Pages

Friday, October 8, 2010

பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவ


Trailer: குழந்தைகள் கணிணியில் என்னென்ன செய்கிறார்கள் என்று அவர்களது நடவடிக்கைகளை கண்டறிவது பற்றி தெரிந்துகொள்வது எப்படி ? அவற்றை நமது email மூலம் தெரிந்துகொள்ளலாம் அதனை  அடுத்த பதிவில் பார்க்கலாம் ...

கணிணியை பாதுகாக்கும் முறை பற்றி பார்த்தாகிவிட்டது கணினிக்கு வைரஸ் வர முதன்மை & பெரும்பான்மை காரணம் இணையதளம் மட்டுமே (இறுதியில் இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் புரியும்).  அடுத்து USB port . இணையதளத்தில் கணிணியை பாதுகாப்பாக பயன்படுத்தினாலே பெரும்பாலான பிரச்சினைகளை தடுக்கலாம் . அதற்க்கான முயற்சி தான் இது . எனக்கு தெரிந்த சில தகவல்களை கொடுத்துள்ளேன் .

1.முதலில் சிறந்த பாதுகாப்பான Anti-virus /Firewall உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளுங்கள் , வாரம் இருமுறை உங்கள் கணினியை scan செய்யுங்கள்.

2.விண்டோஸ் பயன்படுத்துவதை விட Linux / unix OS (UBUNDU,SUSE,MANDRIVA) நிறுவிக்கொள்ளுங்கள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது இரண்டையும்கணினியில் நிறுவி இணையதள பயன்பாட்டுக்கு Linux பயன்படுத்தலாம்.

3.பெரும்பாலான வைரஸ் கள் விண்டோசை குறிவைத்து உருவக்கபடுவதே இதற்கு காரணம்.Linux ஸை வைரஸ் அவ்வளவு எளிதில் பாதிக்காது.

4.கணினியில் Internet Explorer இருந்தாலும் கூடுதலாக Firefox அல்லது Google crome Browser நிறுவிக்கொள்ளுங்கள் ஏனெனில் மேற்கூறிய வைரஸ் காரணம் இதற்கும் பொருந்தும்.

5.இணையதள முகவரியை டைப் செய்யும்போது கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் பிரபல தளத்தின் முகவரியில் ஓரிரு எழுத்துக்கள் மட்டும் மாற்றி வைத்திருப்பார்கள் அவ்வாறுசெல்லும்போது வைரஸ் பதிப்பை உண்டக்கிவிடுவார்கள்.
6.கேம்ஸ் டவுன்லோட் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை ,பாதுகாப்பான (Brothers soft,cnet) போன்ற இணைய தளங்களில் மட்டும் Download செய்யுங்கள் , பெரும்பாலான இணையதளங்கள் இலவசம் என்ற பெயரில் வைரஸ் இணைத்து விடுவார்கள், மேற்கூறிய தளங்களில் இவை நிகழ்வதில்லை.

7.POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் popup     disable option தேர்வுசெய்துவிடுங்கள்  .
8.புது software ,games போன்றவற்றை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் , குறிப்பாக இன்ஸ்டால் செய்யும் போது Agreement எவ்வளவு பெரியதாக இருந்தாலும் முழுவதும் படித்துவிட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.

9.Community Websites செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள் தற்போது அவற்றில் இருந்துதான் மிக அபாயகரமான வைரஸ்கள் வருகின்றன .

10.இணையத்தளத்தில் Social Engineering Techniques எனப்படும் இணையதள உபயோகிப்பாளர்களின் weakness ஆன ஆபாச படங்கள், கண்கவரும் படங்கள், illegal copy of  softwares,flashanimations, love ,sex,success contents போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வைரஸ்களை உருவாக்கி அத்துடன் இணைத்து விடுகின்றனர் .இதுதான் தற்போதைய வைரஸ் பரப்பும் புதிய தொழில்நுட்பம் .(இதைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம்)

இவற்றை பின்பற்றி  இணையத்தளத்தில் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தலாம் . 

 அப்படியே கீழே உள்ள படத்தை பாருங்கள் சீனா ,US, ரஷ்ய நாடுகள் பாதுகாப்பற்ற பல இணையதளங்களை கொண்டிருக்கும் தகவல் உள்ளது .

அதிலும் சீன இணையதளங்கள் செல்லும் போது மிக்க கவனம் தேவை .  அட இதெல்லாம் ரொம்ப அவசியமா ? இதெல்லாம் பார்த்து போகமுடியுமா என்று கேட்பவர்களுக்கு ..
  இதை பற்றிஅடுத்த பதிவில் காண்போம் . விரைவில்...

4 comments:

ம.தி.சுதா said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நன்றி ம.தி.சுதா ..

ARUNMOZHI DEVAN said...

என் போன்ற புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள் தகவல்கள் ஆகும். தகவலுக்கு நன்றி

Jaleela Kamal said...

தகவலுக்கு நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails