Pages

Thursday, September 10, 2009

பதிவு திருடர்கள் விருது பற்றிய அறிவிப்பு
நம் பதிவுலகில் எவ்வளவோ திறமைகளை பாராட்டி விருதுகளும் ,பாராட்டுகளும் வழங்குகின்றோம் , இப்படி ஒரு விருதை அறிவித்தால் எல்லோரும் ஆர்வமுடன் படிக்கவருவார்கள் இப்படி ஒரு விருதா என்று ? விருது கொடுப்பவர்களுக்கு intresting blog போல intresting award வழங்குபவர் என்ற பெயரும் கிடைக்கும் . ஹிட்ஸ் அதிகமாக கிடைக்க வாய்ப்பு அதிகம். ரசிக்க கூடிய விருதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை .......

நமது பதிவுகளை திருடி அவர்களது ப்ளோகில் போட்டு அந்த ப்லோக் கிற்கு புதுமையான பேர் வைத்து இருப்பவர்களுக்கு இத்தகைய விருது .
அனைத்து பதிவர்களிடமும் கருத்துக்களை கேட்டால் அவர்களும் சில ப்லோக் பற்றி சொல்லுவார்கள் அவற்றை தொகுத்து திறமை அடிப்படையில் வழங்கி கௌரவிக்கலாம் . ஒவொருவரும் தனித்தனியாக இப்படி பெற்ற அனுபவம் உண்டு இதை தடுக்க என்ன செய்யலாம் ? அல்லது நம் பதிவை திருடி போட்டிருப்பதால் நமக்கு ஒரு சந்தோசம் , நம் பதிவையும் திருட ஆரம்பித்து விட்டனர் என்று .

விருதுக்கு உதாரணமாக கந்தசாமி பட டைரக்டர் சுசி கணேசன் போல யோசித்து முகமூடி அணிந்த உருவம் அமைத்து முடியை பறக்கவிட்டு இருப்பது போல(மேலே உள்ள படத்தை போல) லோகோ செய்யலாம் .
இதை எப்படி அவர்களுக்கு வழங்கமுடியும்?
இதை அவர்கள் எப்படி ப்லோக் இல் போட்டு கொள்வார்களா என்பது தானே ?
சுயமாக சிந்திக்காதவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் ஏன் நாமே நமது ப்லோக் அவர்களது ப்லோக் பெயருடன் போட்டுக்கொள்ளலாம் . அவர்களுக்கும் ஒரு விளம்பரம் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள் . இப்படி வள்ளுவர் சொல்லியபடி தண்டிக்கலாம் .

முடிந்தால் பதிவு திருடர் விருதை உபயோகமான கருத்துக்களை எல்லோருக்கும் பொய் சேர தனது ப்லோக் கிலும் போட்டு சேவை புரிந்தவர் விருது என மாற்றி அமைக்கலாம் .

செந்தழல் ரவி , பொன்மலர் ,sumazla அக்கா ,வால் பையன் , கேபிள் ஜி , நிஜாமுதீன்
சூர்யா கண்ணன் , ராகவன் நைஜீரியா,butterfly சூர்யா , எவனோ ஒருவன் ,பனையூறான் ,prabhakar ramasamy ,செல்வராஜ் அண்ணே ,கார்கி geetha achel,கார்த்திகேயன் ,வசந்த் மற்றும் செந்தில் போன்றவர்கள்(விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும் ) இப்படி ஒரு விருது கொடுத்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் எல்லோருக்கும் போய்சேரும் வார இறுதியில் இதுபற்றி அறிவிப்பீர் கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை இடுகிறேன் .


கடந்த வாரம் நண்பர் செந்தில் - செந்தில் பக்கங்கள் எழுதிய

முதுமலைக் காட்டுல இருந்து ஒரு கடுதாசி!

என்ற கட்டுரை படித்து கூட எழுதமுடியுமா என வியந்தேன் இப்படி எழுதுபவர்களுக்கு மத்தியில் இது போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனை ,


நன்றி :
இப்படி ஒரு பதிவு எழுதவைத்த கண்ணாடி போட்டுக்கொண்டு பைக்கில் போஸ் கொடுக்கும் புதுமை வலைதள நண்பருக்கு நன்றி .

காரணம்:

"பிடித்த பாடலை பாடி அதை வைத்து கண்டுபிடித்து டவுன் லோடு செய்யலாம்" இரண்டு நாட்களுக்குமுன் நான் எழுதியது

http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_09.html


அவரது வலைத்தளத்தில் இன்று http://puthumaitech.blogspot.com/2009/09/blog-post_1877.html
என்ற தலைப்பில் நான் எழுதியதை சூடாக ஒரு எழுத்து கூட மாற்றாமல் ஒரே ஒரு போட்டோ மற்றும் மாற்றி தலைப்பை கூட மாற்றாமல் அப்படியே எழுதியதற்கு நன்றி . நன்றி, நன்றி ..
என்னால் முடிந்தவரை என் நண்பர்களிடம் விருது வழங்க ஏற்ப்பாடு செய்துவிட்டேன் உங்கள் திறமையின் அடிப்படையில் கண்டிப்பாக வழங்குவார்கள் .

8 comments:

Anonymous said...

good thinking.ha ha haa

புதிய மனிதா said...

நம்ம வால் பையன்ட்ட கத்துகிட்டது ,,, அவர்ட கேளுங்க சொல்லுவாரு...நன்றி பிரபாகர்

சந்ரு said...

அந்த புதுமயானவரின் வலைத்தளத்தில் இருப்பது எல்லாமே திருட்டு இடுகைகளே நான் பல தடவை அவரிடம் பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டினேன். பினூட்டத்தைக்கூட காண்பிக்கின்றார் இல்லை.

Anonymous said...

ungalu yellam velai veti yedhuvum illaiya. mudhalil, veti news poduvathu yepadi yenru unaku award kodukanum

Selvaraj said...

அப்படி ஒரு விருது கொடுததீங்கன்னாலும் அதையும் சந்தோசமாக வாங்கிட்டு உங்களுக்கு நன்றி சொல்லி ஒரு பதிவும் போடுவார்கள். எனவே பிறரை கொடுக்க சொல்லுவதைவிட நீங்கள் முதலில் தைரியமாக அந்த விருதை கொடுக்கலாம்.

Anonymous said...

hi

கற்போம் கற்பிப்போம் said...

வணக்கம் சரியான பதிவு...வாழ்த்துக்கள்.....என்னுடைய www.pudhuvai.com இல் நான் வெளியிடும் பதிவுகளையும் அப்படியே வாந்தி எடுத்ததுபோல சிலர் அவர்களது பதிவில் போட்டு விடுகிறார்கள்..அவர்களிடம் கேட்டால் உங்களாலும் பதிவு மக்களை சென்றடைகிறது...என்னாலும் பதிவு ம‌க்களிடம் சென்றடைகிறது என தத்துவம் பேசுகிறார்கள்.. பணிச்சுமை+குடும்ப‌சுமை இரண்டிற்க்கும் நடுவில் படைப்பை படைத்தால் கொஞ்சம் கூட கூசாமல் அப்படியே போட்டு தள்ளி அதற்கு ஓட்டு வேறு வாங்கிக்கொள்கிறார்கள் என்ன செய்வது எல்லாம் தலை எழுத்து!!!

suthanthira-ilavasa-menporul.com said...

Removed pudumaitech link given in my blog. Cannot give link to hacking sites and thief sites.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails