Pages

Sunday, November 8, 2009

ஊட்டியில் ஜாலி கலாட்டா


      ஊட்டியில்   இரண்டு வருடங்களுக்கு முன் வேலை பார்த்தது அங்கு பெரும்பாலும் Jerkin,sweter அணியாமல் இருப்பவர்களை பார்ப்பது கடினம் .அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் red color sweter ல் பார்க்கும்போது அவ்வளவு Cute ஆக இருப்பார்கள் ,






பழனிஇலிருந்து ஊட்டிக்கு மாறுதல் முதன்முறையாக ஊட்டி செல்லும் ஆவலில் முதல் நாளே கோவிலுக்கு சென்றேன் .மேட்டுப்பாளையம் தாண்டியதுமே மழை தொடங்கிவிட்டது.மழை சாரலுடன் வளைந்து செல்லும் பாதை மேலிருந்து வழியும் மழைநீர் என்று ரசித்துக்கொண்டே FingerPost சென்றடைந்தோம்.


Fingerpost ல் எப்போதும் குளிர் அதிகம் ,அவ்வப்போது மழை வேறு , புதிய அனுபவம் ரூமில் Heater போட்டுக்கொண்டு பணி  முடிந்தவுடன் நன்றாக சாப்பாடு ,நல்ல தூக்கம் வீட்டில் கூட அவ்வளவு பசிக்கவில்லை.என்ன காரணமோ தெரியவில்லை .

Fingerpost, Charing Crossஎன்று நான்கு நாட்கள் சுற்றிவிட்டு அப்படியே எனக்கு மஞ்சூர் அருகே உள்ள கெத்தை Power House ல் பணி வாங்கிக்கொண்டு  புறப்பட்டு சென்றேன் .





கெத்தை Power House ல்  மிதமான குளிர் வெயில் எப்போதாவது வந்து போகும். இங்குதான் செந்தாழம் பூவில் பாடல் எடுத்ததாக நண்பர்கள் சொன்னார்கள் .

காட்டு பகுதி என்பதால் அங்கு பணிபுரிபவர்கள் மின்வாரிய ஜீப்பில் தான் பணிக்கு வருவார்கள் , JE,SE என எல்லோரும் நன்றாக எங்களிடம் பழகுவார்கள் , நாங்கள் பக்கத்துக்கு ஊர் அல்லது எங்கள் ஊருக்கு சென்று திரும்பிவரும்போது ஒரு கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் அங்கு Mobile Tower கிடையாது  சிறுத்தை அவ்வப்போது அங்கு வந்து செல்லும்  .போட்டி  தனியாக ஊருக்குள் சென்று கடையில் எதாவது வாங்கிவரவேண்டும் என்று .ஒரே த்ரில் அனுபவம்தான்.



            இரவில் மேட்டுப்பாளையம் - குந்தா வரும்வழியில் யானைகள் வழிமறிக்கும் தினமும் இது நடக்கும் ,பிறகு சில நிமிடங்கள் கழித்து காட்டுக்குள் சென்றபிறகுதான் பேருந்து புறப்படும் .

             அவ்வப்போது Glenmorgan  ,குந்தா  என சென்று சுற்றிபார்க்க சென்றுவிடுவோம் . எனக்கு வேலை நேரம் முடிந்தால் ரூம் ல் ஓய்வு எடுப்பது பிடிக்காது பல இடங்களை பார்க்கவேண்டும் , சினிமா என்று செல்லவிரும்புவேன்.  வேட்டையாடு விளையாடு , உயிர் ,ஜில்லுனு ஒரு காதல்,திமிரு  என்று எல்லா படங்களையும் பார்த்துவிடுவோம்
வின்ச்ல் பயணம் அவ்வப்போது.




,பலாமரங்களில் குரங்குகள் வந்து சாப்பிடும் அவற்றை விரட்ட பெரும்  போராட்டம் நடத்தி மீதம் உள்ளவை மட்டுமே எங்களுக்கு.ஒவ்வொரு நாளும் எல்லாமே புது அனுபவம் . அங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் பழ மரங்கள் வைத்திருப்பார்கள் நாம் அவ்வழியே செல்லும் போது எந்த ஊர் என்று நலம் விசாரித்து  பலாப்பழம் போன்றவற்றை தருவார்கள் ஒவ்வொரு முறையும் . கல்லூரி மாணவர்கள் Industrial Visit வரும்போது யார் பணியில் இருப்பது என்ற போட்டி வரும் அப்போது செந்தில் தான் பெரும்பாலும் ஜெயிப்பான் .

             நண்பன் வேலாயுதம் என்னுடன் சினிமாவிற்கு Company கொடுப்பவன் அவனது காதலியின் தம்பி அங்கு படித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது அவனையும் சினிமாவுக்கு அழைத்து சென்றுவிட்டு  FingerPost வந்தபோது அங்கு ஒருவன் குடி போதையில் அவனிடம் வம்பிழுக்க, வேலாயுதம் அவனை அங்கேயே அவனது வயிற்றில் ஓங்கி உதைக்க அவன் சுருண்டு விழுந்தான் காதலியின் தம்பி ஆயிற்றே சும்மாவா .அடி வாங்கியவனோ  உன்னை அடிக்க ஆள் கூட்டி வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல அவனோ பயத்தில் தலைமை அலுவலகம் வந்து என்னிடம் புலம்ப ,நான் இதற்க்கு முன் தலைமை அலுவலக பணி செய்துவந்ததால் எல்லோரிடமும் நல்ல அறிமுகம் .

      ஊட்டி வந்துதான் பிற இடங்களில் பணி புரிய செல்லவேண்டும் அப்போது கொஞ்சம் free யாக இருக்கலாம் . அவனை  Glenmorgan  க்கு பணிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன் .

                அவன் அங்கு சென்றதும் என்னுடன் சுற்ற  ஆள் இல்லை . ஒரு வாரம் கழித்து அங்கு சென்று அவனை பார்க்க சென்றால் அவன் என்னிடம் அழத்தொடங்கினான் விடுடா இதெல்லாம் ஒரு விசயமா , இனியாவது கொஞ்சம் பொறுமையாக நட என்று சொல்லி விட்டு அங்கு குளிர் அதிகம் எனவே அன்றே சுற்றிபார்த்துவிட்டு மறுநாள் கெத்தை Power ஹவுஸ்  வந்தேன் . .

                   அப்போது தான் ஆப்பு வந்தது திருச்சிக்கு மாறுதல் என்று . இரண்டு மாதங்களுக்கு முன் எல்லோரும் மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க நான் மட்டும் விண்ணப்பிக்கவில்லை , நண்பன் கமலதாசன் டேய் மச்சா இதெல்லாம் கண்துடைப்புடா  மாறுதல் வராதுடா ,அப்படி வந்தால் இன்னும் ஒரு வருடம் ஆகும் , கையெழுத்து மட்டும் போடு நான் Head office ல் கொடுத்துவிடுகிறேன் என்றது நினைவுக்கு வந்தது

2 comments:

NIZAMUDEEN said...

அனுபவித்து எழுதியிருக்கீங்க... தொடருங்கள்.

மாதேவி said...

வேலை,காட்டுப்பகுதி அனுபவங்கள், என நன்றாக இருக்கிறது.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails