Pages

Saturday, August 29, 2009

பயம் -- சிறுகதை

பயம்
--------

"டேய் சுந்தர்.. என்னடா இது?!"

"தெரியலியேம்மா..!"

அப்போதுதான் ஊருக்குப் போய் இறங்கியிருந்தேன். பை சூட்கேஸ் எல்லாம்
வைத்துவிட்டுப் பல் தேய்த்து முகம் கழுவி பாட்டி கையால் திவ்யமான டிபன்
சுடச்சுடச் சாப்பிட்டு குளிக்கக் கிளம்பியதும் பாட்டி வந்து ப்ரேக் போட்டார்.


"அதெல்லாமொன்னும் வேண்டாம். சாப்ட்டு குளிச்சா சவுண்டிக்கொத்தன்பா.
குளிக்காம்ப்போய் ஒம் ப்ரெண்டுகளை(BRENDU)ப் பார்த்தா ஒன்னும்
கொலைக்குத்தமாயிறாது"

முழுக்கைச் சட்டையின் கைப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு கிளம்ப
யத்தனித்தபோது.. திமுதிமுவென ஏழெட்டுப் போலீஸ்காரர்கள் நுழைய, ஏகக்
கலவரமாகிவிட்டது.

"ஹலோ சார், என்ன இப்படி, என்ன ஆயிற்று...."

என் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்க அவர்கள் அங்கே இல்லை. இந்த
வார்த்தைகளை முடிப்பதற்குள் அவர்கள் பூட்ஸ் காலோடு ஸ்வாமி ரூம் வரை போய்
விட்டார்கள்.

"சே.. என்ன எழவுடா இது?!"

பின்தொடர்ந்து போய் தொங்கியதில் வாரண்ட் காட்டினார்கள். தடை
செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் அல்லது போதைப் பொருட்கள் வைத்திருப்பதான
சந்தேகம் கிட்டத்தட்ட உண்மை என்னும் அடிப்படையில் வழங்கப்பட்ட ஸர்ச்
வாரண்ட்.

"பகவானே! கிருஷ்ணா! குருவாயூரப்பா?!..." பாட்டி குரல்.

"பாட்டி ஒண்ணும் கவலைப்படாதீங்க நாங்கல்லாம் எதுக்கிருக்கோம்"

"அம்மா ஏதாச்சும் பணம் வெச்சிருக்கியா?"

"எங்கிட்ட ஏதுடா? அந்தக் கடங்காரன் வேற எல்லாப் பொட்டியையும் சீல்
வெச்சுட்டான்"

சுவாமி ரூம் அருகே இருந்த சிறு பிறையில் கையை விட்டேன். கையில் ஒரு
ஐந்து ரூபாய் நாணயமும் ஒரு ஒரு ரூபாய் நாணயமும் வேறு சில நாணயங்களும்
சிக்கின. படக்கென்று பையிலிட்டு நைசாக நழுவினேன்.

"சுந்தர் இருடா நானும் வரேன்." அம்மாவும் கிளம்பினாள்.

"சரி வா.."

"அம்மா, நீ பதினைந்து நாளுக்கு முன்னால ஒரு கொலையைப் பார்த்தேன்னு
சொன்னேல்லியா?"

"ஆமாம்."

"இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்."

"எப்படி?"

"பின்ன என்னம்மா? பட்டப் பகல்ல மட்ட மத்தியானத்துல ஒருத்தனை வெட்டிக்
கொன்னுருக்காங்க. காய்கறி வாங்கப் போன நீ ஒளிஞ்சிருந்து அதைப்
பாத்துருக்க. அங்க அந்தநேரத்துல ஆளுங்களும் யாரும் இல்லை."

"அப்பா?! அதை நினைச்சாலே எனக்குக் கொலை நடுங்குது."

"நிச்சயமா ரொம்பப் பெரிய ஆள்தான் இதைச் செய்திருக்கணும்."

"எப்படிடா அவ்வளவு தீர்மானமா சொல்லர"

"பின்ன என்னம்மா, ஒரு பத்திரிகையிலகூட இதைப்பத்தி செய்தி வரல.
ஜனங்களுக்கும் தெரிஞ்சமாதிரி தெரியல. ஒரே மர்மமா இருக்கு."

"அரசியல்வாதியா இருக்குமோ?"

"அப்படிதான் நான் நினைக்கிறேன்."

அதற்குள் கடைவீதி நெருங்கிவிட்டது.

"சரிம்மா, நீ பாட்டி கூட இரு. வீட்ல எல்லாரையும் பயப்படாம இருக்கச்
சொல்லு. நான் ஒரு ·போன் பண்ணிட்டு வந்துடறேன். சரியா?"

"சரிப்பா.."

நடக்கும் போதே திட்டங்கள் மனதில் பரபரவென உருவாயின.

'நார்க்கோட்டிக்ஸ், வெப்பென் ஹேண்ட்லிங் இரண்டுமே நான் பெயிலபிள்
செக்ஷன்கள். உள்ளேபோனால் பகவானே கண்திறந்தாலொழிய வெளியேவர வேறு
வழியில்லை.பாவிகள் திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறார்கள்.'

'என்ன, உன் அம்மா கோர்ட்டுக்கு வந்தால் உள்ளே தள்ளிவிடுவேன் என்று
மிரட்டலாம், அல்லது வெளியே வரவேண்டுமானால் உறுதிமொழி கொடு என்று
கேட்கலாம், மறுத்துப் பேசினால் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல்
உள்ளேயே வைத்துவிடும் வாய்ப்பும் உண்டு.'

'முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவுள்ள நண்பர் யோகேஸ்வரனிடம்
போனில் விவரம் சொல்லவேண்டும். இதை ஒரு க்ரைஸிஸ் சிச்சுவேஷண் போலக்
கொண்டு போனால்தான் வேலைக்காகும்.'

'அப்புறம் உடனடியான அண்ணனுக்கு விளக்கமாக ஈ-மெய்ல் அனுப்பவேண்டும். அவன்
எம்பஸி மூலமாக எப்படியாவது விபரத்தை ஜனாதிபதி வரைக் கொண்டு
செல்வான்.'

'இல்லைன்னா இன்னொன்ணு செய்யலாம். பேசாம நம்ம அட்ரஸ் புக்கிலுள்ள அனைத்து
அட்ரஸ¤க்கும் அனுப்பிவிடுவோம். மெயில் டு ஆல் அடரஸ்ஸஸ் ஆப்ஷண் தான்
இருக்கவே இருக்கிறதே? நண்பர்களோடு சேர்த்து அகத்தியர், மரத்தடி,
பொன்னியின் செல்வன் முதலான குரூப்புகளுக்கும் போகும். ஏதாவது வழி
கிடைக்கும்.'

டெலி·போன் பூத்தை நெருங்கினேன். ரிஸீவரைக் கையிலெடுத்து
வைத்துக்கொண்டு நம்பர்களை வேக வேகமாக டயல் செய்தேன். ரிங்
போய்க்கொண்டேயிருந்தது. திடீரென்று மண்டைக்குள் ஷாக்கடித்தது போல் ஒரு
உணர்வு. மூளைக்குள் அசரீரிபோல் ஒரு குரல்,

'டேய் நீ கண்டது கனவு'

உடனே ரிஸீவரை வைத்த்துவிட்டேன். திடீரென்று, அறிவு வேலை செய்ய
ஆரம்பித்தது.

'முட்டாளே, இது கனவென்றால் வீட்டிலிருந்து இங்கே எதற்காக வந்தாய்?
நீயென்ன தூக்கத்திலா நடந்து வந்தாய்? லூசாடா நீ?'

"என்ன இழவுடா இது?" தலையிலடித்துக்கொண்டேன்.

ரொம்ப ஓங்கி அடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். நெற்றியில்
எரிச்சலெடுத்தது. விழிப்புத் தட்டிவிட்டது.

'சே! எல்லாம் தூங்கப்போகும்போது டி.வி சீரியல் பார்த்ததால் வந்த வினை.'

---காசிநாதன் ரங்கநாத்


1 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

ஓ! வேறு ஆள் எழுதிய கதையா? கதையோட்டம் தெளிவாக இல்லை. அதோடு கனவு சப்ஜெக்ட் அரத பழசு!

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails