Pages

Tuesday, March 16, 2010

சாதித்த Dhoni சாய்ந்த Ganguly

           சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடந்த போட்டி கங்குலியா ,தோனியா ? நமக்கு பிடித்த 2  அணிகளும் மோதும்போது இன்னும் பரபரப்புதானே? .  சென்னை அணி முதல்போட்டியில் தோற்று முதல்வேற்றியை நோக்கியும் கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றியை நோக்கியும் களம் இறங்கின . 

கோப்பையை வெல்லும் அணி எது? என்ற opinion poll ல் சென்னை அடுத்து கொல்கத்தா அணிதான் வாக்குகள் பெற்றுள்ளதை மேலே  காணலாம் , பெரும்பாலானவர்களின் சாய்ஸ் ம்  இவை இரண்டும் தானே ..
டோஸ் வென்ற சென்னை அணி batting  இல் விஜய் முதல் ஓவரிலேயே மொக்கை போட ஆரம்பித்தார் ,
ஹைடன் ரைனா இன்றும் ஏமாற்ற பத்ரிநாத் விஜய் ஜோடி டெஸ்ட் போட்டி போல ஆரம்பித்தது , இன்றைய மேட்ச் அவ்வளவுதான் அவ்வளவு மந்தமாக போனது .
    
         விஜய் அவுட் ஆக தோனி வந்ததும் ஸ்கோர் கொஞ்சம் வந்தது , 16  வது ஓவரில் தான் 100  வந்தது இதுதான் ipl3 ல் குறைவான ஸ்கோர் .பந்துவீச்சிற்கு சாதகம் என்பதை அறிந்து அதற்கேற்ப ஆடி கடைசி 4  ஓவரில் தனது விஸ்வரூபம் காட்டி ரன்களை ஜெட் வேகத்திற்கு உயர்த்தினார் .  ஒரே சரவெடி பட்டாசு , சென்னை அணிக்கு டோனி போதும் என்பதுபோல் இருந்தது இன்றைய ஆட்ட நாயகனும் டோனிதான் . , 
          பத்ரி இன்னும் அதிரடி காட்டி இருந்தால் 185 வந்திருக்கும் .பாலாஜி ஓவரிலேயே 50  அடித்து விடுவார்களே என்ற  பயமும் இருந்தது .விஜய் , பத்ரி 20 -20 போட்டிக்கு ஏற்றவாறு அதிரடி காட்டினால்  நன்றாக இருக்கும் .

           கொல்கத்தா முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்து தடுமாறியது அடுத்து வந்த இரண்டு ஷாஹ்க்கள் அதிரடி காட்டி அவுட் ஆக கங்குலி என்ன செய்வது புரியாமல் அவ்வப்போது ரன் அடித்தார் பாலாஜி இந்து ஏனோ அதிரடி பந்துவீச்சில் 2 விக்கெட் எடுத்து அணியில் தன்னை உறுதிசெய்துகொண்டார் , கோனி ,மோர்கல் என பந்துவீசி கொல்கத்தா அணி தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுருட்டினர் .

           தோணி தான் சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் உறுதிசெய்தார் , தோணி அளவிற்கு கங்குலி இடம் நம்பிக்கை இல்லாததே கொல்கத்தா அணி தோல்விக்கு காரணம் . இரண்டு அணிகளுமே விக்கெட் இழந்து போராடியபோது தோணி சிறப்பாக ஆடி ரன் குவித்தார்  சென்னை அணியை விட கொல்கத்தா அணி ரன்கள் விக்கெட் இரண்டிலும் சிறப்பாக இருந்தது .ஆனால் கங்குலி பதட்டத்துடன் விளையாடி ஆட்டம் இழந்தார் .

இந்திய அணி கேப்டன்களில் சிறப்பானவர் என்ற பெயர் கங்குலிக்கு உண்டு அதனாலேயே பலருக்கும் அவரை பிடிக்கும் ஆனால் தோணி எப்பவுமே பதட்டபடாமல் இருப்பதால் அவரால் இன்னும் சிறப்பாக ஆடி வெற்றி பெறமுடிகிறது அணி எவ்வளவு மோசமான நிலையில் விளையாடினாலும் தன்னால் முடிந்தவரை போராடி வெற்றி பெற முயல்பவர் என மீண்டும் நிருபித்து காட்டினார்  . 
Mr.cool dhoni..

இதுவரை நடந்த போட்டியில் குறைந்த ரன்கள்109 எடுத்த அணி கொல்கத்தா அணி தான் . விஜய், பத்ரி பாலாஜி சார் இனியாவது முழு திறமை காட்டி இந்தியா அணியில் இடம்பெற   வாழ்த்துக்கள் ... 
          எப்படியோ இறுதி போட்டியில் இவை மீண்டும் மோதினால் இன்னும் மகிழ்ச்சிதான் .. ஆனால் டெல்லி அணியின் அதிரடி இதை மாற்றிவிட வாய்ப்பும் உண்டு. 

ஷாக் கொடுத்த பெங்களூர் :
 
இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப் அணிதான் மிக பாவம் 203 அடித்தும் பெங்களூர் அணியிடம் தோற்றது .ப்ரீத்தி ஜிந்தா 203 வந்ததும் சந்தோசத்தில் ஆட வழக்கம் போல் சோகமானார் இறுதியில் பெங்களூர் அணி தீபிகா  படுகோனே அழகாக உற்சாகமாக பேட்டி கொடுத்து ப்ரீத்தி ஜிந்தாவை வெறுப்பேற்றினார்  ..


1 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails