. இந்திய அணியில் 1971ல் அறிமுகமான கவாஸ்கர் பல்வேறு சாதனைகளை நிகழ்த் தினார். டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார். அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நீண்ட காலம் இருந்த "கிரிக்கெட் பிதாமகன்' சர் டொனால்டு பிராட்மேனின் சாதனையை(29 சதம்) தகர்த்த முதல் வீரரும் கவாஸ்கர் (34 சதம்) தான்.
"ஹெல்மெட்' இல்லை: ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட நம்மவர்கள் அச்சப்பட்டனர். இந்த நேரத்தில் கவாஸ்கரின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்களை கண்டு அச்சப்பட தேவையில்லை என்பதை உணர்த்தினார். 1970, 1980களில் "ஹெல்மெட்' கூட அணியாமல் ராபர்ட்ஸ், ஹோல்டிங், லில்லி, தாம்சன் உள்ளிட்ட "வேகங்களை' சமாளித்து காட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய இவர் தூணாக நின்று பேட் செய்தார்.
சாதனை நாயகன்: இந்திய அணியின் வெற்றியில் கவாஸ்கரின் பங்கு மகத்தானது. கடந்த 1971ல் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கிய காரணமாக இருந்தார். பின்னர் 1976ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில்(எதிர் - வெஸ்ட் இண்டீஸ்) இவரது தலைமையிலான இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் "சேஸ்' செய்து சாதனை படைத்தது. கடந்த 1982-83ல் டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வெஸ்ட் இண்டீ சுக்கு எதிராக இவர் 94 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 29வது சதத்தை எட்டிய கவாஸ்கர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட் மேன் சாதனையை சமன் செய்தார். 1983ல் உலக கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா கோப்பை வெல்ல பெரிதும் கைகொடுத்தார்.
174 பந்தில் 36 ரன்: கவாஸ்கர் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்தார். 1975ல் நடந்த முதலாவது உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 174 பந்துகளில் வெறும் 36 ரன்கள் எடுத்தார். வெங்கட்ராகவன் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆமை வேகத்தில் ஆடியதாக விமர்சிக்கப் பட்டார். 1981ல் நடந்த மெல்போர்ன் டெஸ்டில் (எதிர் - ஆஸி.,) எல்.பி. டபிள்யு., கொடுக்கப்பட்டதால், போட்டியை புறக்கணித்து வெளியேற முடிவு செய்தார். பின்னர் அணியின் மானேஜர் துர்ரானி தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
கடந்த 1987, உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் கவாஸ்கர் 4 ரன்களுக்கு அவுட்டாக மும்பை ரசிகர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய இவர் 125 டெஸ்டில் 34 சதம் உட்பட 10,122 ரன் எடுத்துள்ளார். 108 ஒரு நாள் போட்டிகளில் 1 சதம் உட்பட 3,092 ரன் எடுத்துள்ளார். ஐ.சி.சி., பதவிகளை துறந்த இவர், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக தொடர்கிறார்
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment