பி.எம்.ஜெ., - பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் - உலகின் பல நாட்டு மருத்துவர்களின், கீதை - குரான் - பைபிள்! மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மருத்துவர்கள் சந்தித்த சவால்கள்... அவற்றை எதிர்கொண்டு ஜெயித்த முறை என மருத்துவர்களுக்கு தேவையான அனைத்தும் இந்த இதழில் இருக்கும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சர்வே பற்றி விலாவரியாக கூறினார் டாக்டர் நண்பர் ஒருவர்.
ஆய்வு நடத்தப்பட்ட 21 வயதுக்குட்பட்ட பெண்களில், பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பருவமடைந்த பின், வெகு சீக்கிரத்திலேயே, தமது கன்னித் தன்மையை இழந்தது குறித்து வருந்துகின்றனர்.
இதில் 16 வயதுக்கு முன்பே கன்னித் தன்மையை இழந்ததால் வருந்துபவர்கள் மூன்றில் இரண்டு பங்கு; ஆனால், இதே காலக்கட்டத்தில் உள்ள ஆண்களில் ஆறு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் வருந்துகின்றனராம்!
"அது என்ன?' எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வமே பொதுக்காரணமாக பெரும்பாலும் இருபாலரும் கூறியுள்ளனர்!
பெண்கள் தமது கன்னித் தன் மையைப் பெரும்பாலும் இழந் துள்ள வயது 16; ஆண்கள் 17!
மேலே சொன்ன கணக்குகளெல்லாம் காதலர்களுடையது அல்ல; காதல், கீதல் எல்லாம் கிடையாது... பள்ளித் தோழி, அடுத்த வீட்டுப் பெண், பக்கத்துத் தெரு சிறுவன்... இவர்களுடையது!
* நிஜமாகவே, ஒருவரை ஒருவர் ஆழமாகக் காதலிப்பவர் களில், 16 சதவீதம் பெண்களும், 10 சதவீதம் ஆண்களும் "காதலே எங்கள் கற்பு பறி போனதற்குக் காரணம்!' எனக் கூறுகின்றனராம்!
* "உணர்ச்சி மேலீட்டால், "தப்பு' செய்து விட்டோம்...' என 13 சதவீதம் பெண்களும், ஆறு சதவீதம் ஆண்களும் கூறியுள்ளனர்.
* கொஞ்சம் போதை போட்டது தான் முதன் முதலாக கன்னித்தன்மை இழந்ததற்கு காரணமாக அமைந்தது என 10 சதவீதம் இருபாலரும் கூறியுள்ளனர்.
* எதை இழக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்து, தம் சுய உணர்வுடன் கன்னித் தன்மையை இழந்ததாக 14 சதவீதம் ஆண்களும், 5 சதவீதம் பெண்களும் கூறியுள்ளனர்.
* ஆண்களை விடப் பெண்களே தமது தோழியரின் நடத்தையால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர். 6 சதவீத பெண்களும், 3 சதவீத ஆண்களும், தமது நண்பர்கள், "இதில்' ஈடுபடுகின்றனரே... நாம் ஏன் கூடாது என்ற எண்ணத்தில் விழுந்ததாகக் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment