எனது நண்பரின் கவிதை இது. உங்களுக்காக
என் எழுத்து...
கவிதை எழுதுதல் கால விரயம்
என்று உலகம் கூற,
கவிதை எழுதாது வீணான
நாட்களில்,
கல்லாது வீணான காலங்கள்...
எழுதப்படாது வீணான
நாட்குறிப்பு.
மீட்டப்படாத வீணையில்
துயின்று கிடந்த ராகங்கள்...
அலைகிளம்பாது
அடங்கிக் கிடந்த மஹா சமுத்திரங்கள்...
நடைபயிலாது
முடங்கிக் கிடந்த குழந்தைகள்...
அடைமழையோ என்று
இடியோடு பொழியாத மேகங்கள்...
காணாது மறந்துபோன
ஒருகோடி விண்மீன்களின்
கண்சிமிட்டல்கள்...
ஒளிவிழாது இருண்டு கிடந்த
உலகத்தின் பாதி...
சந்திர அப்பங்களைத்
தின்ன மறந்துபோன
பல நூறு இரவுகள்...
மறந்து மரத்துப் போன
எமது மூதாதையர் சரித்திரம்...
ஒப்புக் கொள்ள மறந்து மறுக்கப்பட்ட
எமது உள்ளத்து உள்ளொளி.
அண்ட முகடுகளை உரசிப்பார்க்க
மறந்துபோன உள்ளம்.
என்பதை
ஒப்புக் கொள்ள மறுத்த மனம்.
- காசிகணேசன் ரங்கநாத்
மறக்காமல் அவருக்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ...
0 comments:
Post a Comment