Pages

Sunday, October 10, 2010

கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க

       நமது கணிணியை குழந்தைகள் அல்லது பிறரோ பயன்படுத்தும்போது அவர்கள் என்னென்ன தளங்களுக்கு செல்கின்றனர் அவர்களின் username , password உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிக்கலாம் .

          கணிணியில் உள்ள keyboard ல் அவர்கள் type செய்யும் அனைத்தையும் இந்த software பதிவுசெய்துகொள்ளும் . இதன்மூலம் அவர்கள் செல்லும் விரும்பத்தகாத தளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்யலாம் ,
இந்த keylogger இன்ஸ்டால் செய்துருப்பதை Desktop, Add/Remove Programs, Control pane போன்றவற்றிலும் கண்டறியமுடியாது என்பது இதன் சிறப்பாகும்.                     ஒன்றிற்கு மேற்பட்ட user களை கண்காணிக்கலாம் .

செயல்படும் விதம்:
                  கணிணியில் நிறுவி start & stop time கொடுத்து விடுங்கள் , கணிணியில் உள்ள keyboard செயல்பாடுகளை கண்காணித்து பதிவுசெய்துகொள்ளும் இதில் நாம் mail Id கொடுத்தால் அந்த முகவரிக்கு யாரும் படிக்கமுடியாத வகையில் Encrypted Format அனுப்பிவிடும் நாம் அதனை பார்த்து முழுவிபரங்கள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கைகளை கண்டறியமுடியும் ..
      இதனை தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தவும் .

          தற்போது username , password கண்டறிய hackkers பயன்படுத்தும் எளியவழி இதுதான் . தற்போது remote installation முறையில் இதனை install செய்துவிட்டால் உங்கள் அனைத்து விபரங்களும் அவர்களுக்கு சென்றுவிடும் . சாட்டிங் போது hackers கவனத்தை திசைதிருப்பி இன்ஸ்டால் செய்துவிடுவார்கள் இதனை அவ்வளவு எளிதில் கண்டறிய இயலாது என்பதால் உங்கள் கணிணியில் பிறர் இதனை நிறுவி கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது . இது இலவசமாக பலதளங்களில் கிடைப்பது கூடுதல் தகவல் .

          எனவே உங்கள் கணிணியில் keylogger software நிறுவப்பட்டுள்ளதா ? என்பதை தெரிந்துகொள்வது அவசியம் ....
            அடுத்த பதிவில் kelogger உங்கள் கணிணியில் நிறுவப்பட்டுள்ளதா? என்பத கண்டறியும் முறை, குழந்தைகளுக்கு ஏற்ற இணைய தளங்களை மட்டும் பயன்படுத்துமாறு நிறுவுவது எப்படி என அடுத்து காணலாம் ....
       
           இப்போது சில spyware கள் இலவசமாக இணையதளங்களில் இலவசமாக கிடைக்கின்றன அவற்றை சாட்டிங் போது இணைய தல முகவரியுடன் இணைத்து அவர்களை click செய்யவைதால் போதும் பிறகு அவர்கள் கணிணி control முழுவதும் நம்கையில் இங்கிருந்தே அவர்களின் monitor நமக்கு தெரியும் அப்புறம் என்ன அதில் புகுந்து விளையாடலாம்.
         கடந்த வாரம் chating வந்த கேரள பையனின் கணிணிக்கு spyware அனுப்பி அவனது கணிணியை restart , reboot என கதறவிட்ட என் கல்லூரி நண்பனிடம் எப்படி என்று தெரிந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

              இதுபோன்ற சில தொழில்நுட்ப தகவல்கள்ஒதுக்கிவிடாமல் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் அப்போதுதான் நம் கணிணி ,வலைத்தளம் போன்றவற்றை  காத்துக்கொள்ள முடியும் ..
படித்து பாருங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று 

பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவ

.

1 comments:

Sulaxy said...

நண்பா இந்த மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும் முகவரியை தந்து உதவ முடியுமா?
mail id :- kneroje@yahoo.com

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails