Pages

Wednesday, September 1, 2010

பிரச்சினைகளை எளிதில் வெல்வது எப்படி?

முடிந்தவற்றை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தை நினையுங்கள் . இந்த நேரத்தை திட்டமிட பயன்படுத்துங்கள். என்னென்னிக்கு எதெதை எந்த நேரத்தில் முடிப்பது என திட்டமிடுங்கள். திட்டத்தை பற்றியே நினையுங்கள். திட்டப்படி முடித்தல் முக்கியம் என ஆழ்மனதில் பதியும்.  திட்டப்படி வேலைகள் முடியும்.

 அதை பற்றிய கவலையை விடுங்கள். வருவது வரட்டும் -  உலகில் பிரச்னையின்றி வாழ முடியாது. பெரும்பாலான பிரச்னைகள் நாமே உருவகப்படுத்திக் கொள்ளும் பேய்கள்தான். ஐயோ, பிரச்னை வாட்டுதே என கதறுகிறீர்களா? தீர்வே கிடையாதா என தேம்புகிறீர்களா? நான் சொல்வதை அப்படியே கடைபிடியுங்கள். இப்பொழுது, உங்கள் கவலைகளை எல்லாம் ஒரு காகிதம் எடுத்து எழுதுங்கள்.

அதை பத்திரமாய், கவர் எடுத்து அதில் போட்டு எங்காவது மறைத்து வையுங்கள். அந்த கவலை பற்றி நினைப்பு வரும்போது ""அட! அந்த கவலைதான் கவரோடு போச்சே,'' என்று ஜாலியாக குதித்திடுங்கள் சிம்பிள்.
சும்மா, காமெடிக்கு சொன்னேன். நிஜமாகவே உங்களுக்கு கவலைகள் தீர வேண்டும் என்றால் இவைகளை கடைபிடியுங்கள். கவலைகளை எழுதி மறைத்து வையுங்கள். இன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து திறந்து பார்த்தால் போதும் ஓகே.,
இனி வழிகள்
99 சதவீதம், பெரும்பான்மை பிரச்னைகள் ஒரே ஒரு விஷயத்தில் மாயமாகிவிடும். உங்கள் கடமையை தள்ளிப் போடாமல், தவிர்க்காமல் உடனே செய்திடுங்கள் - அன்றன்றே! அவ்வப்போதே.
ஒரு எண்ணம், எழும் போது அது சோகமான, எதிர்மறையான, துன்பம் மிகுந்த, வேதனைகளை கிளறும் எண்ணம் என்றால் உடனே "ஏய் நிறுத்து. இந்த எண்ணம் வேண்டாம்' என உங்கள் மனதிற்கு கட்டளையிடுங்கள். யாரையும், உங்களுக்கு துன்பம் இழைத்தவரையும் கூட திட்டாதீர்கள்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்களால் முடிந்த தர்மம், உதவியை கட்டாயம் செய்யுங்கள். ஒரு பொழுதுபோக்கை கடைபிடியுங்கள்.

3 comments:

சிநேகிதி said...

அருமையான பதிவு

venkat said...

அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள். அருமையான பதிவு

r.v.saravanan said...

good good valthukkal

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails