ஐ .பி .எல் திருவிழா(12th march) இன்று கோலாகலாமாக தொடங்கியது மாவோயிஸ்டுகள் மற்றும் வார்னே மிரட்டலை பொருட்படுத்தாது வெளிநாட்டு வீரர்கள் இல்லாவிட்டாலும் போட்டி நடைபெறும் என சொல்லி தீபிகா படுகோன் ஆட்டம் , வான வேடிக்கை பிரபல வீரர்கள் கேரி சோபெர்ஸ் , லாரா என விழாவிற்கு என்னென்ன வகையில் சிறப்பாக தொடங்க முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் செய்து ரசிகர்களை ஐ.பி.எல் பக்கம் திருப்பினார் லலித் மோடி .
முதல் ஆட்டத்தில் டெக்கான் அணியும் கொல்கத்தா அணியும் மோதின கொல்கத்தா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி டெக்கான் அணிக்கு எதிராக 57 பந்துகளில் 91 எடுத்ததுதான் கங்குலியின் அதிகபட்ச ரன் ஆனால் கங்குலி ,திவாரி இருவரை டக் அவுட் செய்தார் வாஸ் . 5 .1 ஓவரில் 4-31
என்ற நிலையில் இலங்கை வீரர் ஆங்கிலோ மத்யுஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஷாஹ்
இருவரும் அபாரமாக
ஆடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 161 எடுக்க உதவினர் .இந்த ஷாஹ் பாகிஸ்தானில்
பிறந்து இங்கிலாந்து அணியில் தற்போது ஆடிவருகிறார்.
அடுத்து ஆடிய டெக்கான் அதிரடியாக ஆடி தோல்வியடைந்தது கில்க்ரிஸ்ட் மட்டும்
அதிகபட்சமாக 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார் .கில்க்ரிஸ்ட் ஆடியதை பார்க்கும்போது 15 ஓவர்களில் வெற்றிபெறும் நிலையில்இருந்தது. அடுத்து வந்த கிப்ஸ், சைமெண்ட்ஸ் ,ராகேஷ் சர்மா அடுத்தடுத்து
ஆட்டம் இழக்க 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதல் ஆட்டம் பரபரப்பு இல்லாமல் தொடங்கினாலும் இறுதியில் பரபரப்பை உண்டாக்கியது
.நாளை மும்பை - ராஜஸ்தான் அணிகளும் பஞ்சாப் - டெல்லி அணிகளும் மோது கின்றன இரண்டு
போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
கங்குலி ரன்யேதும் எடுக்காவிட்டாலும் சிறப்பாக bowler களை மாற்றி பந்துவீசசெய்து வெற்றி
பெறவைத்தார் . இல்லாவிட்டால் ஷாருக் அப்துல் ரசாக்கிற்கு போன் போட்டுஅடுத்த போட்டிக்கு
வரசொல்லியிருப்பார் .
புதிய ஐ.பி.எல் கேப்டன் களாக பொறுப்பேற்றுள்ள சங்கக்கரா & கம்பீர் நாளை என்ன செய்வார்கள்
என்று தெரிந்துவிடும்.ஐ .பி .எல் you Tube ல் ஒளிபரப்பினாலும் ஐந்து நிமிடம் தாமதமாக இருப்பதால்
அவ்வளவாக ரசிக்க முடியவில்லை இணையதளத்தில் ஒளிபரப்பாகும் வீடியோ க்களில் விளபரங்களை
போட்டு போட்டியை ரசிக்கவிடுவதில்லை கூகிள் விளம்பரம்போதாது என்று Clicksor
விளம்பரங்கள் . ஒன்றிக்கு மேற்பட்ட சேனல்கள் இருந்தாலும் விளம்பரங்களை போட
அவற்றை அடிக்கடிநிறுத்திவிடுகின்றனர் .
முடிந்தவரை சிறந்த சேனல் வீடியோ க்களை இந்த வலை பக்கத்தில் தரமுயற்சிக்கிறேன் ..
ரஜாக் ,அப்ரிடி, தன்வீர் ஆகியோர் இல்லாதது எல்லோருக்கும் சற்று ஏமாற்றமே ..ஞாயிற்று கிழமைதான்
சென்னை சூப்பர் கிங்க்ஸ் முதல் போட்டி தொடங்குகிறது டெக்கான் அணிக்கு எதிராக . சென்னை அணியில்
ஜஸ்டின் கெம்ப் கூடுதல் பலம் என்பது நிச்சயம் ..
Friday, March 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Really helpful post.Checkout Explainer Video Works Better
Post a Comment