Pages

Thursday, September 30, 2010

Watch Live India VS Australia Test Cricket

Watch Live India VS Australia Test Cricket



m

இன்டர்நெட் இல்லாமல் ஜிமெயில் பார்க்கும் & அனுப்பும் வசதி



Gmail usage without internet

        இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing செய்யும் முறை பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம் .நம்மில் பலர்  இன்டெர் நெட்  இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட GB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .

    நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop  வந்துவிடும்  .  இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்

.Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் .
             முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில்  Google Gears  நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்

   http://tools.google.com/gears  சென்று  இன்ஸ்டால் செய்யுங்கள்.

பிறகு  ஜிமெயில் more>>  சென்று  Labs என்பதை தேர்வு செய்யுங்கள்
offline - enable கொடுத்து save  செய்யவும்.

பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings  அருகில்  உள்ள offline கிளிக் செய்து click next  கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும்  install offline access for gmail  க்கு  next button  கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும்  permission  ஓகே  கொடுக்கவும்.

ஜிமெயில் உங்கள் desktop  வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு   உங்கள் computerக்கு download  ஆகதொடங்கும் .

இனி நீங்கள்  offline  ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும்  பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...இதுபோன்ற பல சிறப்பான வசதிகள் கொண்டது ஜிமெயில் .



google secrets தொடரும்....

குறிப்பு :  C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம் .

Wednesday, September 29, 2010

இப்போ எந்திரன் அப்போ பழனி சினி வள்ளுவர் ரஜினி படம் முதல் நாள்


.முதல் நாள் இரவுக்காட்சி பார்த்த வாய்ப்பு சிவாஜி படம் வெளியானபோது . பழனியில் பணிபுரிந்தபோது சிவாஜி ரிலீஸ் இதற்க்கு முன் ரஜினி படங்கள் முதல் நாள் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்க்கான சூழல் இல்லை . பள்ளியில் படிக்கும்போது வீட்டு கதவில்  ரஜினி போடோக்கள் ஓடியிருப்பேன் பாண்டியன் எஜமான் என முத்து வரை தொடர்ந்தது இப்போதுதான் கதவு ரஜினி போட்டோ இல்லாமல் இருக்கிறது .

வேலைக்கு வந்து பார்க்கபோகும் முதல் படம் எங்கள் அலுவலகத்தில் அன்று வேலை அதிகம் மற்றவர்கள் வர தயக்கம் சண்முகம் மட்டும் போகணும் என்று சொல்ல . மற்றவர்களிடம் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் வந்துவிடுகிறோம் என்று சொல்ல , அவர்கள் வந்து கதை சொல்லி விட்டு தூங்குங்கள் அப்போது தான் நாங்கள் உதவுவோம் என்று டீலிங் போட சரி என்று சொல்லி சென்றோம் அங்கு reservation  ஏதும் இல்லை . இரவு மணி 8 pm காட்சிக்கு செல்ல முடிவெடுத்து6.30 pm மணிக்கே சென்று பார்த்தல் கவுன்ட்டர் முழுவதும் கூட்டம்  போலீஸ் வேறு லத்தியுடன்

.இருவருக்கும் ரஜினினா உசிர் சண்முகத்தை லைன் இல் நிற்கவைத்து நான் சற்று தள்ளி வேறு எங்காவது முயற்சிக்க அவனோ கிட்டத்தட்ட 1 .30 மணிநேரம் நெரிசலில் நான் சற்று நேரம் நிற்கவா என்று கேட்டும் பரவ இல்லை என்று நின்று டிக்கெட் வாங்கினான் பலருக்கு அப்போது அடி நல்ல வேலை நாங்கள் தப்பித்தோம் டிக்கெட் விலை 50  ருபாய் தான் . ஆச்சர்யம் சென்னை திருச்சி யில் 300 , 400 என நண்பர்கள் என சொல்ல 50 க்கு நாங்கள் வாங்கிவிட்டோம் . அப்போது ஒரே பெட்டி யை வைத்து சினி வள்ளுவர் , ரமேஷ் என ஓடி ஓடி ஒட்டிகொண்டிருந்தார்கள் , இங்கு கிடைக்கவில்லை என்றால் இன்னும் ஒரு மணிநேரத்தில் ரமேஷ் இல் காட்சி அங்கு வாங்கலாம் என்று நினைத்தோம் ஆனால் கிடைத்து விட்டது .

 உள்ளே சென்றால் வழக்கம் போல் விசில்  டான்ஸ் என விண்ணை பிளந்தது . படத்தை விட ரசிகர்கள்  ஆரவாரம் இன்னும் அருமை .பல வசனங்கள் புரியவில்லை இருந்தாலும் அதிசயித்து பார்த்தோம்.நண்பர்கள் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் என்று சொல்லி இருந்ததால் அடிக்கடி மொபைல் பார்த்து கொஞ்சம் டென்சன் ஆனால் கடைசிவரை எந்த அழைப்பும் வரவில்லை . பத்து நாட்கள் கழித்து அதே சினி வள்ளுவரில் நானும் சண்முகமும் இரண்டாவது முறை பார்த்தோம்.இப்போது பெரம்பலூர் கிருஷ்ணா வில் நாளை பார்க்கும் படபடப்பு இப்போதே .  இது ரஜினி படங்களுக்கு மட்டுமே வரும் ஆர்வம் ..

எவ்வளவு படித்தவர்களானாலும்  அப்புறம் பார்க்கலாம் என தோன்றாது ..என்னை போன்ற சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களும்  விசிலடித்து கொண்டாடும் ஒரே தலைவர் ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே ..

வலைபக்கத்தில் கிரிக்கெட் போட்டி & முக்கிய நிகழ்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி ?

(How to Brodcast Live Match in our Site/Blog)
கிரிக்கெட் மற்றும் நமது  முக்கிய நிகழ்ச்சிகளை Online ல் நேரடிஇலவசமாக  ஒளிபரப்பு செய்யலாம்





கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மற்றும் வீட்டிலோ  அலுவலகத்திலோ நடக்கும் முக்கிய விழாக்கள் பிறந்தநாள் விழா போன்றவற்றை இலவசமாக Online    Live Telecast ல் நமது தளத்தில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கவும் /விழாவில் கலந்து கொள்ள  முடியாதவர்களும் பார்க்கும் வாய்ப்பு ஏற்ப்படுத்தலாம்  ,ustream இணையதளம் இதனை நமக்கு இலவசமாக வழங்குகிறது.





முதலில் கிரிக்கெட் மேட்ச் blog ல் ஒளிபரப்ப உங்கள் தொலைக்காட்சி வீடியோ ,ஆடியோ output ஐ USB cable  ல் இணைக்கவேண்டும்  , முக்கிய  விழாக்களுக்கு
 ஒரு நல்ல  தரமான digital camera , USB connector ,mike இவற்றை கணிணியில் இணைத்து பிறகு http://www.ustream.tv சென்று register செய்து
பிறகு Broadcast Now  தேர்வுசெய்து
நீங்கள் ஒளிபரப்பவிரும்பும் நிகழ்ச்சியின் பெயரை தேர்வு செய்யுங்கள்  Cricket Live ,Songs என்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து  பிறகு
அங்கு உங்கள் விருப்பம் போல் settings அமைத்து




offline ல் இருக்கும் போது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த வீடியோ ஒளிபரப்பும் படி செய்துவிடுங்கள் பிறகு USB  இணைத்து ஒளிபரப்பை தொடங்குங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் ப்லோக் தேடி வருவார்கள் ...  முக்கிய நிகழ்ச்சிக்கு வராதவர்கள் உங்கள்  வலைபக்கத்தில் கண்டு ரசிப்பார்கள் ,
நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு முன்னோ ,பின்னோ ஒளிபரப்பு இல்லாத போது ,நீங்கள் ஏற்கனவே பத்தி செய்த வீடியோ ஒளிபரப்பும் வசதியும் உண்டு.

settings தேர்வு செய்யும் போது நல்ல தரமான வீடியோ வழங்க கொடுத்துள்ள option தேர்வு செய்துகொள்ளவேண்டியது அவசியம் , இதற்க்கு சில software அவர்களே வழங்குகிறார்கள் ..





 அருகில் உள்ள Object Code  copy செய்து  ப்லோக் ல் போட்டுகொண்டால் நமது ப்ளோகில் அவர்கள் கண்டுரசிப்பார்கள் ....நமது வலைபக்கத்தில் live programme ரெடி ...
வெளி நாடுகளில் கால்பந்து , டென்னிஸ் போன்ற முக்கிய விளையாட்டுகள் இப்படித்தான் வலைபக்கத்தில் ஒளிபரப்புகின்றனர் ,

  நமது நாட்டில் இன்னும் இது போன்று அதிகம்  வளர ஆரம்பிக்கவில்லை இணைய தளத்தை பொறுத்தவரை நம்மவர்கள் சுமாராக மூன்று ஆண்டுகள் பின்னோக்கியிருப்பதாக இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது ,  ..
பாகிஸ்தானுக்கும் ஏறத்தாள இதே நிலைதான்  ஆனால் வைரஸ் ,ஹாக்கிங்  போன்றவற்றில் நம்மை முந்திவிட்டனர் ....என்பது கூடுதல் தகவல்.  .

Tuesday, September 28, 2010

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing



இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் Browsing செய்யும் முறை ;
இம்முறைப்படி நமக்கு தேவையான தளத்திற்கு ஒருமுறை சென்று இந்த tool மூலம் இணைய இணைப்பு இல்லாதபோது அந்த தளத்தை பயன்படுத்தமுடியும் .
இந்த வசதி Firefox Browser  ல் எப்படி என்று பார்க்கலாம் . SrapBook Addon டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். பிறகு Firefox Restart செய்ததும் Toolbar ல் Scrapbook என்ற option  படத்தில் உள்ளவாறு இருக்கும்.


ScrapBook தேர்வு செய்து கீழே உள்ள படத்தில் உள்ளவாறு தேவையான Website களை Capture செய்து விடுங்கள் 

சில நொடிகளில் Page Downloaded என்று வந்துவிடும் .   இனி இந்த website களை இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் எப்போதும்  பார்க்கலாம் ..
சிறப்பு வசதிகள்: 

அந்த Website களில் தேவை இல்லாத விளம்பரம் போன்ற  பகுதிகளை நீக்கும் வசதி , கலர்களில் எழுத்துக்களை தனித்து காட்டும் வசதி , எழுத்துக்களை தேடும் வசதியும் உண்டு .  



இதற்கு  scrapbook ஐ sidebar ல் open செய்து  RightClick செய்து Tools சென்று இந்த வசதிகளை பெறலாம் .


Shortkeys for search 
F : Full Text Search
  T : Filtering Search by Title
  C : Filtering Search by Comment
  U : Filtering Search by URL
  I : Filtering Search by ID (Date)
  A : Filtering Search by all of them
இவற்றை கணிணி யில் சேமிக்கும் வசதி என பல வசதிகள் உள்ளன . 

இணையதளத்தில் தகவல்களை copy செய்து MS Word  ல்  சரிசெய்து படிப்பதை விட இந்தமுறை  படங்களுடன் படிப்பதற்கு சரியான தேர்வு.

இதற்கென தனியே சில Tool களும் உள்ளன அவற்றை அடுத்தடுத்து பார்க்கலாம்.

scrapbook addon Download 

குட்டீஸ் திறனை வளர்க்க உதவும் இணைய தளங்கள்-ஓர் பார்வை

      இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன .   ஆனால் குட்டீஸ்    அடிப்படை திறன் களான  கணித திறன் ,புதிர்கள்  போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .    
   கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு  பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால்  பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு  அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம்  சொல்லி தருவது மிக கடினம் .
                      பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில்  கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள்   அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து  உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை .  இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .
                 எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
  • எண்கணித புதிர்கள் .
  • அல்ஜீப்ரா
  • ஜாமென்றி
  • லாஜிக் புதிர்கள்
  • கணித விளையாட்டுகள் ,
  • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
  • சீட்டாட்ட புதிர்கள்
  • ஐன்ஸ்டீன் புதிர்கள்
  • கணித Dictionary
  • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
  • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
  • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
              முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
 நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .....
           மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை . 
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு 



 
 

 

 
 
http://www.funbrain.com/brain/MathBrain/MathBrain.html

 
 
http://www.amathsdictionaryforkids.com/
   இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில  கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ..

           உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க  விஷயம்.
அடுத்த பதிவில்  

ஏர்டெல் to ஏர்டெல் free sms அனுப்ப tips  & tricks

Monday, September 27, 2010

எந்திரன் முதல் நாள், காட்சி சென்னையில் பார்க்க + தமிழ் 10 ஒட்டு பட்டை வைரஸ் நீக்கும் முறை

தமிழ் 10 ஒட்டு பட்டை வைரஸ் நீக்கும் முறை
தற்போது பல தளங்களுக்கு செல்லும் போது வைரஸால் பாதிக்கப்பட்ட தளம் என்று கட்டுகிறது , இதற்கு காரணம் தமிழ் 10 தளம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் எந்த எச்சரிக்கை ,ஒட்டுபட்டை நம்முடைய தளத்தில் இணைத்திருப்பதால் நம் தளமும் இந்த வைரஸ் எச்சரிக்கையை கட்டுகிறது  .
 இந்த வைரஸ் பிரச்சினையை அவர்கள் சரிசெய்யும் வரை  தற்காலிகமாக ஒட்டு பட்டைக்கான html script ஐ நீக்கி சரிசெய்யலாம் ..  அது எப்படி என்று பார்ப்போம் .முதலில் உங்கள் வலைபக்கத்தில் நுழைந்து Design    தேர்வுசெய்து Edit HTML தேர்வுசெய்து Expand Widget Templates டிக் செய்துகொள்ளுங்கள் Control + F தேர்வுசெய்து 
என்பதை 
டைப் செய்து enter கொடுத்தது அதனை அடுத்து உள்ள என முடியும்  இந்த வரிகளை நீக்கிவிடுங்கள் .அவ்வளவுதான் இனி வைரஸ் அபாய செய்தி வராது tamil 10 தளம் சரிசெயததும் மேற்கூறிய முறைப்படி மீண்டும் ஓட்டு பட்டையை இணைத்துக்கொள்ளலாம் ...

குறிப்பு : இன்ட்லி , உளவு போன்ற தளங்களின் ஓட்டு பட்டைகளும் இருப்பதால் tamil10
என இருக்கும் ஸ்கிரிப்ட் பார்த்து நீக்குவது அவசியம் ...


எந்திரன் Special: முதல் நாள், முதல் காட்சி பார்க்க விரும்புபவர்கள் விருகம்பாக்கம் தேவி கருமாரி theatre ல் online  புக் செய்யுங்கள் பல டிக்கெட்டுகள் காலியாக உள்ளன . THeatre மொக்கை தான் இருந்தாலும் முதல்நாள் பார்க்கும் ரசிகர்களுக்கு இது உதவும் ஆனால் டிக்கெட் விலை ருபாய் 200 ...

Thursday, September 23, 2010

Horror Movie

முட்டாள் ஜோதிடர்+தினமலர் ,டோனி வைத்த ஆப்பு ,நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க

எங்க தல தோனிக்கு விசில் போடுங்க ...வாரியர்ஸ் அணியை வென்றது சென்னை அணி
தலைப்பிற்கான செய்தி பார்க்கும் முன் இதை படிங்கள் ....பரபரப்பான நேற்றைய  ஆட்டத்தில் சென்னை அணி வழக்கம் போல் இறுதி போட்டியில் வென்று அரை இறுதிக்கு நுழைந்தது .
               வாரியார் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பேட் டிங்கை தொடங்கியது பிட்ச் இன்று பௌலிங்கிற்கு சாதகமாக குறிப்பாக சுழல் பந்துக்கு உதவியது விஜய் வழக்கம் போல விஸ்வரூபம் எடுத்தார் . பெரிதாக விளையாடாத ஹசி இன்றைய ஆட்டத்தில் தான் திறமையை நிரூபித்தார் அவர்தான் அதிகபட்ச ரன் அடித்து 50 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் அடுத்து வந்த ரைனா கேட்ச் கொடுத்து வெளியேறினார் . பத்ரி மொக்கையை தொடங்கும் முன் ஆட்டம் இழந்தார்.
JP Kreusch சிறப்பாக பந்து வீசி  4 ஓவர் களில் மூன்று விக்கெட் எடுத்தார்  .




         
             தோணி சிறப்பாக ஆடி 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் .
குறைவான ஸ்கோர் வெற்றி புறும்  கட்டாயம்சென்னை அணி சிறப்பாக பந்து வீசி இறுதியில் பத்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .வாரியர்ஸ் அணி தோற்றாலும் 109 ரன்கள் எடுத்தால் அரையிறுதி தகுதி பெரும் 126 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு உறுதி செய்தது .நம்ம தல தோணி ஒரு ரன் அவுட் , இரண்டு stumping  என அதிரடியாக வெற்றிக்கு உதவினார் ...
வரும் வெள்ளி கிழமை சென்னை அணி பெங்களூர் அணியை எதிர் கொள்கிறது .
    எப்படியோ இறுதி போட்டியில் இந்த முறை ஒரு இந்திய அணி உறுதி ....
நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க ......இந்த விளம்பரம் தான் குழந்தைகள் தற்போது முனுமுனுக்கும் பாடல் நமக்கும் பிடிக்கும் பாருங்கள் .. எப்படியோ விக்டோரியா அணிக்கு இந்த இரு அணிகளும் ஆப்பு வைத்துவிட்டன ....

தினமலர் vs டோனி ;
           கடந்த வாரம் தினமலர் நாளிதழ் படித்த போது டோனி பற்றி ஜோதிடர் கணிப்பு என எழுதியிருந்தனர் அதில் டோனி champions league  போட்டியில் வெற்றி பெறமாட்டார் ,அவரின் இந்திய  கேப்டன் பதவி பறிபோகும் , புகழ் அழிந்துவிடும் இன்னும் கொடுமையாக டோனி அணியில் விளையாடமுடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என தோனிக்கு சூனியம் வைத்தார்கள் .  அதற்கெல்லாம் ஆப்பு வைத்தார் டோனி . முட்டாள் ஜோதிடர் பேச்சை கேட்டு கேவலாமாக எழுது நிலைக்கு ஆனது தினமலர் ......கௌண்டமணி மன்னன் படத்தில்குண்டூசி விகிரவன் எல்லாம் தொழிலதிபரா என்ற வசனம் தான் தினமலரை நினைத்தால் வருகிறது .
              எப்படிவெளிய சுற்றினாலும் போட்டி என்று வந்து விட்டால் முழு கவனம் செலுத்தும் ஒரு சில வீரர்களில் ஒருவர் தோணி ...அவருக்கு முன் வந்து கேப்டன் பதவிக்கு போராடிய யுவராஜ்  இப்போது அணியில் இல்லை காரணம் அவரது கவனம் இன்மை , பஞ்சாப் அணி கேப்டன் பதவி எப்போதே காலி .. ஆனால் /இந்திய மற்றும் சென்னை அணிக்கு டோனி தவிர வேறு ஒருவர் கேப்டன் என்று நினைத்து பார்க்க முடிகிறதா .. சச்சின் வழிகாட்டுதல் + செஹ்வாக் , ரைனா , கம்பீர்  இருந்தால் தோணி எதையும் சாதிப்பார் ..
                          கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் எந்திரன் டோனி தான் எப்பவும் .....
நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க ......

Thursday, September 2, 2010

மன்னனை கொன்ற மீன்- திக் திக் கதை

முகமது பின் துக்ளக் தொவ்லாபாத் என்று பெயரிடப்பட்ட தேவகிரி டெல்லிக்கு தெற்க்கே எழுநூறு மைல் இன்றைய கருநாடகத்தில் கோதாவரி நதிக்கு தெற்கில் உள்ளது இங்கு லட்சக்கணக்கில் டெல்லி மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு வர நாற்பது நாட்கள் ஆனது .

தன் தவறை விரைவில் உணர்ந்துகொண்ட துக்ளக் தன் தவறை உணர்ந்து டெல்லிக்கே தலைநகரை மாற்றினான் . டெல்லி திரும்பும் வழியில் ஏராளமான மக்கள் உயிரை விட்டனர் . டெல்லியும் ஆங்காங்கே பாழடைந்து போக அதையும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.


தலைநகரை மாற்ற என்ன காரணம் என்பது ஒரு கொடூரமான தமாஸ்
அதை இப்போது பார்ப்போம் :

ஹைதரபாத் கவர்னராக இருந்து வந்த முகமது பின் துக்ளக்கின் அத்தை மகன் பகாவுதீன் இவரை எதித்து கிளர்ச்சி செய்தான் . இதை அடக்க முகமது பின்துக்ளக்கின் ஒரு படையை அனுப்பினான் பின் அவனை பிடித்து முகமது பின்துக்ளக்கின் முன் நிறுத்தினர்.



முகமது பின் துக்ளக்கின் கோபத்தை பற்றி சொல்லவேண்டுமா அவனை சாட்டையால் விறகாகும் வரை அடித்து பகாவுதீன் தோல் உரிக்கப்பட்டு உடலை துண்டாக்கி வானை எண்ணையில் போட்டு வறுத்து அவனது மனைவி , குழந்தைகள் பலவந்தமாக உண்ண வைத்தான் .

தோலை உரித்து வைக்கோல் வைத்து தைத்து கோட்டை உச்சியில் தொங்கவிடப்பட்டது .

கலவரம் செய்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று இப்படி செய்தான் .
எங்கோ வடக்கில் இருந்து இந்தியாவை ஆள முடியாது மத்திய இந்தியாவில் இருந்தால்
இத்தகைய கலவரங்களை தடுக்க முடயும் ,எனவே தன் தலை நகரைதேவகிரிக்கு மாற்ற முடிவுசெய்தான்.

அமைச்சர்களும் தங்களது தலையை காத்துக்கொள்ள எதுவும் மறுப்பு சொல்லவில்லை.

தலைநகரை மாற்றுவதன் மூலம் இந்தியாவை ஆண்டுவிட முடியாது ,
ராஜ தந்திரமும் நிர்வாக திறமையும் வேண்டும் என்பது ஏனோ முகமது பின் துக் லக் கிற்கு தெரியாமல் போனது.


அவன் இறுதியில் வாழ்க்கையை மீன் தான் முடித்தது .


Twitter updates:
நமது பாதம் நம்முடைய முன்கை அளவு இரண்டும் சம நீளம் கொண்டவை . 


Your foot is the same length as your forearm. #iTweetFact


அப்படியா...

Wednesday, September 1, 2010

பிரச்சினைகளை எளிதில் வெல்வது எப்படி?

முடிந்தவற்றை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தை நினையுங்கள் . இந்த நேரத்தை திட்டமிட பயன்படுத்துங்கள். என்னென்னிக்கு எதெதை எந்த நேரத்தில் முடிப்பது என திட்டமிடுங்கள். திட்டத்தை பற்றியே நினையுங்கள். திட்டப்படி முடித்தல் முக்கியம் என ஆழ்மனதில் பதியும்.  திட்டப்படி வேலைகள் முடியும்.

 அதை பற்றிய கவலையை விடுங்கள். வருவது வரட்டும் -  உலகில் பிரச்னையின்றி வாழ முடியாது. பெரும்பாலான பிரச்னைகள் நாமே உருவகப்படுத்திக் கொள்ளும் பேய்கள்தான். ஐயோ, பிரச்னை வாட்டுதே என கதறுகிறீர்களா? தீர்வே கிடையாதா என தேம்புகிறீர்களா? நான் சொல்வதை அப்படியே கடைபிடியுங்கள். இப்பொழுது, உங்கள் கவலைகளை எல்லாம் ஒரு காகிதம் எடுத்து எழுதுங்கள்.

