Pages

Saturday, August 28, 2010

ஈரம் : விமர்சனம் - நந்தாவின் அமைதியான அட்டகாசம்


தமிழில் வந்திருக்கும் திரில்லர் என்று சொல்லக்கூடிய அளவிற்குகொடுக்க முயற்சி செய்துள்ளனர் .   முதலில் சிந்து மேணன்  தண்ணீரில் மிதந்தபடி இறக்கும் காட்சி , அதற்கு முன்  அவர் அறையிலிருந்து தணீர் வெளியேறுவதை கூட திகிலுடன் காட்டி  தண்ணீரை  காட்டி கூட பயத்தை உண்டாக்க முடியும் என்று காட்டி இருக்கின்றனர் .
அந்த இறப்பின் பின்னணி என்ன அவரின் கடந்த கால வாழ்க்கை இவைதான் மீதி கதை .இதை விசாரிக்கவரும் ஆதி சிந்து வின்  காதலன் , காவல்துறையில் பணிபுரிபவருக்கு தான் மகளை தர மறுப்பதால்  ஆதி சிந்து இடையே காதல் முறிந்து நந்தாவை மணக்கிறார் .
மனைவிமேல்  நண்பனின் பேச்சை கேட்டு  சந்தேகப்பட்டு அவரை மன ரீதியாக துன்புறுத்துகிறார் அந்த பிளாட் தான் மகளுக்கு கிடைக்கததால் சிந்துவை  விரட்ட  தினமும் ஒருவன்  வந்து போகிறான் என நந்தாவிடம் சொல்லிவிடுகிறார் ,இது போல இன்னொரு வீட்டுகாரர் , வாட்ச்மேன் போன்றோரும் சொல்ல சந்தேகத்தால் மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்து தண்ணீரில்  போட்டு கொலை செய்து விடுகிறார் .

நீர் உருவில் வந்து அந்த மூன்று பேரையும்  சிந்து கொல்கிறார், இதை அறிந்த ஆதி எப்படி உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கிறார்  என்பது விறுவிறுப்பான கதை.


ஆதி  அனைத்து   காட்சிகளிலும்  கலக்குகிறார் , அனால்  எதோ ஒன்று மிஸ்ஸிங் இன்ஸ்பெக்டர்  வேடம் நன்றாக பொருந்துகிறது .

நந்தா   பேசும் வார்த்தைகள் மிக குறைவு  ,  எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி வில்லத்தனம் காட்டுகிறார் ,  ஓவர் ஆக்டிங்  இல்லாமல்   இயல்பாக அதுவும் அந்த" எனை காணவில்லையே  நேற்றோடு  படலை சிந்து பாடிக்கொண்டு டிவி இல் பார்க்கும்போது அதை மாற்றி திரும்ப அந்த பாடலை நந்தாவிடம்  வைக்க சொல்லும் சிந்து  அப்போது இவர் நடிப்பு  அட்டகாசம் .  எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் .
 பின்னணி இசை ,ஒளிப்பதிவு   மிரட்டலாக இருக்கிறது .  கொலை பின்னணி , சிந்து -ஆதி காதல் இரண்டையும் சேர்ந்தே சொல்லி இருப்பது வித்தியாசமாக விறுவிறுப்பாக செல்ல உதவுகிறது.
கண்டிப்பாக  இரண்டு முறையாவது பார்த்தால் தான்  அணைத்து கட்சிகளிலும் உள்ள கருத்துக்கள் புரியும் .   ஒவ்வொரு  காட்சியையும்  ஹாலிவுட்  படங்கள் போல எதோ ஒன்றை வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்  இயக்குனர்.

திரில்லேர் படங்களின் முழு  கதையுயும்  விமர்சித்தால்  படிப்பவர்களுக்கு  இவ்வளவு தானா  இன்று நினைக்கதோன்றும் , அப்படி விமர்சிப்பதும் கடினம் ,  ஓரிரு  இடங்கள் மட்டும்   இழுப்பது போல தோன்றுவது  தவிர  படம் முழுவதும் பரபர , விறுவிறு கண்டிப்பாக போய் பார்க்கலாம் ஈரத்தை ...

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails