Pages

Thursday, December 31, 2009

கூகிள் மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .

அனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2010 ஆண்டு நாம் அனைவருக்கும் சிறப்பான வெற்றியை தரும் ஆண்டாக அமையட்டும் ..

கூகிள்  மொபைல் Nexus One - இந்த ஆண்டின் எதிர்பார்ப்பு .


கூகிள் நிறுவன தயாரிப்பு என்றாலே எல்லோருக்கும் ஒரே எதிர்ப்பார்ப்பு , Browser , OS என தொடர்ந்து மொபைல் துறையில் சாதனை படைக்க தயாராகிவிட்டது .  கூகிள் Nexus one என்ற பெயரில் smartphone இந்த வருட தொடக்கத்தில் விற்பனைக்கு வருகிறது .

இதற்காக  HTC நிறுவனத்துடன்  சேர்ந்து  உருவாக்கி உள்ளது.  நடைமுறையில்  உள்ள  மொபைல் களை விட  கூடுதல் வசதிகளுடன் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை .
“Google Phone = iPhone + a little extra screen and a scroll wheel. Great touch screen, and Android.

சிறப்புவசதிகள் :


3G வசதி

3D benchmark, gets caught in high-res photoshoot பற்றிய  படங்கள்  click here

High quality வீடியோ வசதி  5 mega pixel camera என பட்டிய நீள்கிறது .

இதன் விலை $581

 

முழுவிபரம் :


 

விலை  & மேலும் விபரங்களுக்கு click here

Nexus One video

Wednesday, December 2, 2009

நெப்போலியன் அவர்களின் பிறந்தநாளும் பெரம்பலூர் தொகுதியும்



              தற்போது    ஆறு லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை ,    1977 முதல் 1996 வரை அ.தி .மு.க கோட்டையாக வே இருந்தது  பெரம்பலூர் தொகுதி இதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை . . அதன்பிறகு ஆ.ராசா அவர்கள் வந்ததும் மூன்றுமுறை வெற்றி பெற்று தி.மு.க வசம் ஆனது.இன்றும் கூட M.G.Rருக்கு ஓட்டு போடுகிறேன் என்று சொல்லும் கிராமங்களே உண்டு .




        தற்போது பொதுதொகுதி ஆனதால் அவர் நீலகிரி சென்றுவிட்டார் (அப்பா இப்பதான் கொஞ்சம் நிம்மதி ) 12 ஆண்டுகளில் ஆ.ராசா தொகுதிக்கு வழக்கம்போல் அரசு மருத்துவ கல்லூரி வரும் என்று சொல்லி இன்றுவரை அரியலூர் செல்லும் வழியில் ஒரு போர்டு மட்டும் மாட்டி சென்றுவிட்டார்  ,இனி நீலகிரிக்கு மருத்துவக்கலூரி வரும் என்று சொல்லுவார் விரைவில் ...அவர்செய்த சிறப்பான பணி  காவேரி குடிநீர் வழங்கியது  என்கிரமத்தில் கூட கிடைகிறது.


       எப்படியும் கல்லூரி  இங்கு அமைத்திருந்தாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவகல்வி சாமானியர்களுக்கு கிடைக்கப்போவதில்லை பெயருக்காவது எங்கள் மாவட்டத்தில் இருக்கிறது என்று சொல்லலாம்என்றால் அதுவும் இல்லை  என்றாகிவிட்டது .சரி எல்லோருக்கும் பயன்படும் அரசு கலை அறிவியல் கல்லூரி அதுவும் அதே கதைதான் . இதில் பொறியியல் கல்லூரி யும் அடக்கம் . எனக்கு தெரிந்து கலை கல்லூரி கூட இல்லாத கொடுமை இங்குதான் .


ரயில் வசதியே இல்லாத ஒரே மாவட்டம் என்ற பெருமையும் பெரம்பலூர் மாவட்டதிற்க்கே. சேலம் -ஆத்தூர்-பெரம்பலூர் இடையே தொடங்க இன்னும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர் .

பேருந்துகளில்இன்றும் சென்னையில் ஏறினால் திருச்சி டிக்கெட் எடுத்தால் தான் பயணம் செய்யமுடியும் பெரும்பாலும் .ஆனால் எல்லா தேர்தலிலும் மத்திய அமைச்சர் உருவாக்குவது  மட்டும் எங்களால் சாத்தியம் .இதெல்லாம் இரண்டாம் விருப்பம் தான் .


முதன்மை தேவையான நிரந்தர  வருமானம்


      வறட்சி மிக்க மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று .  விவசாயமும் வருடத்தில் ஆறு மாதம் நீடிப்பதே அதிகம் . வருடத்தில் பாதிநாட்கள் தான் மக்களுக்கு வேலை அப்போதுகூட தினமும் நூறு ருபாய் கிடைப்பதே கஷ்டம் .இங்கு தொழிற்சாலை என்றால் என்னவென்று கேட்கும் நிலைதான் . இங்கு பிறந்து வளர்ந்த ராசா அவர்களுக்கு நான்கு இது தெரிந்தும் செய்யாதது ஏனோ? M.R.F company அமையவிருக்கிறது என்று சொல்லி வழக்கம்போல் வெற்றி பெற்று டெல்லி சென்று அவரும் வழக்கமான அரசியல்வாதி யாக மாறி அவ்வபோது தொகுதி அலுவலகத்தில் மக்களிடம் இருந்து குறைகளை கேட்டு சென்றுவிட்டார் .
 
              இன்று கூட ஐம்பது ரூபாய்க்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலைதான் , பெரும்பாலான கிராமங்களில் பசு தரும் பால் தான் இன்றுவரை  வருமானம் எனது குடும்பம் உட்பட.  தொழில் தொடங்க வங்கிகள் அவ்வளவு எளிதாக கடன் வழங்குவதில்லை அவ்வாறு கொடுத்தாலும் தொழில்சிறப்பாக நடத்தி வெற்றி பெறுவது எத்தனை பேர் ?
 ஏதேனும் பெரிய நிறுவனங்கள் அங்கு தொடங்கினால் கடுமையாக உழைக்கும் மக்கள் இங்கு உண்டு என்பதில் சந்தேகமே இல்லை .மேலும் தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலக்கிறது , சுற்றுபுறசூழல் பாதிக்கிறது என்ற பிரச்சினைகளும் வாய்ப்பு இல்லை .



            எங்கள் ஊரில் பிறக்காவிட்டாலும்  பக்கத்துக்கு மாவட்டத்தில் பிறந்து பல இன்னல்களுக்கிடையே வளர்ந்து  எங்கள் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு.நெப்போலியன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுக்காக பணியாற்ற ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் வழங்கவேண்டும் என்று வேண்டி .



 இந்த இனிய நாளில்
ஒருமுறை வென்றால் தொடர்ந்து வெற்றியை கொடுக்கும் எங்கள் மாவட்ட மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நீண்டநாள் தேவையான தொழிற்சாலைகள்  அமைய ஆவன செய்யுங்கள் என ஒவ்வொரு தேர்தலிலும் மத்திய  அமைச்சர்களை உருவாக்கி தன்னையும் வளரவைப்பீர்கள் என்று பலவருடங்களாக கட்சி பாகுபாடின்றி ஆவலுடன் எதிர்பார்க்கும் பெரம்பலூர் தொகுதி   .....

மேலும் தகவல்களுக்கு  
  விரைவில் :கணிணியை புதிதாக வாங்கிய போது இருந்த வேகத்தில் இயங்கவைப்பது எப்படி ?

Thursday, November 26, 2009

வலைபூவிற்கு Background Picture சில நிமிடங்களில் அமைக்கும் எளிய வழி

நமது blog Template எவ்வித படங்களும் இல்லாமல் இருக்கும் அதில் இயற்கை காட்சிகளோ அல்லது நமக்கு பிடித்த தலைவர் , சினிமா நட்சத்திரங்களோ இணைத்தால் blog பார்பதற்கு மிக அழகாக இருக்கும் , படிக்கவருபவர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் .

 
உங்களுக்கு தேவையான Image ஐ photobucket
அல்லது Google Image சென்றோ தேடி அதன்மேல் Click செய்து Save Copy Image தேர்வு செய்துகொள்ளுங்கள் .

இந்த படத்தினை Background ல்  HTML ,Script போன்றவை தெரிந்திருக்கதேவை இல்லை .

முதலில் உங்கள் blog ல்
1.Click 'Layout' -->'Edit Html' for your blog
அடுத்து
Ctrl F clickசெய்து
search box ல்
body {         என type செய்து Enter கொடுத்ததும் அந்த இடத்தை காட்டும் கீழ்க்கண்டவாறு Code இருக்கும் 

body {

  background:#123;
  margin:0;
  text-align:center;
  line-height: 1.5em;
  font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
  color:$mainTextColor;
  font-size/* */:/**/small;
  font-size: /**/small;
  }
body {  உள்ளே
background:url(PUT IMAGE URL HERE) repeat top right;

என type செய்து  PUT IMAGE URL HERE என்ற இடத்தில் நீங்கள் Background ல் இடம்பெற செய்யும் படத்தின்  URL address கொடுத்துவிடுங்கள்  //background:#123; என்பதை நீக்கிவிடுங்கள் அல்லது Comment கொடுத்துவிடுங்கள் ..
அவ்வளவுதான் . இறுதியில் கீழ்க்கண்டவாறு இருக்கும்
body {
background:url(http://img1.chakpak.com/se_images/63422_-1_564_none/rajnikanth-wallpaper.jpg) ;
/* background-attachment: fixed; */
  //background:#123;
  margin:0;
  text-align:center;
  line-height: 1.5em;
  font: x-small Trebuchet MS, Verdana, Arial, Sans-serif;
  color:$mainTextColor;
  font-size/* */:/**/small;
  font-size: /**/small;
  }
உங்கள் Blog Background Picture ரெடி ...


Wednesday, November 25, 2009

ஒபாமா வுக்கு ஓட்டு போடாத உங்கள் நண்பரை ஒபாமா ஆதரவாளர்கள் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கும் கலக்கல் காமெடி வீடியோ பதிவு

நண்பரை ஜாலி யாக கலாட்டா செய்யும் வீடியோ  அவருக்கு  அனுப்புவது பற்றிய பதிவு .

            தேர்தலில் ஒபாமா ஆதரவாளரான உங்கள் நண்பர் அவருக்கு ஓட்டு போடததால் ஒபாமா ஒரு ஓட்டில் தோல்வி அடைகிறார் அது யார் என்பதை தீவிரமாக விசாரித்தால் அது உங்கள் நண்பர் என்று தெரிகிறது .
            இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து வது  இதனை  CNBC செய்தி சேனல் ஒளிபரப்புகிறது இந்த வீடியோவை உங்கள் நண்பருக்கு அனுப்பி அவரை ஜாலியாக  கலாய்க்கலாம்..

                இதில் யாருக்கு வீடியோ அனுப்புகிறோமோ அவரது பெயரை சொல்லி ஒபாமா ஆதரவாளர்கள்  பேட்டி கொடுப்பது banner ல் அவரது பெயர் , செய்தியின் போது அவர் பெயர் வீடியோ வில் தோன்றும் தொழில்நுட்பத்துடன்  இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது ..  அவர் பார்க்கும் போது நல்ல காமெடி யாக இருக்கும் ...


முதலில் இந்த இணையதளம் சென்று  http://www.cnnbcvideo.com/taf.shtml?hp=1கீழே உள்ள படத்தில் உள்ளவாறு From என்ற இடத்தில் உங்கள் பெயர் மற்றும் மெயில் ஐடி கொடுத்துவிடுங்கள் பிறகு

SEND TO A FRIEND — OR LOTS OF FRIENDS:  என்ற இடத்தில் உங்கள் நண்பரின் அல்லது நீங்கள் ஜாலி யாக கலாட்டா  செய்யவிரும்புபவரின் பெயர் மற்றும் அவரது மெயில் ID கொடுத்துவிடுங்கள் ஒன்றிற்கு  மேற்ப்பட்டவருக்கும்   இதனை அனுப்பலாம் அனைவரின் பெயர் மற்றும் மெயில் ஐடி இதில் கொடுத்து






கீழே உள்ள sendmy videos button அழுத்திவிடுங்கள் அவ்வளவுதான் அவர்களின் முகவரிக்கு சென்றுவிடும்  ஸ்ரீ.கிருஷ்ணா  sent you a video - Dear ராம் , Your friend ஸ்ரீ.கிருஷ்ணா sent you the following video from CNNBC: "Obama's Loss …

என்று அவருக்கு மெயில் வரும் அதனை Click செய்தால்

Obama's Loss Traced To Non-Voter என்று வீடியோ ஓடத்தொடங்கும் அதில் அவர் பெயர் சொல்லி போராட்டம் நடத்தும்படி இருக்கும் ..நல்ல பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டுள்ள வீடியோ .  He ll realy enjoy this video..


 

Friday, November 20, 2009

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் ஜிமெயில் பார்ப்பது & அனுப்புவது எப்படி ?

நம்மில் பலர்  இன்டெர் நெட்  இணைப்பு இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட  KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் ,இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offline ல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும் .

    நீங்கள் Internet இணைப்பு கொடுத்தவுடன் Mail கள் Desktop  வந்துவிடும்  .  இதனால் இணைப்பு இல்லாதபோதும் நாம் Mail பார்க்கலாம் .
அதேபோல இணைப்பு இல்லாதபோதும் Mail அனுப்பலாம் , அவ்வாறு அனுப்பும் மெயில் Outbox ல் தங்கிவிடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது mail சென்றுவிடும்

.Laptop வைத்திருப்பவர்கள் பயணம் செய்துகொண்டே Mail பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும் ..


முதலில் உங்கள் ஜிமெயில் Login செய்து settings சென்று அதில்  Google Gears  நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
   http://tools.google.com/gears  சென்று  இன்ஸ்டால் செய்யுங்கள்.


பிறகு  ஜிமெயில் more>>  சென்று  Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save  செய்யவும்.

பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings  அருகில்  உள்ள offline கிளிக் செய்து click next  கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும்  install offline access for gmail  க்கு  next button  கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும்  permission  ஓகே  கொடுக்கவும்.

ஜிமெயில் உங்கள் desktop  வந்துவிடும்.


உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு   உங்கள் computer   க்கு download  ஆகதொடங்கும் .

இனி நீங்கள்  offline  ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும்  பார்க்கலாம்./ பதில் அனுப்பலாம் ...

குறிப்பு :  C/ Desktop தவிர மற்ற Drive களில் இதனை அமைக்க சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் .ஏனென்றால் Google Gear நாம் C Drive ல் இன்ஸ்டால் செய்திருக்கிறோம் .



முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு நன்றி ..

Thursday, November 19, 2009

திரு .சுந்தர் பிச்சை கூகிள் Vice President, Product Management அறிமுகப்படுத்திய google Os Demo வீடியோ காட்சி

திரு .சுந்தர் பிச்சை கூகிள்
Vice President, Product Management அறிமுகப்படுத்திய google Os Demo வீடியோ காட்சி 

1994  ம் ஆண்டு கூகிள் நிறுவனத்தில் சேர்ந்தார் . IIT ல் தனது B.Tech முடித்து வெள்ளி பதக்கம் வாங்கியவர் .. 




கூகிள் OS Demo வெளியிடப்பட்டது பற்றிய விரிவான தகவல்கள்



முந்தய பதிவில் கூறியது போல இந்த வாரம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த Google OS  பற்றி 

                               Sundar Pichai, Google's VP of product management  10 am PST க்கு Google OS Demo காண்பித்தார் மேலும் கீழ்க்கண்ட  தகவல்களை  வெளியிட்டார் .

             முழுமையாக பயன்பாட்டிற்கு இன்னும் ஒரு வருடத்தில் கிடைத்துவிடும் . கடந்த வருடமே தயாரானாலும் இன்னும் அத்தனை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம் .

Chrome OS இல்  speed, simplicity, security ஆகியவை இதன் சிறப்பாக இருக்கும்.

Demo வின் போது 7 நொடிகளில் Login Screen வருகிறது விபரங்களுக்கு வீடியோ பாருங்கள்  ..(நல்ல வேகம் தான் .... )



Application Menu எப்படி இருக்கிறது பாருங்கள் 



 படத்தில் உள்ளவாறு Application Menu & Browsing மிக எளிமையாக உடனுக்குடன் மாற்றி பயன்படுத்தும் வகையில்.


 Google Os பார்க்க  அப்படியே Crome Browser போலவே தோற்றமளிக்கும்.

குறைபாடுகள் :
            பிற Browser களுக்கு Support செய்யாமல் Google Crome Browser க்கு மட்டும் support செய்யும் வகையில்  இருக்கும் .

             physical hard drives பயன்படுத்தாமல் SSDs . குறிப்பிட்ட Wi-Fi chipsets தேவைப்படும்.

Data is Stored in the Cloud

                 நாம்  சேமிக்கும் தகவல்கள் நமது Home Directory ல்  இருந்து Network கிற்கு சென்றுவிடும் இதனால் நமது Home Directory வெறும் Cache   அதாவது   duplicate data போல செயல்படும்.

                   நாம் Google OS இருக்கும் System சென்று ஜிமெயில்    கணக்கின் மூலம் மட்டுமே தகவல்களை பயன்படுத்தமுடியும்  இதனால் Google server Down ஆகிவிட்டால் பயன்படுத்துவது கடினம்.

நம் பயன்பாட்டிற்கு வந்த பின் தான் இதன் நிறை குறைகள் இன்னும் முழுமையாக தெரியும்.   

   முழுமையாக நாம் Googleலை சார்ந்து இருக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கிறது ...  இதனால் கூகிள் மட்டும் போட்டியே இன்றி செயல்படும் நிலையை அடைந்துவிடும் என்று தெளிவாக தெரிகிறது ..





                                      

Monday, November 16, 2009

இணைய உலகிற்கு கூகிள் கொடுக்கபோகும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் ,





              கூகிள் crome web browser தற்போது 40,000 மில்லியன் மக்களால் பயன்படுத்தபெற்று மிகுந்த   வரவேற்ப்பை அடுத்து ஏற்கனவே அறிவித்தபடி google Os அதனை சிறப்பாக உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்கிறது.

                       இது  open source என்பது எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. Netbook எனப்படும் எதிர்காலத்தில் வரவேற்ப்பு பெறப்போகும் 
  விலை குறைந்த  light and inexpensive லேப்டாப்பை  குறிவைத்து வடிவமைத்து வருகிறது . 


            மிக வேகமாக சில நொடிகளில்  இணைய பக்கங்களை Display செய்வது தான் இதன் முக்கிய நோக்கம் . Windows போல் அல்லாமல் குறைந்த அளவு இடத்தையே எடுத்துகொள்ளும் வகையில் வடிவமைக்கபட்டுவருகிறது.  இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதாக Google அறிவித்துள்ளது.

         2010 ம் ஆண்டு பிற்பாதியில் முழுமையாக  நம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். linux os அடிப்படையாக கொண்டு இதனை உருவாக்குவதால் வைரஸ் பதிப்பு மிக மிக குறைவாக இருக்கும் என்பது மேலும் சிறப்பு .

      இதற்கென  Google இணையதள பயன்பாட்டிற்கென புதிய வசதிகளை அறிமுகப்படுத்த GO என்றProgramming Language அறிமுகப்படுத்தியுள்ளது .

இணைய உலகையே மாற்றப்போகும் dubbed SPDY Protocol :

        நாம் செல்லவிரும்பும் வலை பக்கங்களை ie , Firefox லோ டைப்   செய்வதை Http  அதற்குரிய server க்கு சென்று Tcp மூலம் நமது கணினி browser க்கு அனுப்புகிறது , பல ஆண்டுகள ஆகியும் Http எந்த மாறுபடும் இல்லாமல் அப்படியே உள்ளது இதற்க்கு மாற்றாக dubby SPDF என்ற புதிய protocol ( speedy என்று உச்சரிக்கவும் ) Http க்கு மாற்றாக பயன்படுத்த உள்ளது , இதனால் 50% வேகமாக இணைய பக்கம் நமக்கு கிடைக்கும்.

           உதாரணமாக இணையதள பக்க Backgroung Image load ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் முதலில் மற்ற தகவல்களை Browser க்கு அனுப்பிவிடும் . குறைந்த Bandwidth ல் அதிக தகவலை அளிக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது .

   dubbed SPDY 55% வேகமாக Http ஐ விட இயங்குகிறது என்று google lab உறுதி செய்துள்ளது. விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும் .

               தற்போது  எல்லா Browserகளும், இணையதளங்களும் Http அடிப்படையிலேயே இயங்குகின்றன ,இவை அனைத்தும் dubbed SPDY protocol க்கு மாறுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை .மைக்ரோசாப்ட்டும் Google தனக்கென்று ஒரு Protocol வைத்துக்கொள்ளப்போவதை நினைத்து கலக்கத்தில் உள்ளது .

              முடிவில் நமக்கு இந்த இணையதள போட்டி வேகமாகவும் ,நமக்கேற்றவாறும் (speed ,cosistant) இணையதளத்தை மாற்றித்தரும்   என்பது நிச்சயம் .


மேலும் தெரிந்துகொள்ள :

dubbed SPDY protocol 

Http protocol



 Average page load times for top 25 websites


DSL 2 Mbps downlink, 375 kbps uplink
Cable 4 Mbps downlink, 1 Mbps uplink


Average ms
Speedup
Average ms
Speedup
HTTP
3111.916


2348.188


SPDY basic multi-domain* connection / TCP

2242.756

27.93%

1325.46

43.55%

SPDY basic single-domain* connection / TCP

1695.72
45.51%
933.836
60.23%
SPDY single-domain + server push / TCP

1671.28
46.29%
950.764
59.51%
SPDY single-domain + server hint / TCP

1608.928
48.30%
856.356
63.53%
SPDY basic single-domain / SSL

1899.744

38.95%

1099.444

53.18

SPDY single-domain + client prefetch / SSL

1781.864

42.74%

1047.308

55.40%


 -----விரைவில்

  1.  வைரஸ் Software யை பாதிக்கும் என்பது தெரியும்  Hardware ஐ பாதிக்குமா ?  
  2. உங்களுக்கு பிடித்தமானவரை பற்றி  செய்தி சேனல் ல் Banner வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பான  மக்கள் கருத்துக்கள்  சொல்லவைக்கும் நகைச்சுவை பதிவு

Saturday, November 14, 2009

வைரஸ் தாக்காமல் இருக்க , கணிணியின் வேகத்தை அதிகப்படுத்த எளிய ஒரே வழி ..




கணிணியில் Memory space , Ram போன்றவை அதிகமாக இருந்தாலும் வேகம் குறைய இரண்டே காரணங்கள் தான்

. வைரஸ் பாதிப்பால் Software / Hardware பாதிக்கப்படுவது இவற்றை விட முக்கிய காரணம்

.Temporary files, history, cookies, download history, form history ,index.dat போன்ற File கள் மற்றும் Recyclebin .

                  நாம் இன்டர்நெட் ல் வெவ்வேறு வலை பக்கங்களுக்கு  செல்லும்போது அவற்றில் இருந்து சில தகவல்களை file ஆக சேகரித்து  இவற்றை எல்லாம் ஒரு Folder ல் வைத்துக்கொள்ளும் , மீண்டும் அதே பக்கத்திற்கு செல்லும்போது இந்த File கள் மூலம் விரைவாக அந்த பக்கங்களை நமக்கு காட்டும் .

             இதனுடன் நாம் செய்த Download போன்றவற்றை இவ்வாறு வைத்துக்கொள்ளும்  இன்னும் Multimedia Web sites செல்லும்போது அதிக அளவு தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்கின்றன .
ஒரு வாரத்தில்  300Mb அளவிற்கு இந்த file வந்துவிடுகிறது என்று வைத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் 1GB நெருங்கிவிடும் . இதனால் கணிணி வேகம் குறைய ஆரம்பிக்கும்
இந்த file களை Delete செய்ய Temporary Internet Files சென்று அழிக்கவேண்டும்.

                 சில வைரஸ் பரப்பும் தளங்கள் நாம் சென்றுவிடும்போது Temporary Files உடன் வைரஸ் வந்துவிடும் வாய்ப்பும் உண்டு .உதாரணமாக

BloodhoundV2 Trojan Horse இந்த வைரஸ் temporary Internet Files வழியே வந்து கணினியை பாதிக்கும் அபாயகரமான வைரஸ் இந்த வைரஸ் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள Click Here



Recyclebin: நமக்கு வேண்டாத தகவல்களை பெரும்பாலும் Recyclebin அனுப்பிவிடுவோம் . ஆனால் அந்த தகவல் Recycle bin ல் இருந்தாலும் memory space குறைவது  இல்லை . இதற்க்கு Shift + Delete கொடுத்தல் முற்றிலும் நீக்கி Memory space அதிகபடுத்தலாம் .

       மேற்கண்ட அனைத்தையும் தினமும் சென்று அவற்றை Delete செய்வது கணினியின் வேகத்தை அதிகரிக்க சிறந்தவழி .இதற்காக ஒவ்வொரு போல்டெர்,Recyclebin  சென்று Delete செய்வது நேரத்தை வீணாக்கும் .


             சில வினாடிகளில் முடிக்க சிறந்தccleaner Software     3.16 Mb மட்டும் கொண்டது  இலவசமாக கிடைக்கிறது .இதனை Install    செய்து ஒரே Click ல் அனைத்து Temporary Files களை Delete செய்யலாம் . Password போன்ற முக்கிய தகவல்களை விட்டு விட்டு மற்றவற்றை மட்டும் அளிக்கும் வசதியும் உள்ளது கூடுதல் சிறப்பு.

                       வேகத்தை அதிகரிப்பதைவிட மேலே கூரியதுபோன்ற temp வைரஸ்  இடமிருந்து பாதுகாக்க இதுபோன்ற cleaner பயன்படுத்துவது அவசியம்  ...


Download CCleaner

விரைவில் 
இணைய உலகிற்கு கூகிள் கொடுக்கபோகும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் !
 வைரஸ் Software யை பாதிக்கும் என்பது தெரியும்  Hardware ஐ பாதிக்குமா ?  
உங்களுக்கு பிடித்தமானவரை பற்றி  செய்தி சேனல் ல் Banner வைத்து ஆர்ப்பாட்டம் செய்து பரபரப்பான  மக்கள் கருத்துக்கள்  சொல்லவைக்கும் நகைச்சுவை பதிவு -----.
           
         Hacking தகவல் இடம்பெறுகிறது இன்று mail வந்ததால் சகபதிவரின் கருத்துக்களை ஏற்று  Ban செய்துபிறகு நேரடியாக Chatting வந்து உடனடியாக தளத்தை பார்வையிட்டு  Ban செய்ததை நீக்கி தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும்    Tamilish மற்றும் அவர்களது குழுவினருக்கும் & சக பதிவர்களுக்கும் ,படிக்கும் நண்பர்களுக்கும் நன்றி ... Tamilish கூறியதுபோல் opinion poll நீக்கிவிட்டேன் என்றும் தெரிவித்துகொள்கிறேன் ...


             Hacking தகவல் எப்பொழுதும் இதில் இடம்பெறாது பிறர் நம்முடைய தகவல்களை திருடாமல் காத்துக்கொள்ளும் வழிமுறை தான் இதில் இடம்பெறும்  என்று மீண்டும் தெரிவித்துகொள்கிறேன் ....
உங்கள் ஆதரவை தொடர்ந்து வேண்டி ......




Friday, November 13, 2009

நகைச்சுவை & மிரட்டல் படங்கள் தொகுப்பு


1)ரொம்ப படிச்சதால எழுத்து கொட்டுது





2)தலைவர் ரஜினி பஞ்ச் இதுதானா..






3)இப்படியே எல்லா மரத்தையும் வெட்டுனா  ஊட்டிலருந்து மேட்டுபாளையம் Direct டா பார்க்கலாம்






4) Flower pot விழும்போது  பிடிக்கபோய்  கை ஒடஞ்சிடுச்சி.





5)வேட்டைக்காரன் Trailor வந்ததுக்கே இப்படியா ?

 

 

6)Macronis சாப்பிடலாமா?






7)லாரி வாடகை அதிகமானதால?







8) கொஞ்சம் ஓவரா வெட்டிட்டாரோ ?







9)இங்கயும் ஆரம்பிச்சிடாங்களா?







10) வாய இப்படியும் மூடலாமா?







 11) Iron பண்ண மறந்துட்டே !






12) சைனஸ் கொஞ்சம்அதிகம் ஆய்டுச்சி 






13) vacum Face Cleaner








14)கந்த கந்த கந்த கந்த கந்தசாமி குரூப் ஸ்





15) கையால இல்ல., கையில எழுதினது






16) Self-Stiching







17) மூன்று முகம்









18) அலாவுதீன் இல்ல இல்ல ,..நூடுல்ஸ் பூதம்..




Thursday, November 12, 2009

ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?




நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள் .பிறகு படத்தில் உள்ளவாறு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். படத்தில் உள்ளவாறு Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் , விபரங்களுக்கு Click here




அடுத்து படத்தில் உள்ளவாறு  Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.  அடுத்த படத்தில் உள்ளவாறு Locking Process நடைபெறும்

பிறகு 


பிறகு Safe search Locked என்று  தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள் ,அவ்வளவுதான் இனி




 ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது .இதன்  பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்தான் அடையாளமாக படத்தில் உள்ளவாறு வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .


நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ......


Sunday, November 8, 2009

ஊட்டியில் ஜாலி கலாட்டா


      ஊட்டியில்   இரண்டு வருடங்களுக்கு முன் வேலை பார்த்தது அங்கு பெரும்பாலும் Jerkin,sweter அணியாமல் இருப்பவர்களை பார்ப்பது கடினம் .அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் red color sweter ல் பார்க்கும்போது அவ்வளவு Cute ஆக இருப்பார்கள் ,






பழனிஇலிருந்து ஊட்டிக்கு மாறுதல் முதன்முறையாக ஊட்டி செல்லும் ஆவலில் முதல் நாளே கோவிலுக்கு சென்றேன் .மேட்டுப்பாளையம் தாண்டியதுமே மழை தொடங்கிவிட்டது.மழை சாரலுடன் வளைந்து செல்லும் பாதை மேலிருந்து வழியும் மழைநீர் என்று ரசித்துக்கொண்டே FingerPost சென்றடைந்தோம்.


Fingerpost ல் எப்போதும் குளிர் அதிகம் ,அவ்வப்போது மழை வேறு , புதிய அனுபவம் ரூமில் Heater போட்டுக்கொண்டு பணி  முடிந்தவுடன் நன்றாக சாப்பாடு ,நல்ல தூக்கம் வீட்டில் கூட அவ்வளவு பசிக்கவில்லை.என்ன காரணமோ தெரியவில்லை .

Fingerpost, Charing Crossஎன்று நான்கு நாட்கள் சுற்றிவிட்டு அப்படியே எனக்கு மஞ்சூர் அருகே உள்ள கெத்தை Power House ல் பணி வாங்கிக்கொண்டு  புறப்பட்டு சென்றேன் .





கெத்தை Power House ல்  மிதமான குளிர் வெயில் எப்போதாவது வந்து போகும். இங்குதான் செந்தாழம் பூவில் பாடல் எடுத்ததாக நண்பர்கள் சொன்னார்கள் .

காட்டு பகுதி என்பதால் அங்கு பணிபுரிபவர்கள் மின்வாரிய ஜீப்பில் தான் பணிக்கு வருவார்கள் , JE,SE என எல்லோரும் நன்றாக எங்களிடம் பழகுவார்கள் , நாங்கள் பக்கத்துக்கு ஊர் அல்லது எங்கள் ஊருக்கு சென்று திரும்பிவரும்போது ஒரு கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் அங்கு Mobile Tower கிடையாது  சிறுத்தை அவ்வப்போது அங்கு வந்து செல்லும்  .போட்டி  தனியாக ஊருக்குள் சென்று கடையில் எதாவது வாங்கிவரவேண்டும் என்று .ஒரே த்ரில் அனுபவம்தான்.



            இரவில் மேட்டுப்பாளையம் - குந்தா வரும்வழியில் யானைகள் வழிமறிக்கும் தினமும் இது நடக்கும் ,பிறகு சில நிமிடங்கள் கழித்து காட்டுக்குள் சென்றபிறகுதான் பேருந்து புறப்படும் .

             அவ்வப்போது Glenmorgan  ,குந்தா  என சென்று சுற்றிபார்க்க சென்றுவிடுவோம் . எனக்கு வேலை நேரம் முடிந்தால் ரூம் ல் ஓய்வு எடுப்பது பிடிக்காது பல இடங்களை பார்க்கவேண்டும் , சினிமா என்று செல்லவிரும்புவேன்.  வேட்டையாடு விளையாடு , உயிர் ,ஜில்லுனு ஒரு காதல்,திமிரு  என்று எல்லா படங்களையும் பார்த்துவிடுவோம்
வின்ச்ல் பயணம் அவ்வப்போது.




,பலாமரங்களில் குரங்குகள் வந்து சாப்பிடும் அவற்றை விரட்ட பெரும்  போராட்டம் நடத்தி மீதம் உள்ளவை மட்டுமே எங்களுக்கு.ஒவ்வொரு நாளும் எல்லாமே புது அனுபவம் . அங்குள்ள வீடுகளில் பெரும்பாலும் பழ மரங்கள் வைத்திருப்பார்கள் நாம் அவ்வழியே செல்லும் போது எந்த ஊர் என்று நலம் விசாரித்து  பலாப்பழம் போன்றவற்றை தருவார்கள் ஒவ்வொரு முறையும் . கல்லூரி மாணவர்கள் Industrial Visit வரும்போது யார் பணியில் இருப்பது என்ற போட்டி வரும் அப்போது செந்தில் தான் பெரும்பாலும் ஜெயிப்பான் .

             நண்பன் வேலாயுதம் என்னுடன் சினிமாவிற்கு Company கொடுப்பவன் அவனது காதலியின் தம்பி அங்கு படித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது அவனையும் சினிமாவுக்கு அழைத்து சென்றுவிட்டு  FingerPost வந்தபோது அங்கு ஒருவன் குடி போதையில் அவனிடம் வம்பிழுக்க, வேலாயுதம் அவனை அங்கேயே அவனது வயிற்றில் ஓங்கி உதைக்க அவன் சுருண்டு விழுந்தான் காதலியின் தம்பி ஆயிற்றே சும்மாவா .அடி வாங்கியவனோ  உன்னை அடிக்க ஆள் கூட்டி வருகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல அவனோ பயத்தில் தலைமை அலுவலகம் வந்து என்னிடம் புலம்ப ,நான் இதற்க்கு முன் தலைமை அலுவலக பணி செய்துவந்ததால் எல்லோரிடமும் நல்ல அறிமுகம் .

      ஊட்டி வந்துதான் பிற இடங்களில் பணி புரிய செல்லவேண்டும் அப்போது கொஞ்சம் free யாக இருக்கலாம் . அவனை  Glenmorgan  க்கு பணிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன் .

                அவன் அங்கு சென்றதும் என்னுடன் சுற்ற  ஆள் இல்லை . ஒரு வாரம் கழித்து அங்கு சென்று அவனை பார்க்க சென்றால் அவன் என்னிடம் அழத்தொடங்கினான் விடுடா இதெல்லாம் ஒரு விசயமா , இனியாவது கொஞ்சம் பொறுமையாக நட என்று சொல்லி விட்டு அங்கு குளிர் அதிகம் எனவே அன்றே சுற்றிபார்த்துவிட்டு மறுநாள் கெத்தை Power ஹவுஸ்  வந்தேன் . .

                   அப்போது தான் ஆப்பு வந்தது திருச்சிக்கு மாறுதல் என்று . இரண்டு மாதங்களுக்கு முன் எல்லோரும் மாறுதல் கேட்டு விண்ணப்பிக்க நான் மட்டும் விண்ணப்பிக்கவில்லை , நண்பன் கமலதாசன் டேய் மச்சா இதெல்லாம் கண்துடைப்புடா  மாறுதல் வராதுடா ,அப்படி வந்தால் இன்னும் ஒரு வருடம் ஆகும் , கையெழுத்து மட்டும் போடு நான் Head office ல் கொடுத்துவிடுகிறேன் என்றது நினைவுக்கு வந்தது
Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails