Pages

Saturday, October 9, 2010

கணிணி வேகம் அதிகரிக்க Free Registry Cleaner

         நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ Game சாப்ட்வேர் அல்லது நமக்கு தேவையான சாப்ட்வேர்களை  புதிதாக நிறுவி  இருப்போம்  .ஒவ்வொரு software நம் கணிணியில் நிறுவும் போதும் முதலில் தேவையான இடம்  harddisk ல் இருக்கிறதா என முதலில் பார்க்கும், பிறகு அங்கு அதன்  entry பதிவுசெய்யும் நமது கணிணி ஒவ்வொரு முறை boot ஆனதும் முதலில் இந்த  register entry சரிபார்த்து நம் நிருவியுள்ள சாப்ட்வேர்களை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் .சிலநாட்களில் ஒருசில சாப்ட்வேர் களை  Delete செய்து அடுத்த சாப்ட்வேர் நிறுவுவோம்  . நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும்.

           ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software  ஐ  ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் அங்கு சென்று சில நொடிகள் சோதித்து பின்  செயல்பட தொடங்கும் .நாம் Uninstall செய்து நீக்கிய அந்த சாப்ட்வேர் registry error இதற்க்கு காரணம் இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது , இதனை கண்டறிந்து நீக்க registry cleaner எனப்படும் சாப்ட்வேர் இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்  .
          கீழே உள்ள லிங்க் மூலம் அதனை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். இன்னும் புது Version கள் உள்ளன ஆனால் அவை இலவசமாக கிடைப்பதில்லை .
                Free Registry Cleaner 4.20.9 freeware download
             இதனை உங்கள் கணிணியில் நிறுவி ஒருமுறை உபயோகித்து பாருங்கள் உங்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கும்,  எத்தனை error காட்டும் அதை நீக்கியதும் உண்மை  வேகம் தெரியும் கணிணியில் இருக்கவேண்டிய அவசியமான ஒன்று....                                  
              பயன்பாடுகள் :Registry clean startup manager,uninstall manager ,process manager என இவற்றை நிர்ணயிக்கும் வசதியும் உண்டு ..
             Uninstall manager-- தேவையற்ற software uninstall செய்ய பயன்படும் task manager சென்று நீக்க தேவை இல்லை .இதனை கணிணியின் கிங் என்று சொல்லலாம் ..
                  உங்கள் நண்பர்களின் கணிணியில் நிறுவி அவர்களுக்கு இதனை பயன்படுத்தி காண்பித்து  ஆச்சர்யம் அளிக்கலாம் அந்த அளவிற்கு உபயோகமானது.. 
அடுத்து  வருவது :
          குட்டீஸ்  உங்களது  I phone , Mobile போன்றவற்றை எடுத்து விளையாடும் போது அதனை பாதுகாப்பாக கொடுப்பது எப்படி என்று  பார்க்கலாம் .                                                                                                 
           Registry Cleaner பற்றி இன்னும் ஒரு பதிவு கூட போடலாம் அவ்வளவு பயனுள்ளது.இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்  என்றால் comment ல்  சொல்லுங்கள் விரிவாக அடுத்து பார்ப்போம் .         
          இந்த சாப்ட்வேர் பற்றி அனைவரிடமும் சொல்லி பயன்படுத்தசொல்லுங்கள் நண்பர்களே..
        இந்தியா ஆஸ்திரேலியா இடையே தற்போது நடக்கும் கிரிக்கெட்  போட்டியையும் இங்கு கண்டுகளிக்கலாம்  .        click here live cricket watch      
         கடந்த பதிவில் என்னிடம் உள்ள  RAM வேகத்தை அதிகரிக்கமுடியுமா ? எப்படி என் சந்தேகங்களுக்கு விடையளிக்கமுடியுமா என கேட்ட  நண்பர்  பாஸ்கர் உங்களுக்கு நன்றி விரைவில் பதில் அளிக்கிறேன் ...
         மேலும்  கணிணி பற்றிய உங்களின் சந்தேகங்களை குறிப்பிட்டால் பதிவிலோ , மெயில் மூலமாகவோ எனக்கு தெரிந்த அளவிற்கு தெரியாதவற்றை நண்பர்களிடமிருந்தோ பெற்று  பதில் அளிக்கிறேன். 
 புதிய பதிவு( Upcomming post) படித்துப்பாருங்க ..
கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிப்பது எப்படி?
          உங்கள் கருத்துக்களை  பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு  பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ...  என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி  ... 
அவசியம் படிங்க :

பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவ

6 comments:

Unknown said...

நல்ல தகவல்.. நன்றி..

பொன் மாலை பொழுது said...

I like it . Thanks a lot dude!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு & கக்கு - மாணிக்கம் .....உங்கள் நண்பர்களுக்கு இதனை பயன்படுத்த சொல்லுங்கள் ..

ம.தி.சுதா said...

நல்லதொர தகவல் என் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தகிறேன்....

ம.தி.சுதா said...

தங்களது வெட்வெரிபிக்கேசனை எடுத்தால் கருத்திட இலகுவாய் இருக்கம் சகோதரா...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வெட்வெரிபிக்கேசனை நீக்கிவிட்டேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ம.தி.சுதா....

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails