தலைப்பிற்கான செய்தி பார்க்கும் முன் இதை படிங்கள் ....பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி வழக்கம் போல் இறுதி போட்டியில் வென்று அரை இறுதிக்கு நுழைந்தது .
வாரியார் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பேட் டிங்கை தொடங்கியது பிட்ச் இன்று பௌலிங்கிற்கு சாதகமாக குறிப்பாக சுழல் பந்துக்கு உதவியது விஜய் வழக்கம் போல விஸ்வரூபம் எடுத்தார் . பெரிதாக விளையாடாத ஹசி இன்றைய ஆட்டத்தில் தான் திறமையை நிரூபித்தார் அவர்தான் அதிகபட்ச ரன் அடித்து 50 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் அடுத்து வந்த ரைனா கேட்ச் கொடுத்து வெளியேறினார் . பத்ரி மொக்கையை தொடங்கும் முன் ஆட்டம் இழந்தார்.
JP Kreusch | சிறப்பாக பந்து வீசி 4 ஓவர் களில் மூன்று விக்கெட் எடுத்தார் | . |
தோணி சிறப்பாக ஆடி 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் .
குறைவான ஸ்கோர் வெற்றி புறும் கட்டாயம்சென்னை அணி சிறப்பாக பந்து வீசி இறுதியில் பத்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது .வாரியர்ஸ் அணி தோற்றாலும் 109 ரன்கள் எடுத்தால் அரையிறுதி தகுதி பெரும் 126 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு உறுதி செய்தது .நம்ம தல தோணி ஒரு ரன் அவுட் , இரண்டு stumping என அதிரடியாக வெற்றிக்கு உதவினார் ...
வரும் வெள்ளி கிழமை சென்னை அணி பெங்களூர் அணியை எதிர் கொள்கிறது .
எப்படியோ இறுதி போட்டியில் இந்த முறை ஒரு இந்திய அணி உறுதி ....
நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க ......இந்த விளம்பரம் தான் குழந்தைகள் தற்போது முனுமுனுக்கும் பாடல் நமக்கும் பிடிக்கும் பாருங்கள் .. எப்படியோ விக்டோரியா அணிக்கு இந்த இரு அணிகளும் ஆப்பு வைத்துவிட்டன ....
தினமலர் vs டோனி ;
கடந்த வாரம் தினமலர் நாளிதழ் படித்த போது டோனி பற்றி ஜோதிடர் கணிப்பு என எழுதியிருந்தனர் அதில் டோனி champions league போட்டியில் வெற்றி பெறமாட்டார் ,அவரின் இந்திய கேப்டன் பதவி பறிபோகும் , புகழ் அழிந்துவிடும் இன்னும் கொடுமையாக டோனி அணியில் விளையாடமுடியாத நிலைக்கு தள்ளப்படுவார் என தோனிக்கு சூனியம் வைத்தார்கள் . அதற்கெல்லாம் ஆப்பு வைத்தார் டோனி . முட்டாள் ஜோதிடர் பேச்சை கேட்டு கேவலாமாக எழுது நிலைக்கு ஆனது தினமலர் ......கௌண்டமணி மன்னன் படத்தில்குண்டூசி விகிரவன் எல்லாம் தொழிலதிபரா என்ற வசனம் தான் தினமலரை நினைத்தால் வருகிறது .
எப்படிவெளிய சுற்றினாலும் போட்டி என்று வந்து விட்டால் முழு கவனம் செலுத்தும் ஒரு சில வீரர்களில் ஒருவர் தோணி ...அவருக்கு முன் வந்து கேப்டன் பதவிக்கு போராடிய யுவராஜ் இப்போது அணியில் இல்லை காரணம் அவரது கவனம் இன்மை , பஞ்சாப் அணி கேப்டன் பதவி எப்போதே காலி .. ஆனால் /இந்திய மற்றும் சென்னை அணிக்கு டோனி தவிர வேறு ஒருவர் கேப்டன் என்று நினைத்து பார்க்க முடிகிறதா .. சச்சின் வழிகாட்டுதல் + செஹ்வாக் , ரைனா , கம்பீர் இருந்தால் தோணி எதையும் சாதிப்பார் ..
கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் எந்திரன் டோனி தான் எப்பவும் .....
நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க ......
0 comments:
Post a Comment