அதை பத்திரமாய், கவர் எடுத்து அதில் போட்டு எங்காவது மறைத்து வையுங்கள். அந்த கவலை பற்றி நினைப்பு வரும்போது ""அட! அந்த கவலைதான் கவரோடு போச்சே,'' என்று ஜாலியாக குதித்திடுங்கள் சிம்பிள்.
சும்மா, காமெடிக்கு சொன்னேன். நிஜமாகவே உங்களுக்கு கவலைகள் தீர வேண்டும் என்றால் இவைகளை கடைபிடியுங்கள். கவலைகளை எழுதி மறைத்து வையுங்கள். இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து திறந்து பார்த்தால் போதும் ஓகே.,
இனி வழிகள்
99 சதவீதம், பெரும்பான்மை பிரச்னைகள் ஒரே ஒரு விஷயத்தில் மாயமாகிவிடும். உங்கள் கடமையை தள்ளிப் போடாமல், தவிர்க்காமல் உடனே செய்திடுங்கள் - அன்றன்றே! அவ்வப்போதே.
ஒரு எண்ணம், எழும் போது அது சோகமான, எதிர்மறையான, துன்பம் மிகுந்த, வேதனைகளை கிளறும் எண்ணம் என்றால் உடனே "ஏய் நிறுத்து. இந்த எண்ணம் வேண்டாம்' என உங்கள் மனதிற்கு கட்டளையிடுங்கள். யாரையும், உங்களுக்கு துன்பம் இழைத்தவரையும் கூட திட்டாதீர்கள்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்களால் முடிந்த தர்மம், உதவியை கட்டாயம் செய்யுங்கள். ஒரு பொழுதுபோக்கை கடைபிடியுங்கள்.

உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்துதெரிந்துகொள்ள ..

Psycology மூலம் உங்கள் குணாதிசயத்தை பிறந்த மாதத்தை வைத்து தெரிந்துகொல்லாம்

சமீபத்தில் இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வில் நமது பிறந்த மாதத்தை வைத்து நமது குணநலன்களை கண்டறியமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் , இதோ நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்களுக்கு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்...


ஜனவரி - -----அமைதியை விரும்புபவர் அமைதியானவர் .

பிப்ரவரி ------- விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்

மார்ச்---------- அறிவில் சிறந்தவர் ,எளிதில் கற்றுக்கொளும் திறன்

ஏப்ரல்--------- அதிகாரம் மிக்க ஆனால் கொஞ்சம் முட்டாள்தனம் உடையவர்

மே-----------அதிர்ஷ்டம் மற்றும் பிறருக்கு உதவும் குணம்

ஜூன்- -------- அன்பானவர் ,போராட்டகுணம் உடையவர்

ஜூலை-------- பேரறிவு கொண்டவர்

ஆகஸ்ட் --------- சிறப்புடையவர் ஆனால் சோம்பேறி

செப்டம்பர்- ------ஆச்சர்யப்படும் குணம் கொண்டவர்

அக்டோபர்----------கர்வம் மிக்க ஆனால் உதவும் குணம் கொண்டவர்

நவம்பர்- -----------எல்லோரையும் அரவணைத்து செல்லும் குணம் கொண்டவர்

டிசம்பர்- -------------புத்திசாலி ஆனால் silly ..

Twitter Corner:
சராசரியாக பெண்கள் ஒருநாளைக்கு 7000 வார்த்தைகளும் ஆண்கள்  5000 வார்த்தைகளும் பேசுகின்றனர்.
#iTweetFact :The average woman speaks about 7,000 words per day. The average man speaks about 2,000. 


பேச்சுரிமை இயற்கை அதிகம் பெண்களுக்குத்தான் கொடுத்துள்ளதோ ...
Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails