கிரிக்கெட் மற்றும் நமது முக்கிய நிகழ்ச்சிகளை Online ல் நேரடிஇலவசமாக ஒளிபரப்பு செய்யலாம்
கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது மற்றும் வீட்டிலோ அலுவலகத்திலோ நடக்கும் முக்கிய விழாக்கள் பிறந்தநாள் விழா போன்றவற்றை இலவசமாக Online Live Telecast ல் நமது தளத்தில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கவும் /விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்களும் பார்க்கும் வாய்ப்பு ஏற்ப்படுத்தலாம் ,ustream இணையதளம் இதனை நமக்கு இலவசமாக வழங்குகிறது.
முதலில் கிரிக்கெட் மேட்ச் blog ல் ஒளிபரப்ப உங்கள் தொலைக்காட்சி வீடியோ ,ஆடியோ output ஐ USB cable ல் இணைக்கவேண்டும் , முக்கிய விழாக்களுக்கு
ஒரு நல்ல தரமான digital camera , USB connector ,mike இவற்றை கணிணியில் இணைத்து பிறகு http://www.ustream.tv சென்று register செய்து
பிறகு Broadcast Now தேர்வுசெய்து
நீங்கள் ஒளிபரப்பவிரும்பும் நிகழ்ச்சியின் பெயரை தேர்வு செய்யுங்கள் Cricket Live ,Songs என்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து பிறகு
அங்கு உங்கள் விருப்பம் போல் settings அமைத்து
offline ல் இருக்கும் போது நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த வீடியோ ஒளிபரப்பும் படி செய்துவிடுங்கள் பிறகு USB இணைத்து ஒளிபரப்பை தொடங்குங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் ப்லோக் தேடி வருவார்கள் ... முக்கிய நிகழ்ச்சிக்கு வராதவர்கள் உங்கள் வலைபக்கத்தில் கண்டு ரசிப்பார்கள் ,
நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு முன்னோ ,பின்னோ ஒளிபரப்பு இல்லாத போது ,நீங்கள் ஏற்கனவே பத்தி செய்த வீடியோ ஒளிபரப்பும் வசதியும் உண்டு.
settings தேர்வு செய்யும் போது நல்ல தரமான வீடியோ வழங்க கொடுத்துள்ள option தேர்வு செய்துகொள்ளவேண்டியது அவசியம் , இதற்க்கு சில software அவர்களே வழங்குகிறார்கள் ..
அருகில் உள்ள Object Code copy செய்து ப்லோக் ல் போட்டுகொண்டால் நமது ப்ளோகில் அவர்கள் கண்டுரசிப்பார்கள் ....நமது வலைபக்கத்தில் live programme ரெடி ...
வெளி நாடுகளில் கால்பந்து , டென்னிஸ் போன்ற முக்கிய விளையாட்டுகள் இப்படித்தான் வலைபக்கத்தில் ஒளிபரப்புகின்றனர் ,
நமது நாட்டில் இன்னும் இது போன்று அதிகம் வளர ஆரம்பிக்கவில்லை இணைய தளத்தை பொறுத்தவரை நம்மவர்கள் சுமாராக மூன்று ஆண்டுகள் பின்னோக்கியிருப்பதாக இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு தெரிவிக்கிறது , ..
பாகிஸ்தானுக்கும் ஏறத்தாள இதே நிலைதான் ஆனால் வைரஸ் ,ஹாக்கிங் போன்றவற்றில் நம்மை முந்திவிட்டனர் ....என்பது கூடுதல் தகவல். .
1 comments:
thank you for sharing this matter
Post a Comment