Pages

Saturday, August 28, 2010

வலைபக்க வாசகர்களை அதிகரிக்கும் Strar Ratting ,Post Read Suggession நிறுவுவது எப்படி ?


               நாம் இடும் ஒவ்வொரு பதிவும் எப்படி இருக்கிறது என்பதை படிக்கும் அனைவரும் மதிப்பீடு செய்து Star Ratting  வழங்கும் Star ratings widget  



                   இந்த Star Ratings Widget ல் Bad, Boring, OK , Good ,Excellent என அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கும் வசதி உள்ளது . இதனால்  பிறர் நமது பதிவை  போலியாக மதிப்பிட்டு Top 10 போன்றவற்றை வெளியிட்டு   அவர்களின் வலைபக்கத்தை பிரபலபடுத்துவதை தடுக்கலாம் . படிக்கும் வாசகர்களின் உண்மையான மதிப்பீடை பெற்று இன்னும் மேருகேற்றிகொள்ளலாம் .

                 இதன் சிறப்பம்சமாக நமது பிற பதிவுகளை படிக்க Sugession Option கொடுக்கும் வசதியும் கொண்டது . இதன் மூலம்இதனால்  புதிதாக வருபவர்கள்,நீண்ட நாள் கழித்து வருபவர்கள்  அவற்றை   படிக்க அருமையான வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கலாம்  .

              Techsathish.net போன்ற தளங்கள் இதை  பயன்படுத்துகின்றன . நானும் இதனை இணைத்துள்ளேன் .

இந்தStar Widget உங்கள் பக்கத்தில் நிறுவ Click Here



Tuesday, July 20, 2010

ஜிமெயில் ஹாக்கிங் நடக்கும் முறைகள் தடுக்கும் வழிகள் ...

ஜிமெயில் ஹாக்கிங் நடக்கும் முறைகள் தடுக்கும் வழிகள் ...

இதனை பற்றி பல முறை எழுதியாகிவிட்டது , இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் ..
ஒபாமாவின் ட்விட்டர் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்ட செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும் , அட அது ஒபாமா தானே என்றுஅடுத்து .... ? 
ஹாக்கிங் நடக்கும் வழிகள்  பற்றி சிலவற்றை தெரிந்துகொள்வோம் ...

நம்முடன் பழகுபவர்கள் ஹேக் செய்யும் முறைகள்   :
 உங்கள் கணிணியில் keylogger software இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும் நாம் கணியில் உள்ள keyboard இல் type  செய்வதை அப்படியே குறிப்பிட்ட மெயில் முகவரிக்கு அனுப்பிவிடும் .
இதனால் தான் வங்கிகள் keyboard  பயன்படுத்தாமல் கையாளும் வகையில் அவர்களது தளத்தில் mouse மூலம்  பயன்படுத்தும் வகையில் இணைத்திருப்பார்கள் ..

அடுத்து ஜிமெயில் கணக்கில் settings --> Forwarding and POP/IMAP
இங்கு சென்று மெயில் முகவரி கொடுத்தால் போதும் உங்களுக்கு வரும் மெயில்கள் அனைத்தும் இந்த முகவரிக்கும் சென்றுவிடும்
.
மேற்கூறிய இரண்டும் நம் கணிணியில் , ஜிமெயில் open செய்து வைத்து விட்டு சில நிமிடங்கள் இல்லாத போது அங்குள்ள பிற நபர்கள் எளிதில்  செய்து விடமுடியும் பிறகு சில நாட்கள் கழித்து சந்தேகம் வராதவகையில் நம் கணக்கை ஹேக் செய்துவிடமுடியும்
இவற்றை அடிக்கடி check  செய்துகொள்ளுங்கள் .

அடுத்து தான் சற்று அதிரவைக்கும் தகவல் 
நாம் சாட்டிங்கில் இருக்கும் போது நமக்கு photos ,இணையதள முகவரி link அனுப்பி அதன் மூலம் நமது மெயில் கணக்கை தெரிந்து கொள்ளலாம் , இதற்கென சில software களும் இப்போது வந்துவிட்டன , 

இதனை தடுக்க chatting போன்றவற்றிற்கு தனி mail id வைத்துக்கொள்ளலாம் .
முக்கியமாக நமக்கு வரும் மைல்களை நமது mobile க்கு எஸ்.எம்.எஸ் வரும்படி செய்து கொள்வது சிறந்தது . 
கூகிள் நமது மெயில் யாராவது ஹேக் செய்வதை கண்டறியும் வசதி கொண்டது password மாற்றும் எச்சரிக்கை செய்தி அனுப்பும் இதனை எஸ் .எம் .எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாத இடங்களில் இருந்தாலும் .

அடுத்து நமது மெயில் ஐடி வலைபக்கத்தில் கொடுத்து விடுகிறோம் எனவே pasword ஒன்றை தெரிந்துகொண்டால் போதும் எனவே உங்கள் தொடர்புக்கு வேறு முகவரி கொடுத்துவிடுங்கள் அதுபோல உங்கள் தள  மெயில் id    கண்டறி யாதபடி  மாற்றிவிடுங்கள்  நீங்கள் கொடுத்துள்ள contact id வைத்து hack செய்தாலும் ஒன்றும் செய்யமுடியாது ..


உதாரணமாக 
உங்கள் blogger  id : abcdefgh @gmail .com 
என்றால் அதனை உங்கள் வலைபக்கத்தில் தெரியும்படி வைக்காதீர்கள் 
contact me என்னும் இடத்தில் zyxwvu @gmail.com.  என்று அமைத்து விடுங்கள் .
ட்விட்டர், facebook போன்றவற்றிற்கு தனி மெயில் id பயன்படுத்துங்கள் .

திடீர் என்று நம் மெயில் முகவரிக்கு password change request என்று மெயில் வந்திருந்தால் யாரோ நம் மெயில் முகவரி தெரிந்து , password கண்டறிய முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம் .















 உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.
Password :
            நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் அடுத்தவர்கள் எளிதில் கண்டுபிடித்திடும் வகையில் இருக்கக் கூடாது. எண்களும் எழுத்துக்களும் (Alphanumeric )கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும். நீளமாக இருந்தால் நல்லதுதான்.  அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க  www.passpub.com என்ற தளத்தை பயன்படுத்தலாம் .

 ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

மேலும் தெரிந்துகொள்ள click the following:






1.உங்கள் ஜிமெயில் Hack செய்யப்பட்டுள்ளதா என கண்டுபிடிப்பது 2.பாதுகாப்பாக இணையதளத்தில் உலாவுவது எப்படி 

3.நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க,தடுக்கும் வழிகள்

4.கணிணியை பயன்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க + தமிழ் கலாச்சாரம் 

இதை எல்லாம் விட Hacking பற்றிய நம் அறிவை வளர்த்துகொள்வது அவசியம் .

ஹாக்கர்கள் எத்தகைய முறைகளில் hack  செய்கிறார்கள் , எப்படி கண்டறிவது என தெரிந்தால் தான் hacking ஐ தடுக்கமுடியும் .

"ஹாக்கிங் தடுக்கும் முறை பற்றி எழுதினால் எப்படி நடக்கிறது என்று சொல்லி தான் அதனை தடுக்கும் முறைகள் சொல்லமுடியும்"
 ,
வரும் முன் காப்பதே சிறந்தது...


Tech corner:
www.ibibo.com இந்த இணையதளம் சென்று கணக்கை தொடங்கி உங்கள் மெயில் alerts sms மூலம் மொபைலில் பெற்றுகொள்ளுங்கள் ..முக்கியத்தகவல் கொண்ட மெயில்வந்தால் இணையதள வசதி இல்லாத இடத்தில் இருக்கும்போது நண்பர்களிடம் பார்க்கசொல்லி தெரிந்து கொள்ளலாம் ..
Question corner :
வலையுலகில் சுதந்திரமாக எழுதும் உரிமை எல்லா பதிவர்களுக்கும் உள்ளதா?


thanks:
tamilish and technical team..



Monday, June 14, 2010

firefox ல் save செய்த username password hack செய்வதை தடுக்கும் முறை

 mozilla Firefox  பாதுகாப்பாக பயன்படுத்த master password அமைக்கும் முறை
fierfox ல்  username password save செய்து உங்களுடன் மற்றவர்கள் இந்த வசதியை பயன்படுத்தும் போது முதல் எழுத்தை type  செய்ததும் சம்மந்தப்பட்ட அனைத்து username காட்டும் இதன் மூலம் அடுத்தவரின் account இலும் நுழையலாம். இதிலிருந்து  பாதுகாப்பாக பயன்படுத்த உதவுவது master password. இதனை எப்படி நிறுவுவது என்று பார்க்கலாம் .
  
master password  அமைக்கவிடால் நீங்கள் save செய்த username, password  போன்றவற்றை firefox காட்டும். எனவே அவரும் உங்கள் account ல் நுழையமுடியும் ...இதனை தடுக்க master pasword அவசியம் ..

மேலும் விபரமாக அறிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள் ..
நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க


  1. Firefox window மேல் உள்ள   Edit menu,தேர்வு செய்து பின்  select Preferences....
  2.   Security icon  கிளிக் செய்யுங்கள்  .
  3. பின்  Use a master password. என்பதை தேர்வுசெய்யுங்கள் .
உங்கள் password  capital letter ,எண்கள் (numeric)  மற்றும் @#$%& போன்றவை இடம்பெறுமாறு இருக்கட்டும் ..
வேறு pasword  அமைக்கவும் இந்த முறை பயன்படும் .....
தகவல் துளிகள்:
1.சிறந்த browser எனப்படும் கூகிள் crome ல் master password அமைக்கும் வசதி இல்லை என்பது ஆச்சர்யம் ...

2.tamilmint.blogspot.com சென்று உங்கள் மொபைல் என்னை பதிவு செய்துகொள்ளுங்கள் தினமும் ஜோக்ஸ், முக்கிய செய்திகள் , jobalerts , அழகு குறிப்பு என  இன்னும் பல தகவல்கள் இலவசமாக வழங்குகின்றனர்.

அடுத்து பதிவு :
master password மறந்து போனால் என்ன செய்யலாம் .

job :
Mtech Computer science  first class ல் முடித்து வேலைதேட  தொடங்கிவிட்டேன் 
Fresher having knowledge in 
programming :C,C++, C# ,
Solaris (9,10 ) admin ,          Unix(Basic commands)
mail :         jaikumarvin@gmail.com 
mob: 9444700762
வேலைவாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்துங்கள் உதவியாக   இருக்கும் ..

Tuesday, June 8, 2010

கணிணியில் வைரஸ் இருப்பதை எப்படி கணடுபிடிப்பது ?


உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளதை கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலமாக தெரிந்துகொள்ளலாம் .
1. கணிணி வழக்கமான வேகத்தை விட மிக மெதுவாக இயங்கதொடங்கும் .
2.உதாரணமாக Folder , browser போன்றவற்றை    நாம் உபயகப்படுத்த click செய்யும் போது இயங்காமல் இருக்கும் அல்லது சற்று நேரத்தில் close ஆகிவிடும்   .
3.சில நிமிடங்களுக்கு ஒருமுறை restart ஆகதொடங்கும் crash ஆகிவிடும் வாய்ப்பும் உண்டு .
4.முக்கியமாக  பிரிண்டர் ஒழுங்காக இயங்காது .
5.வழக்கத்திற்கு மாறாக Error கள் உண்டாகும் .
6.file கள் folder கள் பயன் படுத்தமுடியாத நிலை .
7.பல வடிவங்களில் menu , dialogue box கள் தோன்றும் .pop up message அடிக்கடி தோன்றும்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான அறிகுறிகள் .,,வைரஸ் programmer கள் அவர்களின் target எதுவோ அதற்க்கேற்றவாறு உருவாக்குவார்கள் அதற்கேற்ப பாதிப்புகள் உண்டாகும்
பெரும்பாலானவை trojan horse இத்தகைய வைரஸ் தகவலை நம் கணினியிலிருந்து திருடி Network வழியாக hackers களுக்கு அளிக்கும் தன்மை உடையது .   
தினந்தோறும் சராசரியாக 500 வைரஸ் களை உருவாக்குகின்றனர் அவை பெரும்பாலும் இணையதளம் வழியே பரவுகின்றன ,  இரண்டாவதாக usb drive கள் மூலம் .    நம் ஊர் browsing  சென்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்க சென்றால் குறைந்தது நான்கைந்து trojanhorse வைரஸ் நம் pendrive க்கு வந்துவிடும் அதனை ஸ்கேன் செய்யாமல் விட்டால் நமது கணிணி அவ்ளோதான் ...
 
  browsing சென்டர் களில் மட்டும் ஏன் இப்படி யா    உங்கள் ஊரில் எப்படி என்று சொல்லுங்கள் .
அடுத்த பதிவில் வைரஸ் எங்கிருக்கிறது என்பதை கண்டறிவது பற்றி பார்க்கலாம் ...
அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தும்  வைரஸ் பட்டியல்

Top threats

  1. Worm:Win32/Conficker.B
  2. Virus:Win32/Sality.AM
  3. Exploit:HTML/IframeRef.gen
  4. Worm:Win32/Conficker.C
  5. Worm:Win32/Conficker.B!inf
  6. Worm:Win32/Rimecud!inf
  7. Worm:Win32/Taterf.B
  8. Virus:Win32/Alureon.H
  9. Trojan:Win32/FakeSpypro
  10. PWS:Win32/Verweli.A

Monday, June 7, 2010

உங்கள் கணினியில் உள்ள Anti-virus சரியாக இயங்குகிறதா என்பதை கண்டுபிடிக்க EICAR Test



நமது கணினியில் நிறுவ Anti-virus Avast, Kasperkey,K7 Total security ,DR.Web என பல இருக்கின்றன , ஆனால் அவை ஒழுங்காக இயங்குகின்றனவா என்பதை எப்படி கண்டறிந்துகொள்ளலாம் .  இதனால் எந்த பாதிப்பும் கணினிக்கு வராது நான் சோதனை செய்து பார்த்து தான் இதனை எழுதுகிறேன் . 
இதற்க்கு  European Institute of Computer Antivirus Research.EICAR Test என்று பெயர் .




EICAR Test code கீழே உள்ள எழுத்துக்களை அப்படியே copy செய்யவும் . 
 
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
  
இந்த code ஐ அப்படியே Notepad திறந்து Paste செய்யுங்கள் பிறகு உங்கள் கணினியில் உள்ள Antivirus  exe  File இருக்கும் folder  ல் அதே பெயரில்   இதனை Paste செய்யுங்கள்.
உதாரணமாக C:/Users/username/Desktop/avast_setup.exe இங்கு உங்கள் Antivirus இருந்தால் அங்கு avast_setup என்றபெயரில் save செய்துவிடுங்கள் அவ்வளவுதான்.

உங்கள்  Anti-virus  சரியாக இயங்கினால் அதனை உடனே Delete செய்துவிடும் . எனது கணினியில் AVAST Antivirus இருப்பதால் எச்சரிக்கை ஒலி எழுப்பியது.   அப்படி இல்லாவிட்டால் உங்கள் Anti-virus நீக்கி விட்டு நன்றாக இயங்கும் வேறு ஒன்றை நிறுவிக்கொள்ளுங்கள். 
Anti-virus   Update செய்வதின்  அவசியம்


   தினமும் சராசரியாக 500 புதிய  வைரஸ்கள்    (Anti-virus  நிறுவனத்தினர் தான் பெரும்பாலும்) உருவாக்குகின்றனர்.இணையத்தளத்தின் மூலம் தான் அவை பெரும்பாலும் பரவுகின்றன. எனவே அந்த Anti-வைரஸ்  ubdate ஆனால்தான்  அவற்றிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்கும்.  Anti-வைரஸ்  நிறுவனத்தினர் புதிய வைரஸ் களை ஆராய்ந்து அவற்றிக்கு Anti-virus  கண்டறிந்து தமது Database ல் சேர்க்கின்றனர் ,அதனால்தான் Update    ஆகி புதிய வைரஸ் களை  அழிக்கிறது.
எனவே  சிறந்த Anti-virus Update அவசியம் ..

Thursday, June 3, 2010

சிங்கத்தை வெல்லுமா இந்தியா?இந்தியா- இலங்கை கிரிக்கெட் live


Choose channel 5   for best video....  



Friday, May 28, 2010

சிங்கம் - அட்டகாசம்

நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் நாள் முதல் காட்சி சென்று பார்த்த படம் .சூர்யா ,ஹரி , விவேக் ,பிரகாஷ்ராஜ் அனுஷ்கா என எதிர்பார்த்து சங்கம் தியேட்டர் ல்  பர்ர்த்த படம் . ஆரம்பம்  முதலே ஹரி யின் விறுவிறுப்பு , சூர்யா வின் கம்பீரம் என அசத்தல் . வழக்கமான தாதா கதையில் வித்தியாசமாக விறுவிறுப்பாக இருக்கிறது .
சப் இன்ஸ்பெக்டர்  சூர்யாவை அவரது சொந்த ஊரில் மோதமுடியாமல் , பழிவாங்க சென்னைக்கு இன்ஸ்பெக்டர் ஆக்கி , அவரை பழிவாங்க  நினைத்து தனது ஆள் ,பணம் தாதா என எல்லாவற்றையும் இழந்து சூர்யாவால் கொல்லப்படுகிறார் பிரகாஷ் ராஜ் என்பதை கொஞ்சம்கூட போர் அடிக்காமல் விறுவிறுவென ஓவ்வொரு நொடியும் செல்லும் கதை .

விவேக் காமெடி அசத்தல் சில இடங்களில் மட்டும் இழுக்கிறது , பிரகாஷ் ராஜ் வழக்கமான தாதா , சூர்யாவின் ஊரில் அவரிடம் மோதும்  போது ஊர் மக்கள் அனைவரும் வந்து மிரட்டி காரை உடைப்பது தியேட்டர் ரை  அதிரவைக்கும் காட்சி படையப்பா ஊஞ்சல் காட்சி போல் ,  பாடல் தான் சுமார் ராகம் மற்றபடி எல்லாமே அசத்தல் .

தூத்துக்குடி ,தாமிரபரணி என உயர்த்தி சொல்லி  ,சென்னை ,கூவம் என சென்னையை இறக்கியிருப்பது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் .

அனுஷ்கா படம் முழுக்க வந்து அசத்துகிறார் ,இனி போலீஸ் கதை என்றால் சூர்யா தான் என சொல்லும் அளவுக்கு துரைசிங்கமாக வருகிறார் . சன் piture கொடுத்திருக்கும் சும்மர் வேட்டை இந்த சிங்கம்.

தியேட்டர் முழுவதும் சிரிப்பும் கைதட்டல் தான் ,  சென்னையில் இப்படி என்றால்  பிற சிறிய ஊர்களில் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம் .தூத்துக்குடி , திருநெல்வேலி மற்றும் எங்கள் கோயமுத்தூர் அதிரும் என்பதில் சந்தேகமே இல்லை ...

விஜய் ரசிகர்களுக்கு பிடிக்காதவன் இந்த சிங்கம் . மாஸ் ஹீரோ என்ற  பெயரை சூர்யாவுக்கு வாங்கிதந்திருக்கிறது . ரஜினிக்கு அடுத்த மாஸ் சூர்யா தான் என்று சொல்லலாம் . சூர்யாவுக்கு 100% கொடுத்திருக்கும் 25 வது படம் சிங்கம், 


2:30 மணிநேரம்  குடும்பத்துடன் சென்று பார்க்ககூடிய  பரபரப்பான விறுவிறுப்பான mass family entertainer மசாலா படம். சிரித்துகொண்டே விறுவிறுப்பாக செல்கிறது இந்த சிங்கம் . 100% entertainment.

indru
Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails