தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி வருகிறது என்பதற்கு இந்த பதிவு சிறந்த உதாரணம் . நாம் வைத்திருக்கும் pdf file ஐ நாம் படிப்பதற்கு பதில் கணிணியை படிக்கவைத்து அதை நாம் கேட்டால் இன்னும் எளிது . இது எப்படி என்று பார்க்கலாம் .PDF File Tricks இது ரொம்ப ஈஸி எப்படி என்று பார்க்கலாம்
உங்களிடம் இருக்கும் Adobe reader 6.0 version + அதற்கு மேற்பட்ட Version இருக்கவேண்டும் இதுதான் முக்கியம். தற்போது Adobe reader 9.0 பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
ஏதேனும் ஒரு PDF File லை Adobe reader இல் Open செய்து பிறகு
View சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .
சரியாக இயங்காவிட்டால் கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .
Keyboard Shortcuts (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )
1.Ctrl+Shift+V -- Read this Page only
2.Ctrl+Shift+B -- Read till End of Document
3.Ctrl+Shift+C -- Pause Reading
4.Ctrl+Shift+E -- Stop Reading
எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?
Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது .. நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது . இதெற்கென பல்வேறு வாய்ஸ் கள் கிடைக்கின்றன நமக்கு விருப்பம் போல் பல்வேறு அழகிய voice Download செய்து மாற்றிக்கொள்ளலாம் . Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது நமக்கு வருத்தாமான விஷயம் ,..
அடுத்த பதிவில்:
Read Out Loud என்ற தொழில்நுட்பம் என்றால் என்ன பல குரல்களை இதில் பயன்படுத்துகிறார்களே எப்படி எண்டு அடுத்த பதிவி காணலாம் ...
3 comments:
பரவாயில்லயே.. முயற்சி பண்ணிப் பார்க்கறேன்..
நான் கணினிக்கு புதுசு. ஆயினும் முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி
Dhosai ,பதிவுலகில் பாபு ,ARUNMOZHI DEVAN நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முயசித்து பாருங்கள் கண்டிப்பாக படிக்கும் ..
Post a Comment