Pages

Tuesday, September 28, 2010

குட்டீஸ் திறனை வளர்க்க உதவும் இணைய தளங்கள்-ஓர் பார்வை

      இன்றைய காலகட்டத்தில் நமக்கு எவ்வித சந்தேகம் வந்தாலும் கூகிள் , விக்கிபீடியா பெரும்பாலும் தீர்த்துவிடுகின்றன .   ஆனால் குட்டீஸ்    அடிப்படை திறன் களான  கணித திறன் ,புதிர்கள்  போன்றவற்றை வளர்ப்பது பற்றி பார்ப்போம் .    
   கணித பாடம் என்றாலே நம்மில் பலருக்கு  பயம் தான் அதிலும் அல்ஜீப்ரா (algebra)என்றால்  பயந்து ஓடிவிடுவோம் . குட்டீஸ்களுக்கு  அல்ஜீப்ரா , புதிர்கள் போன்றவற்றை நாம்  சொல்லி தருவது மிக கடினம் .
                      பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளி படிக்கும் போது வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி ஓய்வு நேரங்களில்  கதைகள், புதிர் கணக்கு சொல்லி கேள்வி கேட்ட்பார்கள்   அதற்கு பதில் சொன்னால் விரும்பும் பொருளை வாங்கி தருகிறேன் என்று சொல்லுவார்கள் . அவர்கள் அப்போது கேட்ட கேள்விகள் இப்போது வேலைக்கு செல்லும் போது Aptitude , logical reasoning ,puzzles வடிவில் வந்து  உதவுகின்றன , ஆனால் இப்போதுள்ள குட்டீஸ்களுக்கு இந்த வாய்ப்பு மிக குறைவு நமக்கு கிடைத்த தாத்தா , பாட்டி இவர்களுக்கு கிடைப்பதில்லை .  இப்போது அந்த குறைகளை தீர்க்க சில இணைய தளங்கள் வந்துவிட்டன .
                 எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
  • எண்கணித புதிர்கள் .
  • அல்ஜீப்ரா
  • ஜாமென்றி
  • லாஜிக் புதிர்கள்
  • கணித விளையாட்டுகள் ,
  • விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
  • சீட்டாட்ட புதிர்கள்
  • ஐன்ஸ்டீன் புதிர்கள்
  • கணித Dictionary
  • மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
  • வயதை கண்டறிதல் , நேரம்  கண்டறியும் புதிர்கள் 
  • எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
              முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள்  , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் .  இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
 நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக  கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .....
           மேற்கூறிய அடிப்படை திறன்கள்  குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை . 
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு 



 
 

 

 
 
http://www.funbrain.com/brain/MathBrain/MathBrain.html

 
 
http://www.amathsdictionaryforkids.com/
   இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில  கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ..

           உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க  விஷயம்.
அடுத்த பதிவில்  

ஏர்டெல் to ஏர்டெல் free sms அனுப்ப tips  & tricks

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails