இளமைக்காலம்
இதுவொரு இனிய காலம்
இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்
பட்டாம் பூச்சி போன்று
படபடத்து திரியும் காலம்
பட்டென்று பாசமும்
சட்டென்று காதலும்
நச்சென்று கோபமும்
கூடியே வரும் காலம்
துடி துடிப்புடனே உற்சாகத்துடன்
துள்ளித் திரியும் -ஒரு
இனிமையான காலமது.
இயற்கை
கண்மூடித்தூங்கும் போது அன்னையாகிறாய்
கவிதைகள் எழுதும் போது காதலியாகிறாய்
தவறுகள் தொடுக்கும் போது ஆசனாகின்றாய்
உன்னுள் எத்தனை குழந்தைகள்?
அருவிகளாய்ச் சுமக்கின்றாய்
பசுமையைச் சுமக்கின்றாய்
வனவிலங்குகளைச் சுமக்கின்றாய்
நீயும் ஒரு சுமைதாங்கி !
எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும்
காலத்தால் அழியாதது கவிசுவடுகள்
இன்றோ காவியச் சுடுகாடுகள்
அத்தனைக்கும் யார் காரணம் ? நான் (மனிதன்)
உன்னை அளிக்கும் நோக்கத்தில் என்னை
அழித்துக் கொள்கின்றேன். ஆருயிரே
அன்பெனும் கேள்வியை நடத்தி பசுமை என்னும்
வரம் தருவாயாக? அல்லது சாபம் தருவாயா?
நாங்கள் விரும்புவது சுந்தரவனக்காடுகள்
சுடுகாடுகள் அல்ல.
நிலவில்லாமல் இரவில் ஒளி இல்லை
நீ ! இல்லாமல் மனித வாழ்வில் ஒளி இல்லை
உன்னுள் அமைதியாய் இருக்கும்போது
ஆடும் மயிலாய் அமைதியாய் மெருகூட்டுகிறாய்
அளிக்கும்போது எரிமலையாய்
விரிசலாய் படமெடுக்கிறாய்
மனிதன் வளர்ந்தது உன்னுள்
மானுடம் வளர்ந்தது உன்னுள்
நாகரிகம் வளர்ந்தது உன்னுள்
ஒவ்வொரு அணுவிலும் உள்ள உன்னை
என் அன்னையாகக் கருதுவதில் தவறில்லை
கறிமேடாய் ஆகின்ற உன்னை காவியச் சுவடுகளாக
மாற்ற இதோ வருகிறது
இன்னொரு மானுடம்.
Friday, August 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment