புதிய தலைமுறை இனியொரு விதிசெய்வோம் என்ற தலைப்பில் வந்திருக்கும் புதிய வார இதழ் , இன்று கல்லூரி சென்று திரும்பியவுடன் நாங்கள் வாங்கும் தினசரி நாளிதழ்களின் நடுவே கண்கவரும் வண்ணத்தில் ஒரு புத்தகம் புதிய தலைமுறை என்ற பெயரில் அறிமுக இலவச இதழ் என்றிருந்தது , என்ன இருக்கபோகிறது புதிதாக என்று ஒதுக்கிவிட்டு நாளிதழ்களை படிக்கதொடங்கினேன்.
பெரும்பாலும் கொலை ,கொள்ளை இவர்களுக்கு இதை விட்டால் வேறு செய்தி இல்லையா என்று அதனை தூக்கி போட்டுவிட்டு புதியதலைமுறை புத்தகத்தை எடுத்தேன் இவர்களும் என்ன புதிதாக எழுதியிருக்கபோகிறார்கள் என்று அலட்சியமாக எடுத்தால்
கல்வி, அப்துல் கலாம் அவர்கள் பேட்டி, உடல்நலம் ,CAT Exam, சுயமுன்னேற்றம் , நதிநீர் இணைப்பு தேவையா என்பது பற்றி அருமையான விவாதம், அஜித் நண்பரை தயாரிப்பாளராக்கிய கதை ,வேலைவாய்ப்பு, விளையாட்டு,அரசியல் ,இளைஞர்களின் கருத்துக்கள் நான் விரும்பும் மாற்றம் என்ற பெயரில்,இணையதளம் ,சினிமா மற்றும் தன்னம்பிக்கை என்று நீள்கிறது ..
கவர்ச்சி படங்களை போட்டு சம்பாதிக்கும் பத்திரிக்கைகளை வேறு வழியின்றி வாங்கும் நமக்கு
இப்படி அனைத்து துறைகள் பற்றி எளிமையாக , படிப்பவர்களை கவரும்படி உள்ளது , குடும்ப பத்திரிக்கை என்று இதனை உறுதியாக சொல்லலாம் . மொத்தம் 68 பக்கங்கள் அட்டைபக்கம் சேர்த்து அனைத்து பக்கங்களும் கண்கவரும் வண்ணங்களில் நல்ல உயர் தரமான காகிதத்தால் அசிட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு ,
இதன் நிர்வாக ஆசிரியர்- ஆர்.பி,எஸ் , ஆசிரியர் மாலன் இவர் திசைகள் என்னும் வார இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார் ,அப்போது நிருபர் பெயரில் அதிஷா, ஆகா அப்போதுதான் சென்னை பதிவர் சந்திப்பில் கொட்டும் மழையில் அதிஷா அவர்களை முதலில் சந்தித்தபோது அவர் புதிய தலைமுறை வார இதழில் நிருபர் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
இந்த புத்தகத்தை படித்ததும் எனக்கு சொல்ல தோன்றியது இப்படி ஒரு வார இதழில் நிருபராக இருக்க நீங்கள் காலரை தூக்கி விட்டுக்கொல்லாம் அதிஷா அவர்களே , வாழ்த்துக்கள் நீங்களும் நாம் புதிய தலைமுறை வார இதழும் மேலும் சிறப்பு பெற .
இதன் விலை ரூ . 5 என போட்டிருக்கிறார்கள் ஆச்சர்யம் தான் மாணவர்களுக்கு ஆண்டு/ஆயுள் சந்தா சிறப்பு சலுகை உண்டு, இனி வாரம் தோறும் நமது கைகளில் தழுவும் இந்த புதிய தலைமுறை என்பதில் சந்தேகமே இல்லை . அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரே இதழ் நான் பார்த்தவரை இது ஒன்றுதான் என்று உறுதியாக சொல்லுவேன். படித்தால் நீங்களும் அதனை உணர்வீர்கள்..
புதிய தலைமுறை படித்த நண்பர்கள் இதைப்பற்றிய கருத்துக்களை பிறரிடம் சொல்லுங்கள் .
இந்த சிறந்த புத்தகம் வளர ஆதரவு தரவேண்டியது நமது கடமை ..
இன்னும் பல ஆச்சர்யங்கள் இதில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.