குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள் . முஸ்லீம் மக்கள்தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்
Friday, August 14, 2009
ஆங்கிலேயரை வெறுத்த இந்திய அதிசயம்
இந்திய சுதந்திர தின பதிவு : காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.
Labels:
India
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment