Pages

Monday, August 30, 2010

வெள்ளைக்காரர்கள் vs குதுப்மினார் & இயக்குனர் செல்வராகவன்








இந்திய சுதந்திர தின பதிவு : கொஞ்சம் லேட் தான் ....இருந்தாலும் தெரிந்துகொள்ளவேண்டியதகவல்..  காந்தி, நேரு,கட்டபொம்மன் ,பாரதி போன்றவர்கள் போராட்டம் பற்றி நமக்கு தெரியும் . இந்திய அதிசயம் ஆங்கிலேயரை எதிர்த்த சுவாரஸ்ய கதை இது.

குதுப்மினார் குத்புதின்ஐபெக்கால் முதல் மாடி வரை தான் கட்டப்பட்டது . அதை வானுயர வெற்றிகரமாக கட்டி முடித்தவர் சுல்தான் இல்தூமிஷ் .உயரம் -(242) அடி மொத்தம் உச்சிக்கு செல்ல (319) படிகள்

       முஸ்லீம் மக்கள் தொழுகைக்கும் பயன்பட்டது .பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சற்று மோசமான நிலையில் இருந்த குதுப்மினாரைசீரமைக்க முடிவு செய்யப்பட்டது .
    
     அதற்க்காக ராபர்ட் ஸ்மித் என்ற கட்டட கலைவல்லுனரை அரசு அழைத்து வந்தது , வந்தவர் ரிப்பேர் மட்டுமல்லாதுஅதிகபிரசங்கி தனமாக குதுப்மினருக்கு ஒரு ஆங்கில மேற்கூரை வைத்தால்மேலும் நன்றாக இருக்கும் என்று மரத்தால் ஒரு சிறு கோபுரம் அமைத்து உச்சியில் பொருத்தினார் .

           இயற்கை அதை அனுமதிக்கவில்லை ! பெரும் இடி விழுந்துகோணலாகிபோனது கலை உணர்வு மிகுந்த பிரிடிஷ் அதிகாரிகள் தலையில்அடித்துக்கொண்டு (1948) ல் இறக்கிவைத்தனர் .இன்றளவும் பரிதாபமாக சுணங்கி நிற்கும் அதை காணலாம் ..

          இது என்ன அபத்தம் என்று குதுப்மினார் அந்த வெள்ளைக்கார குல்லாயை ஒதுக்கி தள்ளிவிட்டதாம்.வெள்ளைக்காரர்கள் தன் மீது சுமத்திய பாரத்தை விரட்டிய முதல் இந்தியன்குதுப்மினார் என்பதில் நமக்கும் பெருமைதான்.குதுப்மினார்

twitter இல் படித்தவை :

ட்விட்டரில் அன்றாட நிகழ்வுகள் கருத்துக்களை எளிமையாக பகிர்ந்து கொள்ளும் ஒரே real hero , living legent இயக்குனர் செல்வராகவன் அவர்கள் மட்டுமே என்பது ட்விட்டர் பயன்படுத்துபவர்களுக்கு தெரியும் , நேற்று நம் living legent க்கு அப்படி என்ன மன வருத்தமோ ..மிக வருத்தமுடன் ட்விட்டி இருந்தார் .

            வாழ்க்கையை ஆர்வமிகுந்ததாக மற்ற யோசனை கூறுங்கள்,நான் என்னுள் வெறுமையாக எண்ணுகிறேன் என்று ...
 Can some one please teach me how to find interest in life?? These days I feel so empty inside ..


செல்வா சார் அடுத்த படம் சீக்கிரம் கொடுங்க எல்லாம் சரியாகிவிடும் ...
அவரின் மனவருத்தம் விரைவில் நீங்க பிரார்த்திப்போம் ...

மறந்து போன மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் & நோபல் பரிசு

நமது தமிழக நடிகர்களில், மறைந்த சிரிப்பு நடிகர் சந்திரபாபு, அன்றே மைக் கேல் ஜாக்சன் போன்று சிறப்பாக நடனமாடியவர். தற்போதுள்ள சூழ்நிலை அந்த காலத்தில் இல்லாததால், அவர் மைக்கேல் ஜாக்சனைப் போன்று, உலகம் முழுவதும் புகழ்பெற முடியவில்லை. இருந்த போதிலும், கடைசி காலத் தில், மைக்கேல் ஜாக் சனைப் போலவே, கடன் தொல்லை சந்திரபாபுவுக்கும் இருந்துள்ளது.

மைக்கேல் ஜாக்சன் இறக்கும்போது, அவருக்கு 500 கோடி டாலர் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தளவுக்கு அவர் மன உளைச்சலுடன் இருந்திருப்பார் என நினைக்கும் போதே, அவர் ரசிகர்களுக்கு, தானாக கண்களில் கண்ணீர் வந்திருக்கும். அவரது இறப்பில், பல சந்தேகங்கள் எழுப்பப் பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஜாக்சன் இறக்கும் போது, வெறும் 50 கிலோ எடை மட்டுமே இருந்துள் ளதும், அவர் உடம்பில், ஊசி போடாத இடங்களே இல்லாத வகையில், ஊசியால் துளைக்கப்பட்டிருப்பதும், தனது உடலை அழகு செய்து கொள்ள, பலமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளதால், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தன் உயிரிழப்புக்கு, தானே காரணமாகி உள்ளார்.

எந்தவொரு நாட்டிய கலைஞனும், இந்த மண்ணில் பெறாத பெருமையை, மைக்கேல் ஜாக்சன் பெற்றிருந்தாலும், அவரின் சில தீய பழக்கத்தால், அவருக்கு அவப்பெயர் வந்தாலும், அவரின் நடனத்தை பார்த்து ரசித்தவர்கள், அவரை ஒரு அதிசய பிறவியாகத்தான் பார்த்து வந்தனர். ஆனால், ஜாக்சனின் திரைமறைவு வாழ்க்கையில் நடந்த அசம்பாவிதங்களே, இன்று அவரின் மரணத்துக்கு காரணமாக மாறிவிட்டது.ஜாக்சனின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு பாடமாக நிச்சயம் அமைய வேண்டும்.

மைக்கேல் ஜாக்சன் 29 auguest பிறந்தநாள் ...அவர் மறைந்தாலும் அவரது நடனம் என்றும் மறையாது ..அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்க  பிரார்த்திப்போம் .
twitter இல் ரசித்த வரிகள் :
நம்மை விட்டு சென்ற மைக்கேல் ஜாக்சன் னால் சொர்கம் சிறப்புடன் இருக்கிறது ... 
ஒரு வருடம் ஆகியும் அவரைப்போல ஒருவரும் இன்னும் வரவில்லை இனி வருவதும் ?

Sunday, August 29, 2010

ஆப்ரிகாவிலும் மியுசிக் இல் கலக்குவேன் டி.ஆர் video



வாயாலே ஆப்ரிக்கா வாசிகளை மயக்கி மியூசிக் போடுவேன் என சொல்லும் டி ஆர் பேட்டி சண்டே ஸ்பெஷல் சிரித்துமகிழ ..இதிலும் பாருங்கள் இவருக்கு பிரான்ஸ்  ஈரோப்பா என கால் வருவதும் காமெடி உச்சகட்டம் ....Full entertainment...




இவரின் கலக்கல் ஆட்டம் பார்க்க ..

Saturday, August 28, 2010

நீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா?

நீங்கள் ஜப்பான் நாட்டில் பிறந்திருந்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கும் தெரியுமா?

உங்கள் பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஜப்பான் மொழி எழுத்துக்கள் உள்ளன அவற்றை சேர்த்து படித்துபாருங்கள்  உங்கள் பெயர் ஜபனீஸ்  மொழியில் ரெடி .
உதாரணமாக   Krishna-Meshikiaritoka  உங்களுக்கு என்ன .....

- ka
B -  tu
C - mi
D - te
- ku
F - lu
- ji
- ri
- ki
- zu
- me
- ta
- rin
- to
-mo
- no
- ke
- shi
- ari
-chi
- do
V - ru
-mei
- na
- fu
- zi 


kutozumofu  என்ன புரியலையா enjoy பண்ணுங்கன்னு japanese ல சொல்லிட்டேன் ..   


Twitter ல் ரசித்த வரிகள் ;

பெங்குவின்    உப்பு நீரை fresh water ஆக மற்றும் திறன் உடையது ...
   ஆச்சர்யம் ஆன உண்மையானு தெரியல ..
அப்ப கடல் நீரை குடிநீராக மாற்ற பெங்குவின் இருந்தா  போதும் ...

ரசிகர்கள் ரசிக்கும் சிறந்த இளைய தலைமுறை நடிகர்

 ரசிகர்கள் ரசிக்கும் பிடித்த அந்த நடிகர் யாருன்னுநீங்களே சொல்லுங்க

தருதல, இளைய தலைவலின்னு ஓவரா ஸீன் போடாம சூர்யா ன்னு மட்டு பெயர் போடுறது புடிக்கும் .
காசுகுடுத்து கட் அவுட் , பாலபிசேகம் பண்ணாம இருக்குறது புடிக்கும்

நாலு படத்துல ஒன்னு ஓடினதும் அடுத்த முதல்வர் , ரசிகர்மன்ற சீரமைப்பு, அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என ஸீன் போட்டு வது என இல்லாமல் இருப்பது .


(I am back) , நா ஒருதடவ முடிவு பண்ணா எ பேச்ச நானே கேக்கமாட்டே (அப்ப என்ன ------ நீ முடிவு பண்ற ) இப்படி அர்த்தமே இல்லாத (பஞ்ச்) வசனம் பேசாதது (இது ரெண்டுக்கும் என்ன அர்த்தம்ன்னு யாராச்சு தெரிஞ்ச சொல்லுங்கப்பா.)

கலர் கலரா டிரஸ் போட்டு ராமராஜன் ரீ-என்ட்ரி ய தடுத்தது . சிம்புவ விட்டு பில்ட் அப் பன்னசொல்றது (இன்னுமாய ஒங்கள நம்புறாங்க ) இந்தமாதிரி வேலைய பண்ணாம இருப்பது .

பிறந்தநாள் அன்று மட்டும் கம்ப்யூட்டர் தருவது , மரகன்று நட சொல்வது என இல்லாமல் அகரம் (Foundation) ஆரம்பித்து உதவிசெய்வது .

ஐம்பது படம் நெருங்கியும் கண்துடைப்புக்காக ஒரு லட்சம் மட்டும் நன்கொடை தராமல் , வருமானத்தில் பத்து சதவீதம் சமுதாய நலனுக்கு ஒதுக்கியது .


எல்லா படங்களிலும் டிரஸ் மட்டும் மாறிக்கொண்டு , தொப்பையை தூக்கி கொண்டும் ஆடாமல் எல்லோரும் ரசிக்கும்படி நடனம் ஆடுவது.


சினிமாவில் அமைதியான நாடு கேட்டேன் என்று திரையில் பாடிவிட்டு வெளியே சைலன்ஸ் என சவுண்ட் விடுவது , அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவிட்டு அப்பொழுது எதோ பேசிவிட்டேன் இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறாமல் அமைதிகாப்பது .


டிவி பெட்டியில் இயக்குனருடன் குழந்தைபோல பேட்டி கொடுத்து பிறகு அவரை சைலன்ஸ் என்று மிரட்டாமலும் , இயக்குனர் ஹோட்டலில் மிரட்டினார் என்று சொல்லாமல் இருப்பது .

எல்லோர் மனதிலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக 
இடம்பிடிதுக்கொண்டிருப்பது.


Twitter ல் ரசித்த வரிகள் :
                                                   தமிழர்களை மட்டும் ஏமாற்றிவரும் இலங்கை , இப்போது இந்தியாவையும் கிரிக்கெட் மூலம் ஏமாற்ற ஆரம்பித்துவிட்டது அம்பயர் உதவியுடன்  ...

எப்படியோ பைனல்ல அப்டி எது நடக்கல ... இருந்தாலும் இலங்கை அணி இந்த தொடர் மூலம் கோப்பையை வென்றாலும் பெயரை கெடுத்துக்கொண்டதுதான் நிஜம்...

சிறந்த Browser எது?


 சிறந்த Browser  எது?


Mozilla Firefox 3.5,         Google Chrome 3.0,         Microsoft Internet Explorer 8.0,           Opera 10.௦,       Apple Safari 4.0 

 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு Browser பயன்படுத்துவோம் பெரும்பாலும் ,  இவற்றில் எது சிறந்தது என்பதை பல்வேறு பயன்பாட்டில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது .

இணையதளத்தை பற்றி மிக குறைந்த அளவு அனுபவம் கொண்டவர்களின் பெரும்பான்மையான விருப்பம் IE தான், IE ல் User  compatibility என்றால் என்ன என்று கேட்கும் .  பெரும்பாலும் IE என்றாலே அனைவருக்கும் அலர்ஜி ,  என்று  குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .

            குறிப்பாக Virus  தாக்கும் அபாயம் இதில்  அதிகம் , பலவருடங்கள் ஆகியும் இன்னும் குறைபாடுகள் அதிகம் .நாளுக்கு நாள் இதன் பயன்பாடு குறைந்து வருவதான் உண்மை.. Microsoft Browser  என்பது  மட்டுமே  இன்று  வரை நிலைத்திருக்க ஒரே காரணம்.



          Mozilla  Firefox    அனைவருக்கும் ஏற்றது ,  குறிப்பாக Developer களின் Choice இது மட்டும் தான். பல்வேறு வசதிகள் இதில் உள்ளது குறிப்பாக Firefox Tools பயன்பாடு சிறப்பானது.
Page Loading ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றவற்றை விட மிக குறைவு.
Google Crome புதிதாக பல்வேறு வசதிகளுடன் வந்து பல்வேறு வசதிகளை கொண்டு அனைவரையும் மிக குறுகிய காலத்தில் கவர்ந்த ஒரே Browser .

safari,opera -இவை தனிப்பட்ட முறையில் சிறப்பு என்று ஒன்றும் இல்லை .மற்றபடி  IE விட சிறந்த Browser கள் என்பதில் சந்தேகமே இல்லை .

CPU பயன்பாடு,வேகம் , இணையப்பக்கம் எவ்வளவு சீக்கிரம் வருகிறது போன்றவற்றின் 

(JavaScript speed, average CPU usage under stress, DOM selection, CSS rendering speed, page load time, and browser cache performance)  அடிப்படையில் சிறந்தது எது என்பதை பாருங்கள் .


பெரும்பாலும் கூகிள் Crome, Firefox இடையே பலத்த போட்டி , இறுதியில் மேற்கண்ட ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் Google Crome சிறந்தது இதையடுத்து  வருகிறது  Firefox , IE க்கு கடைசி இடம்தான்.


ஆனால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இன்று வரை IE தான் முதலிடம்... 



நன்றி : Mr.Jacob Gube ---- sixvision.com


சிறந்த வலைபூக்கள் விருது வழங்கிய வலைபூங்கா தளத்திற்கும் ,இதற்க்கு காரணமான உங்கள் அனைவருக்கும் நன்றி .

தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

தடை செய்யப்பட்ட இணையதளங்களை Firefox Browser ல் பார்ப்பது எப்படி?

பல அலுவலகங்களில் ,கல்லூரிகளில் சில web Sites தடை செய்யப்பட்டிருக்கும் அவற்றை பார்க்க சில Proxy Websites இருப்பது நமக்கு தெரியும் , ஆனால் அவற்றையும் சில இடங்களில் தடை செய்து இருப்பார்கள் . அத்தகைய தளங்களுக்கு செல்லும் போது கீழ்க்கண்டவாறு தகவல் வரும்.


  இவற்றை Firefox Browser மூலம் எளிதில்  பார்க்கலாம் அதற்கு         Firefox Go2 Proxy Add-on download செய்து Install செய்துகொள்ளவேண்டும்,அவ்வளவுதான் இனி அலுவலகங்களில் தடை செய்யப்பட்ட இணையதளத்தை எளிதில்  பார்க்கலாம் .

ஈரம் : விமர்சனம் - நந்தாவின் அமைதியான அட்டகாசம்


தமிழில் வந்திருக்கும் திரில்லர் என்று சொல்லக்கூடிய அளவிற்குகொடுக்க முயற்சி செய்துள்ளனர் .   முதலில் சிந்து மேணன்  தண்ணீரில் மிதந்தபடி இறக்கும் காட்சி , அதற்கு முன்  அவர் அறையிலிருந்து தணீர் வெளியேறுவதை கூட திகிலுடன் காட்டி  தண்ணீரை  காட்டி கூட பயத்தை உண்டாக்க முடியும் என்று காட்டி இருக்கின்றனர் .
அந்த இறப்பின் பின்னணி என்ன அவரின் கடந்த கால வாழ்க்கை இவைதான் மீதி கதை .இதை விசாரிக்கவரும் ஆதி சிந்து வின்  காதலன் , காவல்துறையில் பணிபுரிபவருக்கு தான் மகளை தர மறுப்பதால்  ஆதி சிந்து இடையே காதல் முறிந்து நந்தாவை மணக்கிறார் .
மனைவிமேல்  நண்பனின் பேச்சை கேட்டு  சந்தேகப்பட்டு அவரை மன ரீதியாக துன்புறுத்துகிறார் அந்த பிளாட் தான் மகளுக்கு கிடைக்கததால் சிந்துவை  விரட்ட  தினமும் ஒருவன்  வந்து போகிறான் என நந்தாவிடம் சொல்லிவிடுகிறார் ,இது போல இன்னொரு வீட்டுகாரர் , வாட்ச்மேன் போன்றோரும் சொல்ல சந்தேகத்தால் மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்து தண்ணீரில்  போட்டு கொலை செய்து விடுகிறார் .

நீர் உருவில் வந்து அந்த மூன்று பேரையும்  சிந்து கொல்கிறார், இதை அறிந்த ஆதி எப்படி உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கிறார்  என்பது விறுவிறுப்பான கதை.


ஆதி  அனைத்து   காட்சிகளிலும்  கலக்குகிறார் , அனால்  எதோ ஒன்று மிஸ்ஸிங் இன்ஸ்பெக்டர்  வேடம் நன்றாக பொருந்துகிறது .

நந்தா   பேசும் வார்த்தைகள் மிக குறைவு  ,  எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி வில்லத்தனம் காட்டுகிறார் ,  ஓவர் ஆக்டிங்  இல்லாமல்   இயல்பாக அதுவும் அந்த" எனை காணவில்லையே  நேற்றோடு  படலை சிந்து பாடிக்கொண்டு டிவி இல் பார்க்கும்போது அதை மாற்றி திரும்ப அந்த பாடலை நந்தாவிடம்  வைக்க சொல்லும் சிந்து  அப்போது இவர் நடிப்பு  அட்டகாசம் .  எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் .
 பின்னணி இசை ,ஒளிப்பதிவு   மிரட்டலாக இருக்கிறது .  கொலை பின்னணி , சிந்து -ஆதி காதல் இரண்டையும் சேர்ந்தே சொல்லி இருப்பது வித்தியாசமாக விறுவிறுப்பாக செல்ல உதவுகிறது.
கண்டிப்பாக  இரண்டு முறையாவது பார்த்தால் தான்  அணைத்து கட்சிகளிலும் உள்ள கருத்துக்கள் புரியும் .   ஒவ்வொரு  காட்சியையும்  ஹாலிவுட்  படங்கள் போல எதோ ஒன்றை வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்  இயக்குனர்.

திரில்லேர் படங்களின் முழு  கதையுயும்  விமர்சித்தால்  படிப்பவர்களுக்கு  இவ்வளவு தானா  இன்று நினைக்கதோன்றும் , அப்படி விமர்சிப்பதும் கடினம் ,  ஓரிரு  இடங்கள் மட்டும்   இழுப்பது போல தோன்றுவது  தவிர  படம் முழுவதும் பரபர , விறுவிறு கண்டிப்பாக போய் பார்க்கலாம் ஈரத்தை ...

மிக சிறந்த Anti-virus எது? அவை வைரஸ்களை முழுமையாக அழிக்கின்றனவா ? ஒரு அதிர்ச்சி சர்வேமுடிவுகள் ..



மிக சிறந்த Anti-virus எது? அவை வைரஸ்களை முழுமையாக அழிக்கின்றனவா ? ஒரு அதிர்ச்சி  சர்வேமுடிவுகள் ..

என்ற பிரபல ஐரோப்பிய நிறுவனம் சிறந்த Anti-virus எது என்று Home user களுக்காக  16 Anti-virus களை

  • Avast Professional Edition 4.8
  • AVG Anti-Virus 8.5
  • AVIRA AntiVir Premium 9.0
  • BitDefender Anti-Virus 2010
  • eScan Anti-Virus 10.0
  • ESET NOD32 Antivirus 4.0
  • F-Secure AntiVirus 2010
  • G DATA AntiVirus 2010
  • Kaspersky Anti-Virus 2010
  • Kingsoft AntiVirus 9
  • McAfee VirusScan Plus 2009
  • Microsoft Security Essentials 1.0
  • Norman Antivirus & Anti-Spyware 7.10
  • Sophos Anti-Virus 7.6
  • Symantec Norton Anti-Virus 2010
  • Trustport Antivirus 2009.
 சோதனை செய்து முடிவுகளை புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது . பல்வேறு வகையான வைரஸ் களை கண்டுபிடித்து அழிப்பது , எவ்வளவு வேகமாக scan செய்கிறது போன்றவற்றை  வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது .
           
           eScan, Symantec and Microsoft (MSE) ஆகியவை மற்றுமே சிறப்பாக செயபடுவதாகவும் , மிக சிறப்பாக செயல்படும் Anti-virus என எதுவும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது .விபரங்கள் அடுத்து பட்டியலிடப்பட்டுள்ளன ..





முழுவிபரங்களையும் தனித்தனியாக காண
Report 1 
Report 2

 
முழுமையான பாதுகாப்பிற்கு என்ன வழி? 

              பெரும்பாலான வைரஸ்களை பரப்புவதில் இணையதளம் முதலிடத்தையும் , USB drive இரண்டாம் இடத்தையும் பெறுகிறது , எனவே offline பயன்பாட்டிற்கு மட்டும் Windows பயன்படுத்துங்கள் இணையதள பயன்பாட்டிற்கு Ubuntu , Redhat ,suse போன்ற open source பயன்படுத்தி வைரஸ் பரவாமல் பாதுகாக்கலாம் .

         Sun Virtual Box பயன்படுத்தி ஒரே OS ல் இருந்து சில நொடிகளில் செல்லலாம் என்பதால் பயன்படுத்துவதும் எளிது .Virtual box பற்றி தெரிந்துகொள்ள   Click here 

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும்  , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .  அப்போது என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பதிவு ...

moblie போன் சில  நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில்  இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .


தண்ணீரில் விழுந்த Mobile லை  என்ன செய்து  சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?

முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு  துடைத்து பிறகு அதனை  வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட  அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்  அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து  பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம்  .

வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும்  வைப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது ..  எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு  நல்லது ...

Firefox ன் - ஐந்தாவது பிறந்தநாள் அதன் வளர்ச்சி

 firefox இன்றுவரை கட்டந்துவந்த பாதை அதன் சிறப்பம்சங்கள் பற்றி அழகாக anmation வீடியோ வடிவில் .. தொழில்நுட்ப வல்லுனர்களின் ஒரே விருப்பமான Firefox  ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம் ...

வலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி ?


               நாம் இடும் ஒவ்வொரு பதிவும் எப்படி இருக்கிறது என்பதை படிக்கும் அனைவரும் மதிப்பீடு செய்து Star Ratting  வழங்கும் Star ratings widget  



                   இந்த Star Ratings Widget ல் Bad, Boring, OK , Good ,Excellent என அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கும் வசதி உள்ளது . இதனால்  பிறர் நமது பதிவை  போலியாக மதிப்பிட்டு Top 10 போன்றவற்றை வெளியிட்டு   அவர்களின் வலைபக்கத்தை பிரபலபடுத்துவதை தடுக்கலாம் . படிக்கும் வாசகர்களின் உண்மையான மதிப்பீடை பெற்று இன்னும் மேருகேற்றிகொள்ளலாம் .

                 இதன் சிறப்பம்சமாக நமது பிற பதிவுகளை படிக்க Sugession Option கொடுக்கும் வசதியும் கொண்டது . இதன் மூலம்இதனால்  புதிதாக வருபவர்கள்,நீண்ட நாள் கழித்து வருபவர்கள்  அவற்றை   படிக்க அருமையான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம்  .

              Techsathish.net போன்ற தளங்கள் இதை  பயன்படுத்துகின்றன . நானும் இதனை இணைத்துள்ளேன் .

இந்தStar Widget உங்கள் பக்கத்தில் நிறுவ Click Here



Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails