ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் என சொல்லி இறுதியில் ரத்து செய்யப்பட்டன ,
பிறகுதான் ஆரம்பம் அந்த பகல் கொள்ளை பலர் உடனடியாக செல்ல வேண்டி இருப்பதால் வேறு விமானகளில் முன் பதிவு செய்ய தொடங்கினர் என்னிடம் laptop இருந்ததால் wifi மூலம் முன் பதிவு செய்ய ஆரம்பித்தேன் ஆரம்பத்தில் 6000 ரூபாயாக இருந்தா கட்டணம் சில நிமிடங்களில் 10 ,000 ருபாய் வந்துவிட்டது ஒருவழியாக 11,000 ரூபாயில் சீட் கிடைத்தது .

இதில் அந்த கடும் இரவிலும் லைன் இல் நின்று புக் செய்த வர்களின் நிலைமை மிக மோசம் இறுதியில் டெல்லி -பெங்களூர் 21,000 வரை ஏற்றி விட்டனர் பலருக்கு அதுவும் கிடைக்கவில்லை , அவ்வளவு தொகை இல்லாமல் அவசரமாக செல்லும் நடுத்தர பயனிஎன்றால் யோசித்து பாருங்கள் .



60000  ரூபாய்க்கு டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பதிவு செய்து பனி மூட்டம் காரணமாக எனக்கு 5000  ருபாய் இழப்பு மற்று விமானத்தை மறுநாள் கலை நிலைமை சீரானதும் அவர்களே ஏற்ப்பாடு செய்திருக்கலாம் ஓரளவிற்கு பிரச்சினையை தவிர்த்திருக்கலாம்




spice ஜெட் போன்ற  விமானம் பறக்கும் போது சுமார் 150  மீட்டர் தூரம் தெளிவாக தெரிந்தால் தான் விமானத்தில் பயணிக்கமுடியும் . பல விமானங்களில் அடர்ந்த பனி பொழிவிலும் பறக்கலாம்



நம் அரசோ இன்று வரை இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை நாளிதழ்கள் கூட பனி பொழிவு விமானம் ரத்து எண்டு மட்டும்சொல்லி நிறுத்திவிடுகின்றன .. அரசியல் வாதிகளும் ஓசி பயணத்தால்  இதனை கண்டு கொள்வதில்லை ....

Thursday, December 16, 2010

India vs south africa test cricket live video streaming online




Wednesday, December 15, 2010

பெரம்பலூர் ஹீரோ யார் ? நெப்போலியன் ? ஆ.ராசா

நெப்போலியன் vs ராஜா 
பெரம்பலூர்னா தொடர் வெற்றி , மத்திய அமைச்சர் ஆகிடலாம் இன்றுவரை இதுதான் செண்டிமெண்ட்  பாராளுமன்ற தேர்தலில்.
          ஒரு கோட்டையில் ரெண்டு ராஜா இருந்தால் எப்படி அதுதான் பெரம்பலூர் தொகுதியின் கடந்த இரண்டு வருட நிலை . நெப்போலியன் புதிதாக வெற்றி பெற்றாலும் தொகுதிபக்கம் பார்க்க முடியவில்லை .
ராசா நீலகிரி தொகுதிக்கு சென்று விட்டாலும் பெரம்பலூர் முக்கிய நிகழ்சிகளில் காண முடிந்தது . இதற்க்கு முன் பெரம்பலூர் பற்றி பார்க்கலாம்
           
தற்போது    ஆறு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை ,    1977 முதல் 1996 வரை அ.தி .மு.க கோட்டையாக வே இருந்தது  பெரம்பலூர் தொகுதி இதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை . . அதன்பிறகு ஆ.ராசா அவர்கள் வந்ததும் மூன்றுமுறை வெற்றி பெற்று தி.மு.க வசம் ஆனது.இன்றும் கூட M.G.Rருக்கு ஓட்டு போடுகிறேன் என்று சொல்லும் கிராமங்களே உண்டு .

        தற்போது பொதுதொகுதி ஆனதால் அவர் நீலகிரி சென்றுவிட்டார் (அப்பா இப்பதான் கொஞ்சம் நிம்மதி ) 12 ஆண்டுகளில் ஆ.ராசா தொகுதிக்கு வழக்கம்போல் அரசு மருத்துவ கல்லூரி வரும் என்று சொல்லி இன்றுவரை அரியலூர் செல்லும் வழியில் ஒரு போர்டு மட்டும் மாட்டி சென்றுவிட்டார்  ,இனி நீலகிரிக்கு மருத்துவக்கலூரி வரும் என்று சொல்லுவார் விரைவில் ...அவர்செய்த சிறப்பான பணி  காவேரி குடிநீர் வழங்கியது  என்கிரமத்தில் கூட கிடைகிறது.

நெப்போலியன் இங்கு வெற்றி பெற்றாலும் தி .மு .க கூட்டம் , முக்கிய நிகழ்சிகளுக்கு ராஜா வுக்குதான் முன்னுரிமை நெப்போலியன் பெயருக்கு உடன் இருப்பார் இதனால் பெரும்பாலும் நெப்போலியன் தொகுதிக்கு வருவதே இல்லை . இதனால் அவரும் ஓட்டு கேட்கமட்டும் வரும் லிஸ்டில் சேர்ந்துவிட்டார் என மக்களுக்கு வருத்தம் .
       பெயருக்காவது எங்கள் மாவட்டத்தில் இருக்கிறது என்று சொல்லலாம்என்றால் அதுவும் இல்லை  .சரி எல்லோருக்கும் பயன்படும் அரசு கலை அறிவியல் கல்லூரி அதுவும் அதே கதைதான் . இதில் பொறியியல் கல்லூரி யும் அடக்கம் . எனக்கு தெரிந்து கலை கல்லூரி கூட இல்லாத கொடுமை இங்குதான் .

ரயில் வசதியே இல்லாத ஒரே மாவட்டம் என்ற பெருமையும் பெரம்பலூர் மாவட்டதிற்க்கே. சேலம் -ஆத்தூர்-பெரம்பலூர் இடையே தொடங்க இன்னும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் .

பேருந்துகளில்இன்றும் சென்னையில் ஏறினால் திருச்சி டிக்கெட் எடுத்தால் தான் பயணம் செய்யமுடியும் பெரும்பாலும் .ஆனால் எல்லா தேர்தலிலும் மத்திய அமைச்சர் உருவாக்குவது  மட்டும் எங்களால் சாத்தியம் .இதெல்லாம் இரண்டாம் விருப்பம் தான் .

முதன்மை தேவையான நிரந்தர  வருமானம்

      வறட்சி மிக்க மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று .  விவசாயமும் வருடத்தில் ஆறு மாதம் நீடிப்பதே அதிகம் . வருடத்தில் பாதிநாட்கள் தான் மக்களுக்கு வேலை அப்போதுகூட தினமும் நூறு ருபாய் கிடைப்பதே கஷ்டம் .இங்கு தொழிற்சாலை என்றால் என்னவென்று கேட்கும் நிலைதான் . இங்கு பிறந்து வளர்ந்த ராசா அவர்களுக்கு நன்கு இது தெரிந்தும் செய்யாதது ஏனோ? M.R.F company தற்போது மெதுவாக கட்டட பணி துவங்கி உள்ளது   .

             
 ஏதேனும் பெரிய நிறுவனங்கள் அங்கு தொடங்கினால் கடுமையாக உழைக்கும் மக்கள் இங்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை .மேலும் தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலக்கிறது , சுற்றுபுறசூழல் பாதிக்கிறது என்ற பிரச்சினைகளும் வாய்ப்பு இல்லை .

           தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு.நெப்போலியன் அவர்களுக்கு டிசம்பர் 2 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுக்காக பணியாற்ற ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கவேண்டும் என்று வேண்டி . (இந்தவருடம் கொஞ்சம் லேட் வாழ்த்துக்கள்   )



  எங்கள் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நீண்டநாள் தேவையான தொழிற்சாலைகள்  அமைய ஆவன செய்யுங்கள் என ஒவ்வொரு தேர்தலிலும் மத்திய  அமைச்சர்களை உருவாக்கி தன்னையும் வளரவைப்பீர்கள் என்று பலவருடங்களாக கட்சி பாகுபாடின்றி ஆவலுடன் எதிர்பார்க்கும் பெரம்பலூர் தொகுதி   .....
பிறந்தநாள் பரிசு :

            இப்போ தலைப்புக்கு வருவோம் neppoliyan இடத்தில் இருந்து பார்த்தால் தன் தொகுதியில் பெயருக்கு மட்டும் கலந்து கொண்டு எவ்வளவு நாள் தான் இருப்பார் இதனால் அவரை தொகுதி பக்கம் பார்க்கமுடியவில்லை .
        spectrum  விவகாரம் தீவிரம் அடைந்ததும் நெப்போலியன் அவர்களுக்கு அருமையான விபாக அமைந்து விட்டது ராஜா தற்போது எந்த விழாவிலும் கலந்துகொள்வதில்லை எனவே இனி தொகுதிக்கு எவ்வித தயக்கமும் இன்றி வர துவங்கி உள்ளார் .  பிறந்தநாள் போஸ்டர் அடித்து அசத்தி உள்ளனர் தி,மு, க வினர் 


பெரம்பலூர் தொகுதியில் வென்றாலே ராஜா தான் (ஹீரோ) இனி மக்கள் மத்தியில் உண்மையான ஹீரோ ஆக நெப்போலியன் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு . பயன்படுத்துவார நெப்போலியன் ...பார்க்கலாம் ..
மேலும் தகவல்களுக்கு  
 

Friday, December 3, 2010

india vs zewzeland live cricket stream




india vs zewzeland live cricket stream




Friday, November 19, 2010

அறிமுகம் இலவச photo editing tool pinta 2.0 மற்றும் Download

pinta 2.0  Painting tool :


               முதலில் pinta என்றால் என்ன என்று பார்ப்போம் . pinta என்பது எளிமையான  photo editting software. photoshop போன்றது .இது ஒரு இலவச மென்பொருள் என்பது சிறப்பு இதன் தற்போதைய வெளியீடு கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ள  pinta 2.0 .

photoshop க்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம் இதிலும் அனைத்து வசதிகளும் உள்ளது . எளிமையாக இருப்பதால் நாமே கற்றுக்கொள்ளலாம் .நமது வலைபக்கத்தில் விரும்பியவாறு படங்களை எடிட் செய்து நிறுவலாம்.


            pinta  விண்டோஸ் ,ubuntu, open suse  , mac os  போன்ற அனைத்திலும் பயன்படும்வகையில் உள்ளது உங்கள் os க்கு ஏற்ப தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் .
இதனை  Download செய்ய.


Pinta2.0 Download  free 


நிச்சயம் இந்த போட்டோ editing tool pinta 2.௦ உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
pinta மூலம் edit செய்த படங்கள் கீழே பார்க்கலாம்






 Password Management Tipz:
                     நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான். அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க http://passwordbird.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .
Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails