Pages

Sunday, February 28, 2010

கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்

என்மீது எப்பொழுதும் அக்கறை அன்பும் கொண்டுள்ள பிரபாகர் சார்  அழைத்தால் இந்த

கிரிக்கெட் - தொடர் பதிவு...

இத்தகைய தொடர் பதிவுகள் நண்பர்களின்  கருத்துக்களை  புரிந்துகொண்டு நட்பை வளர்க்க சிறந்தவழி என்பது நிச்சயம்..

கிரிக்கெட் என்றாலே அது சச்சின்தான் . முடிந்தவரை பிறவீரர்களை சேர்த்துள்ளேன் .

1.பிடித்த கிரிக்கெட் வீரர் –சச்சின் டோனி, ஸ்டீவ் வாக்.

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ஸ்ரீகாந்த் கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கும் தமிழக வீரர்கள் .

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – மெக்ராத்,ஸ்ரீநாத்

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்

Andrew Caddick 
இந்த வீடியோ பார்த்தல் ஏன் என்று புரியும்
உலககோப்பை 2003 ல் இந்த ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டத்தில் கென்யா விற்கு ய்திராக சதம் அடித்ததை Caddick சிறிய அணிகளுடன் மட்டுமே சிறப்பாக விளையாடுவார் என்று விமர்சித்தார் இதார்க்கு சச்சின் கொடுத்த பதில் இந்த சிக்ஸ் இதுதான் சச்சினின் சிறப்பான சிக்ஸ் என்று சொல்லப்படுகிறது . இந்த ஆட்டத்தில் தான் Caddick அதிகபத்ச் ரன்கள் கொடுத்தார் .

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -முரளிதரன் .

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -அஜந்தா மென்டிஸ்(  ஓவர் பில்டப்  கொடுத்து மொக்கையானவர்)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் – சேவாக்  ,ராம்நரேஷ் சர்வான்.

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - முகம்மது கைப் .

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - சவுரவ் கங்குலி மற்றும் கில்கிறிஸ்ட் .

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் - சல்மான் பட்(  இந்தியாவுடன் மட்டும் அடிப்பதால்) , அமீர் சொஹைல் (இந்த வீடியோ பாருங்கள் புரியும் . வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு கொடுத்த பல்பு.)

11. பிடித்த களத்தடுப்பாளர் - யுவராஜ்,ஜான்டி ரோட்ஸ் .அஜாருதீன்.

12. பிடிக்காத களத்தடுப்பாளர் - இன்சமாம்

13. பிடித்த ஆல்ரவுண்டர் – கபில்தேவ், மைக்கேல் பேவன், க்ளுஸ்னர்.(பெரும்பாலும் எல்லோரின் விருப்பமும்  இவர்கள்தான்  )

14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -அப்ரீடி , பிளின்ட்ஆப்  கங்குலியிடம் பல்பு வாங்கியதை  யாரும் மறக்கமுடியாது .

15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட், டான்ஸ் ஆடி கொண்டே  சிக்ஸ், அவுட் கொடுக்கும் மேலே உள்ள New Zealand umpire Billy Bowden .

16. பிடிக்காத நடுவர் - அசோகா டி சில்வா 

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -ரவி சாஸ்திரி

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - ரேடியோவில்  ஹிந்தியில் பேசுபவர்கள் அனைவரும் 

19. பிடித்த அணி – இந்தியா,

20. பிடிக்காத அணி –தற்போதைய மேற்கு இந்தியா தீவுகள் அணி (.எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்  என்பதுதான் நினைவுக்கு வரும்) .

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – இந்தியா vs ஆஸ்திரேலியா

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – இலங்கைக்கு எதிராக விளையாடும் சிறிய அணிகள் .(பாவம் அந்த அணிகளை இலங்கை அணி அடித்து நொறுக்கிவிடுவதால்) .

23. பிடித்த அணித் தலைவர் -தோணி (கோப்பை வெல்வதற்கென  பிறந்தவர்)  ,அர்ஜுன ரணதுங்கா(1996 உலககோப்பை வென்று  பெனசீர் பூடோவிடம் அவர் கோப்பையை வாங்கி சாதித்தாதால் )

24. பிடிக்காத அணித் தலைவர் - இன்சமாம்

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – கங்குலி-சச்சின்,

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி--தற்போதைய இந்தியா அணி ஜோடிகள்  கங்குலி-சச்சின் அளவுக்கு எதிர்பார்ப்பை பூர்திசெயாததால்  .

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - ராகுல் ட்ராவிட்,லாரா .

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் -  சச்சின்

29. பிடித்த போட்டி வகை – 20 -20 ரஜினி படம் போல் பரபரப்பு  விறுவிறுப்பாக இருப்பதால்  .

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் –  கங்குலி ,டிராவிட் (சச்சின் இருக்கும் அணியில்  விளையாடி சாதித்து தனக்கென்று தனி ரசிகர்களை உருவாகிகொண்டதால் )
நான் தொடர்பதிவுக்கு அழைப்பது::
நண்பர்கள் :
சூர்யகண்ணன் ,

என் இனிய இல்லம்-சிநேகிதி  

மற்றும் இதுவரை தொடர் பதிவு இடாத அனைத்து சக பதிவர்களும் .

1 comments:

Gowtham said...

Bevan Allrounder???????????????/

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails