Pages

Wednesday, September 29, 2010

இப்போ எந்திரன் அப்போ பழனி சினி வள்ளுவர் ரஜினி படம் முதல் நாள்


.முதல் நாள் இரவுக்காட்சி பார்த்த வாய்ப்பு சிவாஜி படம் வெளியானபோது . பழனியில் பணிபுரிந்தபோது சிவாஜி ரிலீஸ் இதற்க்கு முன் ரஜினி படங்கள் முதல் நாள் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அதற்க்கான சூழல் இல்லை . பள்ளியில் படிக்கும்போது வீட்டு கதவில்  ரஜினி போடோக்கள் ஓடியிருப்பேன் பாண்டியன் எஜமான் என முத்து வரை தொடர்ந்தது இப்போதுதான் கதவு ரஜினி போட்டோ இல்லாமல் இருக்கிறது .

வேலைக்கு வந்து பார்க்கபோகும் முதல் படம் எங்கள் அலுவலகத்தில் அன்று வேலை அதிகம் மற்றவர்கள் வர தயக்கம் சண்முகம் மட்டும் போகணும் என்று சொல்ல . மற்றவர்களிடம் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் வந்துவிடுகிறோம் என்று சொல்ல , அவர்கள் வந்து கதை சொல்லி விட்டு தூங்குங்கள் அப்போது தான் நாங்கள் உதவுவோம் என்று டீலிங் போட சரி என்று சொல்லி சென்றோம் அங்கு reservation  ஏதும் இல்லை . இரவு மணி 8 pm காட்சிக்கு செல்ல முடிவெடுத்து6.30 pm மணிக்கே சென்று பார்த்தல் கவுன்ட்டர் முழுவதும் கூட்டம்  போலீஸ் வேறு லத்தியுடன்

.இருவருக்கும் ரஜினினா உசிர் சண்முகத்தை லைன் இல் நிற்கவைத்து நான் சற்று தள்ளி வேறு எங்காவது முயற்சிக்க அவனோ கிட்டத்தட்ட 1 .30 மணிநேரம் நெரிசலில் நான் சற்று நேரம் நிற்கவா என்று கேட்டும் பரவ இல்லை என்று நின்று டிக்கெட் வாங்கினான் பலருக்கு அப்போது அடி நல்ல வேலை நாங்கள் தப்பித்தோம் டிக்கெட் விலை 50  ருபாய் தான் . ஆச்சர்யம் சென்னை திருச்சி யில் 300 , 400 என நண்பர்கள் என சொல்ல 50 க்கு நாங்கள் வாங்கிவிட்டோம் . அப்போது ஒரே பெட்டி யை வைத்து சினி வள்ளுவர் , ரமேஷ் என ஓடி ஓடி ஒட்டிகொண்டிருந்தார்கள் , இங்கு கிடைக்கவில்லை என்றால் இன்னும் ஒரு மணிநேரத்தில் ரமேஷ் இல் காட்சி அங்கு வாங்கலாம் என்று நினைத்தோம் ஆனால் கிடைத்து விட்டது .

 உள்ளே சென்றால் வழக்கம் போல் விசில்  டான்ஸ் என விண்ணை பிளந்தது . படத்தை விட ரசிகர்கள்  ஆரவாரம் இன்னும் அருமை .பல வசனங்கள் புரியவில்லை இருந்தாலும் அதிசயித்து பார்த்தோம்.நண்பர்கள் அவசர வேலை இருந்தால் கால் பண்ணுங்கள் என்று சொல்லி இருந்ததால் அடிக்கடி மொபைல் பார்த்து கொஞ்சம் டென்சன் ஆனால் கடைசிவரை எந்த அழைப்பும் வரவில்லை . பத்து நாட்கள் கழித்து அதே சினி வள்ளுவரில் நானும் சண்முகமும் இரண்டாவது முறை பார்த்தோம்.இப்போது பெரம்பலூர் கிருஷ்ணா வில் நாளை பார்க்கும் படபடப்பு இப்போதே .  இது ரஜினி படங்களுக்கு மட்டுமே வரும் ஆர்வம் ..

எவ்வளவு படித்தவர்களானாலும்  அப்புறம் பார்க்கலாம் என தோன்றாது ..என்னை போன்ற சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களும்  விசிலடித்து கொண்டாடும் ஒரே தலைவர் ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே ..

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails