Pages

Tuesday, March 2, 2010

ஆஸ்திரேலியாவிடம் சுருண்ட இந்தியா

நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி,  பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில், வீழ்த்திய உற்சாகத்தில் இன்று தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஸ்திரேலியாவை சந்தித்தது.



                டில்லியில் நடக்கும் உலககோப்பை ஹாக்கி போட்டியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்‌திரேலியா அணிகள் இன்று 2nd march இரவு 8 :30 மணிக்கு  மோதின. பாகிஸ்தானை எளிதில் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தடுமாறியது ஆஸ்திரேலியா வீரர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் ஆடியது ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் கை ஓங்கி இருந்தது  .இறுதிவரை ஆட்டம் oneside game ஆகவே இருந்தது .
ஆட்டமுடிவில்  ஆஸ்திரேலியா 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.

            மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் ஸ்பெயினை வென்றது .1972 ம் ஆண்டு முதல் இதுவரை இந்தியா அணி தொடர்ந்து  இரண்டு முறை வென்றது இல்லை என்பது வருந்தக்கூடிய செய்தி ..முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தும் இன்று தோற்றது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்தது .

இன்று  நடந்த  போட்டிகளின்  முடிவுகள்  விபரம் :

6-4 என்ற கோல் கணக்கில்  இங்கிலாந்து தென்ஆப்ரிக்காவையும்  

பாகிஸ்தான்  2 - 1 ல்  ஸ்பெயினையும் 

 5 -2 ல்  ஆஸ்திரேலியா இந்தியாவையும் வீழ்த்தின .

2 comments:

BONIFACE said...

ஆஸ்திரேலியா ரொம்பவே ஆடிட்டாங்க பாஸ்,,,,இந்தியாவின் முதல் கோல் நல்லா இருந்தது.

BONIFACE said...

நண்பா உன் பதிவு என் dashboard-ல் update ஆகமாட்டேங்குது என்ன பண்ண???மெயில் மீ,,,,,

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails