Pages

Sunday, February 28, 2010

உலக கோப்பை ஹாக்கி இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

Hockey World Cup 2010: India beat Pakistan 4-1

உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய . பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கயுள்ளது   .
டில்லியில் 12வது உலக கோப்பை ஹாக்கி தொடர் இன்றுதுவங்கியது  . இதில் "பி' பிரிவில் நடந்த  லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது .
முதல் பாதியில் இந்தியா அணி கிடைத்த மூன்று பெனால்டி வாய்ப்பில்  2 கோல் அடித்து முன்னிலை வகித்தது .
கோல் விபரம்:
சந்தீப்  (35, 57 வது நிமிடத்திலும் ), ஷிவேந்திர  சிங்க்  (27 mint)  பிரப்ஜோத்  சிங்க்  (37mint) இந்தியா அணியிலும் , பாகிஸ்தான் அணி சார்பில் சொஹைல்   அப்பாஸ் (59mint) கோல் அடித்தனர்..


ஆட்டம் முடியும் வரை இந்தியா அணியே ஆதிக்கம் செலுத்தியது , இறுதியாக ஒரு கோல் போட்டது பாகிஸ்தான் .சந்தீப் சிங்   ஆட்டம் மிக அருமையாக இருந்தது , அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

. இதற்க்கு முன்  அர்ஜென்டினாவில் நடந்த "சாம்பியன்ஸ் சாலஞ்ச்' தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் 3-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு,  பலிதீர்த்துக்கொண்டது.
 இணையதளத்தில் அவ்வப்போது ஸ்கோர் நிலவரம் தெரிந்துகொள்ள வலைத்தளங்கள் இல்லை என்பது வருத்ததிற்குரிய செய்தி .

இன்று நடந்த பிற ஆட்டங்களில் சுவீடன்-சவுத் ஆப்ரிக்கா வையும் , . ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன .
புள்ளி விபரப்படி இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் உள்ளது .

கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்

என்மீது எப்பொழுதும் அக்கறை அன்பும் கொண்டுள்ள பிரபாகர் சார்  அழைத்தால் இந்த

கிரிக்கெட் - தொடர் பதிவு...

இத்தகைய தொடர் பதிவுகள் நண்பர்களின்  கருத்துக்களை  புரிந்துகொண்டு நட்பை வளர்க்க சிறந்தவழி என்பது நிச்சயம்..

கிரிக்கெட் என்றாலே அது சச்சின்தான் . முடிந்தவரை பிறவீரர்களை சேர்த்துள்ளேன் .

1.பிடித்த கிரிக்கெட் வீரர் –சச்சின் டோனி, ஸ்டீவ் வாக்.

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ஸ்ரீகாந்த் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கும் தமிழக வீரர்கள் .

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – மெக்ராத்,ஸ்ரீநாத்

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்

Andrew Caddick 
இந்த வீடியோ பார்த்தல் ஏன் என்று புரியும்
உலககோப்பை 2003 ல் இந்த ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டத்தில் கென்யா விற்கு ய்திராக சதம் அடித்ததை Caddick சிறிய அணிகளுடன் மட்டுமே சிறப்பாக விளையாடுவார் என்று விமர்சித்தார் இதார்க்கு சச்சின் கொடுத்த பதில் இந்த சிக்ஸ் இதுதான் சச்சினின் சிறப்பான சிக்ஸ் என்று சொல்லப்படுகிறது . இந்த ஆட்டத்தில் தான் Caddick அதிகபத்ச் ரன்கள் கொடுத்தார் .

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -முரளிதரன் .

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -அஜந்தா மென்டிஸ்(  ஓவர் பில்டப்  கொடுத்து மொக்கையானவர்)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் – சேவாக்  ,ராம்நரேஷ் சர்வான்.

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - முகம்மது கைப் .

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - சவுரவ் கங்குலி மற்றும் கில்கிறிஸ்ட் .

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் - சல்மான் பட்(  இந்தியாவுடன் மட்டும் அடிப்பதால்) , அமீர் சொஹைல் (இந்த வீடியோ பாருங்கள் புரியும் . வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு கொடுத்த பல்பு.)

11. பிடித்த களத்தடுப்பாளர் - யுவராஜ்,ஜான்டி ரோட்ஸ் .அஜாருதீன்.

12. பிடிக்காத களத்தடுப்பாளர் - இன்சமாம்

13. பிடித்த ஆல்ரவுண்டர் – கபில்தேவ், மைக்கேல் பேவன், க்ளுஸ்னர்.(பெரும்பாலும் எல்லோரின் விருப்பமும்  இவர்கள்தான்  )

14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -அப்ரீடி , பிளின்ட்ஆப்  கங்குலியிடம் பல்பு வாங்கியதை  யாரும் மறக்கமுடியாது .

15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட், டான்ஸ் ஆடி கொண்டே  சிக்ஸ், அவுட் கொடுக்கும் மேலே உள்ள New Zealand umpire Billy Bowden .

16. பிடிக்காத நடுவர் - அசோகா டி சில்வா 

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -ரவி சாஸ்திரி

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - ரேடியோவில்  ஹிந்தியில் பேசுபவர்கள் அனைவரும் 

19. பிடித்த அணி – இந்தியா,

20. பிடிக்காத அணி –தற்போதைய மேற்கு இந்தியா தீவுகள் அணி (.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்  என்பதுதான் நினைவுக்கு வரும்) .

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா vs ஆஸ்திரேலியா

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – இலங்கைக்கு எதிராக விளையாடும் சிறிய அணிகள் .(பாவம் அந்த அணிகளை இலங்கை அணி அடித்து நொறுக்கிவிடுவதால்) .

23. பிடித்த அணித் தலைவர் -தோணி (கோப்பை வெல்வதற்கென  பிறந்தவர்)  ,அர்ஜுன ரணதுங்கா(1996 உலககோப்பை வென்று  பெனசீர் பூடோவிடம் அவர் கோப்பையை வாங்கி சாதித்தாதால் )

24. பிடிக்காத அணித் தலைவர் - இன்சமாம்

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின்,

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி--தற்போதைய இந்தியா அணி ஜோடிகள்  கங்குலி-சச்சின் அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்திசெயாததால்  .

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - ராகுல் ட்ராவிட்,லாரா .

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் -  சச்சின்

29. பிடித்த போட்டி வகை – 20 -20 ரஜினி படம் போல் பரபரப்பு  விறுவிறுப்பாக இருப்பதால்  .

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் –  கங்குலி ,டிராவிட் (சச்சின் இருக்கும் அணியில்  விளையாடி சாதித்து தனக்கென்று தனி ரசிகர்களை உருவாகிகொண்டதால் )
நான் தொடர்பதிவுக்கு அழைப்பது::
நண்பர்கள் :
சூர்யகண்ணன் ,

என் இனிய இல்லம்-சிநேகிதி  

மற்றும் இதுவரை தொடர் பதிவு இடாத அனைத்து சக பதிவர்களும் .

Friday, February 26, 2010

சாதனை மனிதன் சச்சின் கடந்துவந்த சோதனைகள்


சச்சினை பொதுவாக நமக்கு சாதனை வீரராக மட்டுமே தெரியும் ஆனால் அவர் இந்த நிலையை அடைய கடந்துவந்த சோதனைகள் பல அவற்றை பற்றி பார்ப்போம் .

சச்சினின் டெஸ்ட் சதங்கள்
 சச்சின் எடுத்த   47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றி.
சச்சின் கடந்துவந்த சோதனைகள்  :
  •  முதல் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி அவருக்கு ஏமாற்றம் அளிக்ககூடியதாகவே இருந்தது . முதல் இன்னிங்க்சில் 15 ரன்கள் அப்போது வக்கார் வீசிய  பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது; இரத்தக் கறைபடிந்த சட்டையுடன்  தொடர்ந்து ஆடிகிரிக்கெட் மீது தனக்கிருந்த ஆர்வத்தை அப்போதே  நிரூபித்தார் .

  • முதல் ஒரு நாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் .

  • சென்னை,M.A.சிதம்பரம் மைதானத்தில்    ஜனவரி 31, 1999, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ரன்கள் ஆனால் இந்தியா தோல்வி அடைந்தது.

  • முதுகுவலியுடன் சச்சின் எடுத்த  சதம் . சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று கைதட்டினர்.

  • மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ரன்கள் இருந்தபோது  கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தார்  இதனால்  சச்சின்  இரட்டை சதம் எடுக்காமல் போனது. ஏன் அப்படி டிராவிட் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.

  • இந்தியா அணிக்கு கேப்டனாக இருந்தபோது  இந்தியா தொடர்ந்து தோல்விகளையே தழுவியது . சிறந்த கேப்டனாக இருக்கமுடியாமல் போனது எல்லோருக்கும் இன்றுவரை வருத்தம்தான்.

  • 2001 ல்  நடுவர் மைக் டென்னஸ் போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக  சச்சினுக்கு  ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.ICC தலையிட்டு தடையை நீக்கியது.இந்தியாமுழுவதிலும் இருந்து நடுவருக்கு எதிராக கண்டனம் வந்தது.
  •  
  • 23 முறை சச்சின் 90-99 இடையே ஆட்டம் இழந்து  சதங்களை  தவறவிட்டிருக்கிறார்.

  • 1999 உலகக் கோப்பைப் நடுவே தந்தை இறந்ததால் இறுதி மரியாதை செய்ய  ஜிம்பாப்வே க்கு எதிரான   போட்டியில் கலந்துகொள்ளாமல்  இந்தியா சென்றார் ,அவரது தாயார் சொன்னதற்கிணங்கி   அடுத்த போட்டியான  கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில்  141* எடுத்தார் இதனை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக்  கண்ணீர் மல்ககூறி அனைவரையும் கண்கலங்கவைத்தார் ...
  • சில  வாரங்களுக்குமுன் மும்பை இதியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று சொல்லி சிவாசேனா  தாக்ரேவால் கடுமையாக விமர்சிக்கபட்டார் இதனால் இந்தியாமுழுவதும் சிவ சேனாவிற்கு   எதிராக கண்டனம் தெரிவிக்க பிரச்சினை ஓய்ந்தது.
ஒருநாள் போட்டிகளில் அணி தோல்வி  அடைந்தாலும் ஆட்ட நாயகன் விருதை அதிகமுறை பெற்ற சாதனை & சோதனை அடைந்த ஒரே வீரர் நாம் சச்சின் தான்........

April 24, 1973 பிறந்த அவரின் பிறந்த நாளை உலக கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்...
இதையும் படிங்க ..

சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?


    Thursday, February 25, 2010

    sachin's unbeatable 200* Highlight video , photos

    sachin's unbeatable 200* Highlight video


    Click the button which part you want to see..






    . -


    Uploaded by . -


    Uploaded by . -

    Monday, February 15, 2010

    விண்டோஸ் விஸ்டா வேகத்தை அதிகரிக்க ...

    எளிமையான முறையில்  விஸ்டா தற்போது இயங்கும் வேகத்தை  விட அதிகமாக இயங்கவைப்பது எப்படி  என்று பார்ப்போம் .

    முதலில் Start --> சென்று
    settings --> வழியாக Control panel தேர்வு செய்துகொள்ளுங்கள்
    -->System and Maintenance சென்று-->
    Advance system settings கிளிக்  செய்து
    system Properties ல் Advance என்பதை தேர்வுசெய்தால் படத்தில் உள்ளது போல தோன்றும் அதில் படத்தில் உள்ளவாறு Adjust best performance
    கிளிக் செய்யுங்கள்  அவ்வளவுதான்  உங்கள் கணினிக்கு ஏற்றவாறு  இனி விஸ்டா வேகமாக இயங்கும்.



    Sunday, February 14, 2010

    காதலர் தின ஸ்பெஷல் சிறந்த பாடல்கள் & காட்சிகள்

    scenes:








    super songs:











    காதலர் தினம்-காதலை தெரிவிக்க சிறந்த ஐடியாக்கள்



    ஐடியா i
    பையன்: நான் உன்னிடம் இரண்டு வார்த்தைகள் பேசணும்.
    பெண்: என்ன அது ?
    பையன்: I love you.
    பெண் : இது ரெண்டு வார்த்தை இல்ல மூணு வார்த்தை .
    பையன் : you & I ரெண்டும் ஒரே வார்த்தை தான் .
    ==============================================================================

    ஐடியா 2
    பையன் : என் பையன் உன் பொண்ணு பின்னாடி நான் உன்னை சுற்றிவருவதை போல சுற்றுவதை விரும்பவில்லை அதனால அவங்க ரெண்டுபேரையும்  அண்ணன் தங்கையா மாத்திடலாம் .
     ==================================================================================
    ஐடியா 3
     பையன்: உங்க  photo தர முடியுமா?
    பெண்: எதுக்கு கேட்குற?
    பையன்: என் குழந்தையிடம் அவங்க அம்மா சின்ன வயசுல எப்படி இருந்தாங்கன்னு காட்டுவதற்கு தான் .
    எந்த ஐடியா சூப்பர் ன்னு நீங்களே முடிவுபண்ணி சொல்லுங்க....

    ======================================================
    உண்மையான அன்பிற்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும் , நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட ....

    myComputer போலியாக காட்டும் இல்லாத Removable Disk Icon ஐ நீக்குவது எப்படி ?

    pendrive போன்ற Removable Disk போன்றவற்றை நாம் கணிணியில் பயன்படுத்தாதபோதும் mycomputer இருப்பதாக காட்டும்  . இதனை சரிசெய்வதுபற்றி பார்ப்போம் .


    முதலில் Mycomputer Right-click செய்து  பிறகு
    Device Manager .ஐ தேர்வு செய்துகொள்ளுங்கள்   அதில்
    'Disk drives' ஐ டபுள் கிளிக் செய்தால் 


    Generic Usb Flash Disk Usb Device   

    என்று  தோன்றும் அதன் மீது  right  click  செய்தால்  invisible , uninstaal , update என காட்டும் .

    அதில் சென்று uninstall  செய்துவிடுங்கள்   Removable Disk Icon Mycomputer ல் இருந்து நீங்கிவிடும் .

    சில நேரங்களில் கணினியை reboot செய்தபின் மீண்டும் தோன்றினால்  invisible  தேர்வு செய்துவிடுங்கள் . இதனால் நீங்கள் pendrive பயன்படுத்தும்போது  Mycomputer கட்டாது என நினைக்கவேண்டாம் கண்டிப்பாக காட்டும் .

    vista ,XP இரண்டிற்கும் இது  பொருந்தும்.

     




    Saturday, February 13, 2010

    விஷால்+சந்தானம் +யுவன்= கலக்கும் தீராத விளையாட்டு பிள்ளை



    விஷால் எதிலும் best வேண்டும் என்று நினைப்பவர் பேனா வாங்கினாலும் மூன்றை தேர்வு செய்து அதில் சிறந்ததை வாங்குபவர் ,  திருமணம் செய்வதற்கு மூன்று பெண்களை காதலித்து அதில் best ஆக இருப்பவரை திருமணம் செய்ய நினைக்கிறார் .

    சந்தானம் , மயில்சாமி ,சத்யன் இவரது நண்பர்கள்.முதல் பாதி முழுவதும் இவர்களின் காமெடி சிரித்துக்கொண்டே இருக்கலாம் , அதிலும் சந்தானம் அடிக்கும் லூட்டி சூப்பர் .  விஷாலை கூட ஓட்டுகிறார்.

    ஒருபெண் பணக்காரி அவளிடம் ஆட்டோ டிரைவர் என்று சொல்லியும் , இன்னொருபென்னுக்கு ஆண் என்றாலே பிடிக்காது அவளிடம் பொண்ணுங்கன்னாலே புடிக்காது என்று சொல்லியும் மூன்றாவது பெண்ணுக்கு ஒருவனை காதலித்து அவனையே கல்யாணம் செய்யும் ஆசை   இப்படி மூவரையும் காதலிக்கவைக்கிறார் விஷால்  முதல் பாதி விறுவிறுப்பு,விஷால் செய்யும் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது .
    பணக்கார பொண்ணுக்கு உண்மை தெரிந்ததும்  விஷாலிடம் எப்படி நீ மீதமுள்ள இரு பெண்களில் ஒருவரை திருமணம் செய்கிறாய் என்று சவால் விடுகிறார் .  விஷால்இவர் கொடுக்கும் இடைஞ்சல்களை  எப்படி இதனை சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்கள் கடைசி 15 நிமிடங்களை தவிர .
    விஷால் காமெடி , காதல் , டான்ஸ், சண்டை என எல்லாவற்றிலும் பின்னி எடுக்கிறார் .இடையிடையே பாடல்கள் வந்தாலும்  யுவன் சங்கர் ராஜா  அருமையாக இசை ரசிக்க வைக்கிறது.ஒளிப்பதிவு  அருமை. .வித்தியாசமான  ,புதுமையான காட்சிகள் என படம் செல்வதால் படம் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது .பெண்களின் காதலுக்கு எதிராக விஷால்  வசனம் பேசி கைதட்டல் வாங்குகிறார் .

    பிரகாஷ் ராஜ் ஹீரோஇன் அண்ணன் + தாதாவாக  சில காட்சிகள் வந்தாலும் அவர் சிரிக்கவைக்கிறார், மௌலி விசாலின் அப்பாவாக வந்து அவரும் சிரிக்கவைக்கிறார் . இறுதிகாட்சியில் சிநேகா இலவச இணைப்பாக வருகிறார்.விஷால் இனி இதுபோல தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்வார் என நம்பலாம்.இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் வந்துள்ள படம்.

    விஷாலுக்கு வெற்றிப்படம்  தீராத விளையாட்டுப்பிள்ளை good Entertainer......
    ஏன் இந்த படத்திற்கு  Times of india  ஒரு star மட்டும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.?
    ....

    Friday, February 12, 2010

    பூனை vs ரோபோ "அசல் வீடியோ "

    பூனை  vs ரோபோ amazing videos



    பூனை  vs ரோபோ  பூனை 

    Thursday, February 4, 2010

    தமிழ்ப்படம் vs சுரா

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் நேரடி ஒளிபரப்பு 06.02.2010 சனிக்கிழமை  முதல் ..
    விரைவில் valentine's day 2010 special

    தமிழ்ப்படம் vs சுரா

    தமிழ்ப்படம் முடிந்த அளவு எல்லா படங்களையும் நடிகர்களையும் பகடி செய்து ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று மணிநேரம் சிரித்து வயிற்றை புண்ணாக்கி விட்டது .

    தமிழ்நாட்டில் கடற்கரை பகுதிகளில் ஒரே  பரபரப்பு ..
    பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன ...

    காவல் துறையும் , அரசும் காரணத்தை கண்டறிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன ....

    எவ்வளவோ முயன்றும் இதற்க்கான காரணம் கண்டறியமுடியவில்லை ..


          நீண்ட சிரமங்களுக்கு பிறகு காவல்துறை கண்டறிந்தது இதற்க்கான காரணத்தை ,  பிறகுதான் தெரிந்தது மீன்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன என்று .. இவ்வாறு மீன்கள் தற்கொலை செய்துகொள்வது இதுவே முதல்முறை என்று ...
    இதற்க்கான காரணம் ஒரு அதிர்ச்சி யான தகவல் இதோ அந்த காரணம் ...

    =
    =
    =
    =
    =
    =
    =
    =
    =


    விஜய் யின் அடுத்தபடம் சுரா என்று தெரிந்ததும் அனைத்து மீன்களும் ஒன்றுகூடி  தற்கொலை செய்துகொண்டன ...


    வேட்டைக்காரன் முடிஞ்சது அடுத்து இப்படி ஆரம்பிக்கவேண்டியதுதான் .....
    சிரிக்கமட்டும் ..

    Tuesday, February 2, 2010

    ஆணும் பெண்ணும் பழகினால் நட்பா / காதலா ?

    ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலா   அல்லது நட்பா? இதைப்பற்றிய சில பிரபலங்களின்  கருத்துக்கள் இதோ இங்கே..


    ஷேக்ஸ்பியர்
    :

    ஒரு ஆணும் பெண்ணும் ஒரு போதும் நண்பர்களாக இருக்கமுடியாது .

    லிங்கன் :
    ஆண் பெண் நட்பு என்பது காதலுக்கான முதல் படி .

    வோர்ட்ஸ் வொர்த் :
    நண்பர்களை இருப்போம் என்று ஒரு பெண்ணோ அல்லது ஆணோசொல்வது என்பது மறைமுகமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதாகும்

    ஜாக்கி ஜான் :
    காதல் என்பது எப்போதும் பிரியாத நட்பு.

    பிக்காசோ :
    ஒருவர் உங்களது சிறந்த நண்பராக இருந்தால் பிறகு அவரோ அல்லதுஅவளோ எளிதில் உங்கள் வாழ்க்கை துணையாக வந்துவிடுவார்.

    முடிவு உங்களிடமே விட்டுவிடுகிறேன் ....
    Related Posts with Thumbnails
     
    Related Posts with Thumbnails