லலித் மோடி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் சிறந்த ஆளுமை திறன் கொண்டவர் மிகப்பெரிய அளவில் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை. மனிதர் தில்லாக ராஜினாமா செய்ய முடியாது முடிந்தால் நீக்கிபாருங்கள் என்று சவால் விடும் தைரியம் என எல்லாமே பாராட்டுக்குரியது.
எப்படியோ போராடி சென்னை அணி இறுதிபோட்டிக்கு வந்துவிட்டது ஹய்டன் சொதப்பினாலும் ரைனா விஜய் ,டோனி பேட் டிங்காலும் போளிங்கேர் , அஸ்வின் , முரளி என அசத்தல் பௌலிங் காப்பாற்றினர் .
சச்சின் ஆட்டம் அரை இறுதிவரை அசத்தல் அரை இறுதியில் சொதப்பல் . முக்கிய போட்டிகளில் சச்சின் பதற்றம் தவிர்க்கமுடியவில்லை அவரால் ,மும்பை அணியில் எல்லாமே சிறப்பாக உள்ளது ,
சென்னை அணி எல்லோரையும் பரபரப்பாகி இறுதி போட்டி வந்துள்ளது டோனி யின் சிறப்பான கேப்டன் பணி இதற்க்கு முக்கிய காரணம் . பதற்றம் இல்லாமல் இருப்பதே இதற்க்கு காரணம் , ஆனால் சென்னை அணி இந்த அளவிற்கு போராடி நுழைய காரணம் பாலாஜி , பத்ரி என அணிக்கு நெருக்கமான வீரர்கள் என இவர்களை போட்டு நான்கைந்து போட்டியை தோல்விபெற காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும் . விஜய் மட்டும் இதில் தப்பித்தார்.முதலாவது ஐ.பி.எல் இல் நோ பல் போட்டு ராஜஸ்தானுக்கு கோப்பை வாங்கிதந்தவர் பாலாஜி தான் என்பது எல்லோருக்கும் தெரியும் . வென்றாலும் தோற்றாலும் அணி வருமானம் குறையபோவதில்லை என்பதுதான் காரணம்.
பத்ரி எப்போதும் டெஸ்ட் போட்டியை போல ஆடி வெறுப்பேற்றினார் என்பதே உண்மை ..
14 | இன்னிங்க்ஸ் ஆடி | 342 | ரன்கள் அதிகபட்சம் 55* | சராசரி 34.20 | S/R | 117.12 | சிக்ஸ் 5 |
தமிழகத்தில் பாலாஜி , பத்ரி விட்டால் வேறு வீரர்களே இல்லையா ? இப்படியே அணி உரிமையாளருக்கு
நெருங்கியவர் என ஸ்ரீகாந்த் மகன் வேறு .. ஏதோ அரை இறுதியில் வென்றதால் அவர் தப்பித்தார் .
மொத்தத்தில் இந்த ஐ.பி.எல் சற்று ஏமாற்றமே திறமையான வீரர்களை தேர்வு செய்யாதது தான் காரணம்
அப்படி செய்திருந்தால் மும்பை அளவிற்கு சாதித்திருக்கு ம் சென்னை .
தோணி , ரைனா இருவரும் புனே அல்லது கொச்சி அணிக்கு சென்றுவிடுவது நல்லது அப்போது சென்னை அணி நிர்வாகத்திற்கு வேண்டிய வீரர்களை போட்டால் வெற்றி பெற முடியாது என்பது புரியும் .சென்னை அணிக்கு உற்சாக படுத்த ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் அப்போதுதான் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
சென்னை அணி நிர்வாகம் ஏன் அவர்களுக்கு வேண்டியவர்களில் ஒருவரை கேப்டன் ஆக நியமிக்கவில்லை ? எப்படியும் இவர்களை வைத்து டோனி ரைனா வெற்றி பெறவைப்பார்கள் என்றுதானே ?
டோனி இந்தமுறை கோப்பையை வாங்கி அடுத்த ஆண்டு போட்டிக்கு வேறு அணிக்கு தலைவராக சென்றுவிடுவது சிறந்தது ..
எத்தனை நாள் தான் தங்கள் ஜாதி , இன மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிலையை படித்த
அறிவாளிகள் மாற்றிக்கொள்வார்களோ? பார்க்கலாம்...
இப்படி ஒரு சென்னை அணி நமக்கு தேவையா?..........