Pages

Sunday, October 24, 2010

கணிணி பாதுகாப்பு வழிகள் -2

முதல் பகுதியை படிக்க ..
 கணிணி பாதுகாப்பு வழிகள் -part I
             இவை அனைத்தையும் முழுமையாக பின்பற்றுவது இயலாது என்றாலும் நமக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எழும் போது தீர்வு காண இது உதவும் பெரும்பாலானவை அன்றாடம் நம் சந்திக்கும் நிகழ்வுகள்தான் ஒரு சில மட்டும் அரிதாக நிகழ்பவை சில நமக்கு தெரியாமலேயே நடப்பவை ..
 கம்ப்யூட்டரைப் பாதுகாக்க சிறந்த வழிகள் -part II
14. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே ஆகிறதா ? அவற்றை நிரந்தரமாக நிறுத்திவிடுங்கள் . ஆட்டோ ரன் எளிதாக நிறுத்திவிடலாம். ஆட்டோ பிளே நிறுத்த ட்வீக் யு.ஐ. (Tweak UI) பயன்படுத்தலாம்.

15. விண்டோஸ், தான் இயங்கும் போது பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் பாருங்கள் . தேவையற்றது அல்லது நீங்கள் அறியாதது என்று இருப்பின் அதனை நிறுத்தலாம். அதனால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு பிரச்சினை இல்லை என்றால் நீக்கி வைக்கலாம்.
                16. உங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்திகளில் ஏதேனும் லிங்க் கொடுத்து அவற்றைக் கிளிக் செய்திட உங்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறதா? அவசரப்பட்டு உடனே கிளிக் செய்திட வேண்டாம். அனுப்பியவர் நம்பிக்கைக்குரியவர் என்றாலே கிளிக் செய்திடவும்.

17. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன் படுத்துங்கள். வேகமாகவும் இயங்குபவை இவைதான்.


19 ..ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க இது உதவுகிறது.
20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகிறீர் களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

              21. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களை  பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

22. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
23. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.
                  24. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர்பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 ஆகியவை மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

25 .முடிந்தவரை unix OS  பயன்படுத்தினால் மேற்கூறிய பெரும்பாலான பிரச்சினைகளை மறந்துவிடலாம் . Windows பயன்படுத்துபவர்கள் Antivirus நிறுவியிருந்தாலும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
.
  தண்டர்பேர்ட்,ட்வீக் யு.ஐ. (Tweak UI) பற்றி அடுத்தபதிவில் காணலாம் .
இலவசமாக கிடைக்கும் உபுண்டு பயன்படுத்தினால் 90 இதுபோன்ற பிரச்சினைகள் வராது .இவையெல்லாம் விண்டோஸ் பயனாளர்களுக்கு ஏற்படுபவை.புதிதாக வந்துள்ள உபுண்டு 10.10  பல  புதிய  வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள்ளது ..

4 comments:

ப.செல்வக்குமார் said...

// 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.
//

இது புதுசா இருக்குங்க .. ஆனா தேவைப்படாதுன்னு நினைக்கிறேன் .. இருந்தாலும் பயனுள்ள தகவல் ..!!

ப.செல்வக்குமார் said...

// தண்டர்பேர்ட்,ட்வீக் யு.ஐ. (Tweak UI) பற்றி அடுத்தபதிவில் காணலாம் .//

சொல்லுங்க சொல்லுங்க ..!!

ABDUL said...

நண்பரே நான் hp லேப்டாப் விண்டோ 7 பயன்படுத்துகிறேன் .டெஸ்க்டாப் பில் உள்ள போல்டெர் களை open பண்ணுவதற்கு ரொம்ப நேரம் ஆகிறது .இதற்க்கு வழி சொல்லவும் .

புதிய மனிதா. said...

ABDUL read this http://maavalingai.blogspot.com/2010/10/7-folderfile.html

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails